உள்ளடக்கத்துக்குச் செல்

நிறம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்வேறு நிறங்கள் தீட்ட நிறக்குச்சிகள் (நிறப் பென்சில்கள்)
வானவில்.

நிறம் (Colour) அல்லது வண்ணம் என்பது சிவப்பு, மஞ்சள், ஊதா, அல்லது நீலம் போன்ற வண்ண வகைகளால் விவரிக்கப்படும் மனிதனின் காட்சிப் புலனுணர்வுகளின் சிறப்பம்சமாகும். ஒளிநிறமாலையில் உள்ள மின்காந்தக் கதிர்வீச்சால் மனிதக் கண்களில் உள்ள கூம்பு செல்கள் தூண்டப்படுவதால் நிறங்கள் உணரப்படுகின்றன. நிறங்களின் பிரிவுகள் மற்றும் நிறங்களின் குறிப்பிட்ட உட் கூறுகள் போன்றவை பொருட்களின் மீது பட்டு அவை எதிரொளிக்கும் ஒளியின் அலைநீளத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. பொருட்களின் இயற்பியல் பண்புகளான ஒளி உறிஞ்சுதல், உமிழ்வு நிறமாலை போன்ற பண்புகள் இந்த எதிரொளிப்பை நிர்வகிக்கின்றன. நிறங்களின் இடைவெளியை வரையறுப்பதன் மூலம் ஆயத்தொலைவுகளால் எண்ணளவில் நிறங்களை அடையாளம் காண முடியும். உதாரணமாக, சிவப்பு பச்சை நீல நிறங்களின் வண்ண இடைவெளியானது, மனிதக் கண்களின் திரிபுராமைக்கு ஏற்றவாறு அவற்றிலுள்ள மூன்று கூம்பு செல் வகைகளும் மூன்று ஒளிப்பட்டைகளுக்கு எவ்வாறு தூண்டல்களை விளைவிக்கின்றன என்பதனை பிரதிபலிக்கிறது. நீண்ட அலைநீளம் 564-580 நானோ மீட்டர் (சிவப்பு) ; நடுத்தர அலைநீளம், 534-545 நானோ மீட்டர் (பச்சை); 420-440 நானோ மீட்டர் (நீலம்) குறுகிய-அலைநீளம் கொண்ட ஒளி போன்றவை அலை நீளவகைபாடுகளாகும் [1][2]

பிற வண்ண இடைவெளிகளில் மூவண்ண பரிமானங்களுக்கும் மேற்பட்ட மயில்நீலம், மெசந்தா, மஞ்சள், கருப்பு போன்ற நிற மாதிரிகளும் உள்ளன. மற்ற உயிரினக் கண்களின் ஒளியேற்பும் நம்முடைய கண்களின் ஒளியேற்பில் இருந்து வேறுபடுகின்றன. அதனால் வேறுபட்ட நிற வேறுபாடுகளும் காட்சிப் புலனுணர்வும் அவ்வுயிரினங்களில் மாறுபடும். உதாரணமாக தேனீக்கள் போன்ற சில உயிரினங்கள் புற ஊதா கதிர்வீச்சை உணர்கின்றன. புற ஊதா நிறத்தின் அலைநீளம் 10 நானோமீட்டரிலிருந்து 400 நானோமீட்டர் வரையாகும். இது கட்புலனாகும் ஒளியைவிட அலைநீளம் குறைவாகவும் ஆனால் எக்சு-கதிர்களைக் காட்டிலும் நீண்டும் இருக்கும். ஆனால் சிவப்பு நிறத்தை இவற்றால் உணர முடியாது. பேபிலியோ வகை பட்டாம்பூச்சிகள் ஆறு வகையான ஒளியேற்பிகளைக் கொண்டிருக்கின்றன, இதனால் இவை ஐவண்ண பார்வைத் திறனைக் கொண்டிருக்கின்றன[3]. இவற்றைத் தவிர சில உயிரினங்கள் கூட்டு வண்ணப்பார்வைத் திறனையும் கொண்டுள்ளன. இவற்றில் 12 வகையான ஒளியேற்பிகள் காணப்படுகின்றன[4].

வண்ணங்களின் விஞ்ஞானம் சில நேரங்களில் நிறவியல், நிற அளவியல், அல்லது வெறுமனே வண்ண அறிவியல் என்று அழைக்கப்படுகிறது. மனித கண் மற்றும் மூளை எவ்வாறு நிறத்தை உணர்கிறது, பொருள்களில் வண்ணத்தின் தோற்றம், கலையில் வண்னத்தின் கோட்பாடு மற்றும் காணக்கூடிய வரம்பில் மின்காந்தவியல் கதிர்வீச்சின் இயற்பியல் போன்றவற்றைக் குறிக்கிறது. மேலும் நிறம் என்பது, ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது எதிரொளிக்கப்படும் ஒளியின் சேர்க்கையினால் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு காட்சி விளைவு ஆகும்.

