உள்ளடக்கத்துக்குச் செல்

பயன்பாட்டு உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்பாட்டு உளவியல் அல்லது பிரயோக உளவியல் (Applied psychology) என்பது மனிதன், விலங்கு என்பவற்றின் நடத்தை, அனுபவம் ஆகியவற்றின் நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க உளவியல் முறைகளையும் அறிவியல் உளவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் பயன்பாடு ஆகும்.[1] கல்வி, நிறுவன உளவியல், வணிக மேலாண்மை, சட்டம், நலம், தயாரிப்பு வடிவமைப்பு, பணிச்சூழலியல், நடத்தை உளவியல், உந்துதலின் உளவியல், உளநிலைப் பகுப்பாய்வு, நரம்பியல், மனநோய் சிகிச்சை அறிவியல், மன நலம் ஆகியவை உளவியல் கொள்கைகளின் பயன்பாட்டால் தாக்கத்திற்குட்பட்ட சில பகுதிகளாகவும் அறிவியல் கண்டுபிடிப்புகளாகவும் உள்ளன. பயன்பாட்டு உளவியலின் சில பகுதிகளாக ஆலோசனை உளவியல், தொழில்துறை மற்றும் நிறுவன உளவியல், பொறியியல் உளவியல், தொழில்சார் சுகாதார உளவியல், சட்ட உளவியல், பாடசாலை உளவியல், விளையாட்டு உளவியல், சமுதாய உளவியல், நரம்புசார் உளவியல், மருத்துவ உளவியல் மற்றும் மருத்துவச் சிகிச்சை உளவியல், பரிணாம உளவியல், மனித காரணிகள், தடயவியல் உளவியல், போக்குவரத்து உளவியல் போன்றன காணப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "What Is Applied Psychology?".

ஆதாரங்கள்

[தொகு]

நூல் பட்டியல்

[தொகு]
  • Applied Psychology in Lecturing, John M. Prentice, 1946

வெளி இணைப்புகள்

[தொகு]