உள்ளடக்கத்துக்குச் செல்

நீலத்தலைக் கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலத்தலைக் கிளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
P. menstruus
இருசொற் பெயரீடு
Pionus menstruus
(லின்னேயசு, 1766)

நீலத்தலைக் கிளி தென் அமெரிக்காவில் காணப்படும் ஒருவகைக் கிளி. இதன் உடல் பச்சை நிறமாகவும், தலை நீலநிறமாகவும் இருக்கும். இதனுடைய அடிவால் சிவப்பாக இருக்கும். இக்கிளிகள் அமேசான் படுகையில் காணப்படுகின்றன.

இப்பறவைகள் காடுகளிலும் நாட்டுப்புறங்களிலும் காணப்படும். இக்கிளி மூன்றிலிருந்து ஐந்து முட்டைகள் வரை பொதுவாக மரப்பொந்துகளில் இடும்.

பொதுவாக பழங்களையும் கொட்டைகளையும் இவை தின்னும். எனினும் சில சமயங்களில் தானியங்களையும் உண்ணும். இவை செல்லப் பறவைகளாகவும் வளர்க்கப் படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலத்தலைக்_கிளி&oldid=1552810" இலிருந்து மீள்விக்கப்பட்டது