புவியைப் பொறுத்தவரை சூரியனே ஒளியின் முதன்மையான மூலம் ஆகும். சூரிய ஒளி வெள்ளை நிறமாகக் காணப்பட்டாலும், அது ஏழு நிறங்களின் கலவை ஆகும். இயற்கையில் வானவில் தோன்றும் போது இந்த ஏழு நிறங்களும் பிரிவடைந்து தோன்றுவதைக் காணமுடியும். பட்டகத்தின் ஊடாக வெள்ளொளியைச் செலுத்தி இதே விளைவைப் பெறமுடியும்.

நிறத்தின் இயற்பில்

[தொகு]

கண்ணுக்குப் புலப்படும் நிறமாலையிலுள்ள நிறங்கள்.

நிறம் அலை நீள இடைவெளி அதிர்வெண் இடைவெளி
சிவப்பு ~ 625-740 நானோமீட்டர் ~ 480-405 டெராயெர்ட்சு
செம்மஞ்சள் ~ 590-625 நானோமீட்டர் ~ 510-480 டெராயெர்ட்சு
மஞ்சள் ~ 565-590 நானோமீட்டர் ~ 530-510 டெராயெர்ட்சு
பச்சை ~ 500-565 நானோமீட்டர் ~ 600-530 டெராயெர்ட்சு
இளநீலம் ~ 485-500 நானோமீட்டர் ~ 620-600 டெராயெர்ட்சு
நீலம் ~ 440-485 நானோமீட்டர் ~ 680-620 டெராயெர்ட்சு
ஊதா ~ 380-440 நானோமீட்டர் ~ 790-680 டெராயெர்ட்சு

தொடர் ஒளியியல் நிறமாலை

1.5.காமா திருத்தத்திற்காக வடிவமைக்கப்பட்டவை

கணிப்பொறி நிறமாலை

கதிரவனிலிருந்து புவியை நோக்கி வரும் கதிர் வீச்சின் ஒரு சிறு பகுதி மட்டுமே பூமியின் மேற்பரப்பை அடைய முடிகின்றது. அவற்றுள்ளும் ஒரு சிறிய பகுதி மட்டுமே கண்ணிற்குத் தெரியக்கூடிய ஒளியாகும். இவ்வாறு கண்ணுக்குப் புலப்படக்கூடிய கதிர்கள் 400 தொடக்கம் 700 நானோ மீட்டர் அலை நீள வீச்சினுள் அடங்கியவை. இதனுள் அடங்கும் வெவ்வேறு அலை நீளம் கொண்ட ஒளிக் கதிர்கள் கண்ணில் வெவ்வேறு நிறப் புலனுணர்வுகளை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தன. இந்த வீச்சின் ஒரு முனையில் சிவப்பு நிற ஒளியும், மறு முனையின் ஊதா நிறமும் உள்ளன[5].

பெரும்பாலான ஒளி ஆதாரங்கள் பல்வேறு அலைநீளங்களில் வெளிச்சத்தை வெளிப்படுத்துகின்றன; ஒரு மூலத்தின் நிறமாலை என்பது ஒவ்வொரு அலைநீளத்திற்கும் அதன் செறிவை வழங்குவதாகும். கொடுக்கப்பட்ட திசையில் இருந்து கண்களை அடையும் நிறமாலையின் நிறமாற்றம் அந்த திசையின் வண்ண உணர்வைத் தீர்மானிக்கிறது. என்றாலும் வண்ண உணர்வைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் நிறங்களின் சேர்க்கைக்கு சாத்தியங்கள் உள்ளன. உண்மையில் அதே நிற உணர்ச்சியை உருவாக்கும் ஒரு நிறமாலையை நிறமென்று வரையறுக்கலாம், ஆனால் இத்தகைய பகுப்புகள் பல்வேறு வகைகளில் பரவலாக மாறுபடும். மேலும் அதே வகைகளில் உள்ளவர்களுக்கிடையேயும் குறைந்த அளவிற்கு வேறுபடும்.

நிறப் புலனுணர்வு

[தொகு]

