பாப்லகோனியா
பாப்லகோனியா | |
---|---|
அனத்தோலியாவின் பண்டையப் பகுதி | |
அமைவிடம் | வட மத்திய அனத்தோலியா, துருக்கி |
முன்னர் இருந்த மாநிலம் | 5ஆம் நூற்றாண்டு - 183 கி.மு |
வரலாற்றுத் தலைநகரங்கள் | காங்ரா (நவீன சங்க்ரி, துருக்கி) |
அகாமனிசியப் பேரரசு | கப்படோசியா நகரம் |
உரோம மாகாணம் | பான்டசு |
பாப்லகோனியா (Paphlagonia) என்பது வட மத்திய அனத்தோலியாவின் கருங்கடல் கடற்கரையில் உள்ள ஒரு பழங்காலப் நிலபரப்பாகும். இது மேற்கில் பித்தினியாவிற்கும் கிழக்கே பான்டசுக்கும் இடையில் அமைந்துள்ளது. இசுட்ராபோவின் கூற்றுப்படி, பார்த்தீனியசு நதி இப்பகுதியின் மேற்கு எல்லையை உருவாக்கியது. மேலும் இது கிழக்கில் ஆலிசு நதியால் சூழப்பட்டுள்ளது. புராண பினியசின் மகனான பாப்லகோனின் பெயரால் இதற்கு பாப்லாகோனியா என்று பெயரிடப்பட்டது. [1]
வரலாறு
[தொகு]இட்டைடியர்களின் காலத்தில், பாப்லகோனியாவில் காசிகிய மக்கள் வசித்து வந்தனர். பாப்லகோனியர்களுடன் அவர்களின் சரியான இன உறவு நிச்சயமற்றது. அவர்கள் இந்திய-ஐரோப்பிய மொழிகளைப் பேசும் அண்டை நாட்டு (கப்படோசியா நகரம்) மக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம்.
பாப்லகோனியா மிகப் பழமையான நாடுகளில் ஒன்றான அனதோலியாவின் ஒரு பகுதியாகும். சுமார் 1200 கிமு அல்லது கிமு 1250 கிமு 1250 ஆம் ஆண்டில், நடந்ததாகக் கூறப்படும் திராயன் போரில் அவர்களது அரசன் பைலமெனெசும் அவரது மகன் அர்பாலியனும் இறந்தனர். ஓமர் மற்றும் லிவி ஆகியோரின் கூற்றுப்படி, கிரேக்க மொழியில் எனட்டோய் என்று அழைக்கப்படும் பாப்லாகோனியர்களின் குழு ஒரு புரட்சியின் போது அவர்களின் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். திரையன் இளவரசர் ஆன்டெனரின் தலைமையில் சென்ற தோற்கடிக்கப்பட்ட திரையன்களின் குழுவுடன், அவர்கள் அட்ரியாடிக் கடற்கரையின் வடக்கு முனைக்கு குடிபெயர்ந்தனர். பின்னர் அவர்கள் குடியேறிய பகுதிக்கு வெனிசியா என்ற பெயரைக் கொடுத்து பூர்வீக யூகானியுடன் இணைந்தனர்.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- பாரசீக அரசர்களான முதலாம் அர்தசெராக்சஸ் மற்றும் இரண்டாம் டேரியஸ் ஆகியோரின் தூதரான ஆர்டோக்சரேசு
குறிப்பு
[தொகு]- ↑ Eustath. ad Horn. II. ii. 851, ad Dion. Per. 787; Steph. B. t.v.; Const. Porph. de Them. i. 7.