உள்ளடக்கத்துக்குச் செல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்
Menteri Besar of Negeri Sembilan
Menteri Besar Negeri Sembilan
தற்போது
அமினுடின் அருண்
(Aminuddin Harun)

12 மே 2018 முதல்
நெகிரி செம்பிலான் மாநில அரசு
உறுப்பினர்நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு
அறிக்கைகள் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம்
வாழுமிடம்Jalan Taman Bunga, 70100 Seremban, Negeri Sembilan
அலுவலகம்Tingkat 5B, Wisma Negeri, Negeri Sembilan, 70502 Seremban, Negeri Sembilan
நியமிப்பவர்துவாங்கு முகிரிஸ்
யாம் துவான் பெசார்
பதவிக் காலம்5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது
முதலாவதாக பதவியேற்றவர்அப்துல் மாலிக் யூசோப்
(Abdul Malek Yusuf)
உருவாக்கம்1 பெப்ரவரி 1948; 76 ஆண்டுகள் முன்னர் (1948-02-01)
இணையதளம்www.ns.gov.my

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் (Menteri Besar of Negeri Sembilan) அல்லது நெகிரி செம்பிலான் முதல்வர் (First Minister of Negeri Sembilan) என்பது மலேசிய மாநிலமான நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆகும். அத்துடன் அவர் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தின் (Negeri Sembilan State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.

தற்போது நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் அமினுடின் அருண். இவர் 12 மே 2018 முதல் பதவி வகித்து வருகிறார். இவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 11-ஆவது மந்திரி பெசார் ஆவார்.

நியமனம்

[தொகு]

மாநில அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நெகிரி செம்பிலான் யாம் துவான் பெசார், முதலில் மாநிலத்தின் மந்திரி பெசாரை மாநில ஆட்சிக்குழு குழுவின் தலைவராக நியமிப்பார். அந்த வகையில் நியமிக்கப்படும் ஒரு மந்திரி பெசார், அப்போதைய மாநில சட்டமன்ற அமர்வில், அவர் ப்ப்ர் உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

தகுதி

[தொகு]

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இசுலாம் மதத்தைச் சார்ந்தவராகவும்; மலாய் இனத்தைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். அவரின் குடியுரிமை, பதிவு மூலம் பெற்ற ஒரு மலேசியக் குடிமகனாக இருக்கக்கூடாது. மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 10 அல்லது நான்கிற்கும் குறையாத உறுப்பினர்களை மாநில ஆட்சிக்குழுவில் யாம் துவான் பெசார் நியமிப்பார். அந்த நியமனத்திற்கு யாம் துவான் பெசாருக்கு, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் உண்டாங் ஆட்சிமுறை பேரவையினர் உதவியாக இருப்பார்கள்.

ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் யாம் துவான் பெசார் முன்னிலையில் பதவி உறுதிமொழி; பற்று உறுதிமொழி மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழி எடுக்கவேண்டும். மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சிக்குழுவினர் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன் அவர்கள் வருமானம் தரும் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது; அல்லது கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தும் எந்த ஒரு வணிகம் அல்லது தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு

[தொகு]

மாநில அரசாங்கம் தனது மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால்; அல்லது மாநிலச் சட்டமன்றம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறைவேற்றினால்; மந்திரி பெசார் உடனடியாகப் பதவிதுறப்பு செய்ய வேண்டும். மாற்று மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுப்பது யாம் துவான் பெசார் பொறுப்பு ஆகும். யாம் துவான் பெசார் அனுமதிக்கும் காலம் வரையில்; மந்திரி பெசார் பதவி வகிக்காத மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் பதவியில் இருப்பார்.

ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த மந்திரி பெசார் தன் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து; அல்லது ஒரு மந்திரி பெசாரின் மரணத்தைத் தொடர்ந்து; ஆளும் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபரை புதிய மந்திரி பெசாராக யாம் துவான் பெசார், உண்டாங் ஆட்சிமுறை பேரவையினர் ஆலோசனையின் பேரில் நியமிப்பார்.

அதிகாரங்கள்

[தொகு]

ஒரு மந்திரி பெசாரின் அதிகாரம் பல வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு மந்திரி பெசார் அவரின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அல்லது அவருடைய அரசாங்கம் சட்ட மன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றால்; புதிய ஒரு மாநிலத் தேர்தலுக்கு மந்திரி பெசார் பரிந்துரை செய்ய வேண்டும்; அல்லது அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது சுல்தானால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

வழங்கல் மசோதா (Supply Bill) அல்லது முக்கியமான கொள்கை தொடர்பான சட்டத்தை ஒரு மந்திரி பெசாரால் நிறைவேற்ற முடியாமல் போனால், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு போன்று அரசாங்கத்தில் இருந்து அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது அவர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும்.

தற்காலிக மந்திரி பெசார்

[தொகு]

மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில் சுல்தானால் கலைக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்தின் தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்படலாம். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து பொதுத் தேர்தலை 60 நாட்கள் வரை தாமதப்படுத்த மாநில அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது.

மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். வழக்கமாக, ஒரு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கும் அடுத்த மாநிலச் சட்டமன்றம் கூட்டப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், மந்திரி பெசார் மற்றும் அவரின் நிர்வாகக் குழுவினரும் தான் காபந்து அரசாங்க பதவியில் (Caretaker Government) இருப்பார்கள்.

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பட்டியல்

[தொகு]

1948 முதல் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்திரி பெசார் பட்டியல் பின்வருமாறு:[1]

அரசியல் கட்சிகள்:
      அம்னோ       கூட்டணி /       தேசிய முன்னணி       பாக்காத்தான் அரப்பான்


எண். தோற்றம் பெயர்
தொகுதி
(பிறப்பு–இறப்பு)
பதவி காலம் கட்சி[a] தேர்தல் கூட்டம்
பதவியேற்பு பதவி விலகல் பதவி காலம்
1 அப்துல் மாலிக் யூசோப்
(Abdul Malek Yusuf)
(1899–1977)
1 பெப்பிரவரி
1948
11 ஆகஸ்டு
1950
2 ஆண்டுகள், 191 நாட்கள் அம்னோ
2 முகமது சாலே சுலைமான்
(Mohamad Salleh Sulaiman)
11 ஆகஸ்டு
1950
1 சனவரி
1951
0 ஆண்டுகள், 143 நாட்கள் அம்னோ
3 அப்துல் மாலிக் யூசோப் (Abdul Malek Yusuf)
(1899–1977)
1 ஆகஸ்டு
1951
15 ஏப்ரல்
1952
0 ஆண்டுகள், 258 நாட்கள் அம்னோ
4 அப்துல் அசீஸ் அப்துல் மஜீது)
(Abdul Aziz Abdul Majid)
(1908–1975)
15 ஏப்ரல்
1952
1 அக்டோபர்
1952
0 ஆண்டுகள், 169 நாட்கள் அம்னோ
5 அப்துல் மாலிக் யூசோப்
(Abdul Malek Yusuf)
(1899–1977)
1 அக்டோபர்
1952
1 அக்டோபர்
1953
1 ஆண்டு, 0 நாட்கள் அம்னோ
6 சம்சுடின் நயிம்
(Shamsuddin Naim)
1 அக்டோபர்
1953
31 சனவரி
1959
5 ஆண்டுகள், 122 நாட்கள் அம்னோ
7 முகமது சரிப் அப்துல் சமாட்
(Mohamad Shariff Abdul Samad)
15 ஏப்ரல்
1959
23 சூன்
1959
0 ஆண்டுகள், 69 நாட்கள் தேசிய முன்னணி
(|அம்னோ)
8 முகமது சாயிட் முகமது
(Mohamed Said Muhammad)
(இறப்பு: 1996)
23 சூன்
1959
10 மே
1969
9 ஆண்டுகள், 321 நாட்கள் தேசிய முன்னணி
(அம்னோ)
- -
- -
9 மன்சூர் ஒசுமான்
(Mansor Othman)
(1923–1999)
10 மே
1969
12 சூலை
1978
9 ஆண்டுகள், 63 நாட்கள் தேசிய முன்னணி
(அம்னோ)
- -
பாரிசான்
(அம்னோ)
- -
10 ராயிஸ் யாத்திம்
(Rais Yatim)
(பிறப்பு: 1942)
12 சூலை
1978
29 ஏப்ரல்
1982
3 ஆண்டுகள், 291 நாட்கள் பாரிசான்
(அம்னோ)
- -
11 முகமட் இசா அப்த்ல் சமாட்
(Mohd Isa Abdul Samad)
(பிறப்பு: 1950)
29 ஏப்ரல்
1982
24 மார்ச்
2004
21 ஆண்டுகள், 330 நாட்கள் பாரிசான்
(அம்னோ)
- -
- -
- -
- -
- -
12 முகமது அசான்
(Mohamad Hasan)
(பிறப்பு: 1956)
25 மார்ச்
2004
11 மே
2018
14 ஆண்டுகள், 47 நாட்கள் பாரிசான்
(அம்னோ)
- -
- -
- -
13 அமினுடின் அருண்
(Aminuddin Harun)(பிறப்பு: 1968)
11 மே
2018
Incumbent 6 ஆண்டுகள், 240 நாட்கள் பாக்காத்தான்
(பி.கே.ஆர்)
- -
- -
  1. இந்த நெடுவரிசையில் மந்திரி பெசாரின் கட்சிக்கு மட்டுமே பெயர் உள்ளது. அவர் தலைமையிலான மாநில அரசு பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் கூட்டணியாக இருக்கலாம்.

வாழும் முன்னாள் மந்திரி பெசார்கள்

[தொகு]
பெயர் பதவி காலம் பிறந்த தேதி
ராயிஸ் யாத்திம் 1978–1982 16 ஏப்ரல் 1942 (age 82)
முகமட் இசா அப்த்ல் சமாட் 1982–2004 14 நவம்பர் 1950 (age 74)
முகமது அசான் 2004–2018 2 மே 1956 (age 68)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Negeri Sembilan". WorldStatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 16 June 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]