பல்வஞ்சா
பல்வஞ்சா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 17°22′N 80°25′E / 17.36°N 80.42°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | பத்ராத்ரி கொத்தகூடம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பல்வஞ்சா நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 26.38 km2 (10.19 sq mi) |
ஏற்றம் | 107 m (351 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 80,199 |
• அடர்த்தி | 3,000/km2 (7,900/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 507115 |
இடக் குறியீடு | 08744 |
வாகனப் பதிவு | TS28 |
இணையதளம் | palvancha |
பல்வஞ்சா (Palwancha), தென்னிந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் கிழக்கில் அமைந்த பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள பல்வஞ்சா மண்டலின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[2]இது மாவட்டத் தலைமையிடமான கொத்தகூடத்திற்கு வடகிழக்கே 11.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ஐதராபாத்திற்கு கிழகே 293.8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பல்வஞ்சா நகரத்திற்கு அருகில் கின்னெராசனி வனவிலங்கு சரணாலயம் மற்றும் கின்னெராசனி அணை உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 39 வார்டுகளும், 20,782 வீடுகளும் கொண்ட பல்வஞ்சா நகரத்தின் மக்கள் தொகை 80,199 ஆகும். அதில் ஆண்கள் 39,923 மற்றும் பெண்கள் 40,276 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1009 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.23% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.70% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 88.07%, இசுலாமியர் 10.33%, கிறித்தவர்கள் 1.45% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "District Census Handbook - Khammam" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. pp. 14, 40. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
- ↑ "Bhadradri District" (PDF). Archived from the original (PDF) on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 18 October 2016.
- ↑ Palwancha Population Census 2011
வெளி இணைப்புகள்
[தொகு]- Palvancha Municipality Property Tax Payment பரணிடப்பட்டது 2016-03-01 at the வந்தவழி இயந்திரம்