நிலச் சருகுமான்
Appearance
Moschiola | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நிலச் சருகுமான்
|
நிலச் சருகுமான் என்பது சருகுமான் குடும்பத்தைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பிகளான விலங்குப் பேரினமொன்றாகும். இவை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் சிலவேளைகளில் நேபாளத்திலும் காணப்படும். ஆசியாவிலுள்ள ஏனைய சருகுமான் பேரினத்தின் விலங்குகளைப் போலன்றி, இப்பேரினத்தின் விலங்கினங்கள் தம் உடலில் மங்கிய நிறமுள்ள புள்ளிகள் அல்லது கோடுகளைக் கொண்டிருக்கும்.[1]
நிலச் சருகுமான் பேரினத்தின் விலங்குகள் தனியொரு இனத்தினவாகவே பன்னெடுங்காலமாகக் கருதப்பட்டன. எனினும், 2005 ஆம் ஆண்டு இவ்விலங்குகள் மூன்று வேறுபட்ட விலங்கினங்களைச் சேர்ந்தவை என வரையறுக்கப்பட்டது. அவை:[2]
- இந்திய புள்ளிச் சருகுமான் (Moschiola indica)
- வெண் புள்ளிச் சருகுமான் (Moschiola meminna)
- மஞ்சட் கோட்டுச் சருகுமான் (Moschiola kathygre)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nowak, R. M. (eds) (1999). Walker's Mammals of the World. 6th edition. Johns Hopkins University Press.
- ↑ Groves, C. & Meijaard, E. (2005) Intraspecific variation in Moschiola, the Indian Chevrotain. The Raffles Bulletin of Zoology. Supplement 12:413-421 PDF பரணிடப்பட்டது 2008-07-27 at the வந்தவழி இயந்திரம்