பனிக்குருடு
பனிக்குருடு (snow blindness) என்பது பனியடர்ந்த பகுதிகளில் பனியால் எதிரொளிக்கப்படும் புற ஊதாக்கதிர்களை (UV rays) வெறும் கண்களால் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சினையைக் குறிக்கும். பொதுவாக இந் நோயின் அறிகுறிகள் சில மணி நேரங்கள் கழித்து தான் ஆரம்பிக்கும். அத்தோடு இரண்டு மூன்று நாட்களுக்குள் தானாகவே இந்த அறிகுறிகள் மறைந்து விடும்.
அறிகுறிகள்
[தொகு]கண்வலி, எரிச்சல், கண்ணீர் வடிதல், வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கூசுதல் (photophobia) முதலியன.
நோயறிதல்
[தொகு]ஒளிரும் சாயத்தைப் பயன்படுத்தி விழிவெளித்திரையில் உள்ள புண்களைக் கண்டறியலாம்.
மருத்துவம்
[தொகு]நோயரை மேலும் வெளிச்சத்திற்கு உட்படுத்தக் கூடாது. இரண்டு மூன்று நாட்களுக்கு குளிர் கண்ணாடிகளை அணிந்து கொள்ள வேண்டும். வலி நிவாரணி மருந்துகளைத் தரலாம். ஆரம்பத்தில் உணர்வு மரக்கச் செய்யும் மருந்துகளைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றின் நீடித்த பயன்பாடு புண் ஆறுவதைத் தாமதப்படுத்தும்.
வரும்முன் காத்தல்
[தொகு]- குளிர் கண்ணாடி அணிந்து கொள்தல்
- கண்ணுக்குக் கீழ் உள்ள தோல் பகுதியில் கரியைத் தடவிக் கொள்வதன் மூலமும் மேற்படி எதிரொளிப்பைத் தடுக்கலாம்.