I பொருட்கள் வெளிவிடுகின்ற அல்லது தெறிக்கின்ற ஒளிக் கதிர்கள் கண்ணுக்குள் சென்று அங்குள்ள விழித் திரையில் விழுகின்றன. இத் திரை கட்புலன் உணர்வுக்குரிய நரம்பு முனைகளைக் கொண்டுள்ளது. சுமார் --- மில்லியன்கள் எனக் கணக்கிடப் பட்டுள்ள இந் நரம்பு முனைகள் இரண்டு வகைப்படுகின்றன. இவை கூம்புகள் என்றும் கோல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றுள் கூம்புகளே நிறப் புலனுணர்வுக்கு அடிப்படையானவை. பல்வேறு நிறங்களையும் வேறுபடுத்தி உணரும் வகையில் கூம்புகள் மூன்று வகைகளாக அமைந்துள்ளன. ஒரு வகை சிவப்பு நிறத்துக்குரிய ஒளியை உணரவல்லது. ஏனைய இரண்டு வகைகளும் பச்சை, நீலம் ஆகிய நிறங்களை உணரக்கூடியன. இதனால் இம் மூன்று வகைக் கூம்புகளுக்கும் சிவப்புக் கூம்பு, பச்சைக் கூம்பு, நீலக் கூம்பு எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இவ்வாறு மனிதக் கண்களால் உணரப்படுகின்ற அடிப்படையான மூன்று நிறங்களே முதன்மை நிறங்கள் எனப்படுகின்றன.

பொருளின் நிறம்

[தொகு]

ஒரு பொருளின் நிறம் அப்பொருள் இருக்கும் சூழலை பொருத்தும் நமது கண் உள் வாங்கும் ஒளியின் விகிதாச்சாரத்தை முன்னிட்டும் அமையும்.சில நேரங்களில் ஒரே நிறங்களும் வெவ்வேறு நிறங்களாக காட்சிப்பிழையாக தோன்றும்.

நிறப்பார்வையின் கோட்பாடுகள்

[தொகு]
ச்

அரிஸ்டாட்டில் மற்றும் பிற பண்டைய விஞ்ஞானிகள் ஏற்கனவே ஒளி மற்றும் நிற பார்வை பற்றிய இயல்புகளை எழுதியிருந்த போதிலும், அதைஉணர்வின் ஆதாரமாக வண்ண ஒளி பிறக்கிறது என்றே நம்பினர். சர் ஐசக் நியூட்டன் , 1672ல் கோதே நிறங்கள் பற்றிய அவரது விரிவான கோட்பாட்டை பதிப்பித்தார்.அதுவே நிறங்கள் பற்றிய அடிப்படை அறிவியலுக்கு வழிவகுத்தது.

நியூட்டன் கருத்தின்படி, வெள்ளை ஒளி, அனைத்து வண்ணங்கள் உள்ள கலவை ஆகும். அது ஒரு முப்பட்டை கண்ணாடி வழியாக கடந்து செல்லும் போது நிறங்கள் வெவ்வேறு கோணங்களில் கலைந்து நிறமாலை உறுவாகிறது,

ஆகவே, நிறங்கள் வெள்ளை ஒளியில் மட்டுமே உள்ளன என்பதை அவர் நிரூபித்தார்.

முதன்மை நிறங்கள்

[தொகு]
முதன்மை நிறங்களும் அவற்றின் விகிதாச்சாரத்தில் உருவாகும் வேறு நிறங்களும்
முதன்மை நிறங்களும் அவற்றின் விகிதாச்சாரத்தில் உருவாகும் வேறு நிறங்களும்

சிவப்பு, பச்சை , நீலம் ஆகிய மூன்று நிறங்களும் முதன்மை நிறங்கள் எனப்படுகின்றன. இம் மூன்று நிறங்களையும் உரிய விகிதங்களில் கலப்பதன் மூலம் வேண்டிய நிறங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நிறக்குருடு

[தொகு]

நிறக்குருடு என்பது மனிதர்களில் சிலரால் பெரும்பாலானவர்களைப்போல சில நிறங்களுக்கிடையேயான வேறுபாடுகளை உணர இயலாமையைக் குறிக்கும் சொல்லாகும். இது பெரும்பாலும் மரபணு அடிப்படையில் ஏற்பட்டாலும், சில சூழல்களில், மூளை, நரம்பு, அல்லது விழிகள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறின் விளைவாகவோ சில வேதிப் பொருட்களினாலோ ஏற்படக் கூடும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யான் டால்டன் என்பவர் 1794-ம் ஆண்டு எழுதிய நிறங்களின் பார்த்தல் உணர்வைப் பற்றிய சிறப்பு உண்மைகள்[6] என்ற தலைப்பிட்ட ஒரு அறிவியல் கட்டுரையில் இதுபற்றி எழுதினார். இவரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பெயரால் இந்நோய் டால்டனிசம் என்று நெடுநாள் வழங்கப்பட்டது. எனினும் தற்போது இந்த பெயர் பச்சை நிறத்தை உணர இயலாமையாகிய டியூட்டெரனோபியா என்ற நோயை மட்டும் குறிக்கிறது.

பட்டகமும் ஒளியும்

[தொகு]

ஐன்ஸ்டினுக்கு முந்தய அறிஞர்கள் யாவரும் வெள்ளொளி நிறமற்றது எனவே நம்பிக்கொண்டிருந்தனர்.மேலும் வெள்ளொளி நிறமற்றது பட்டகத்தில் உள்ள ஒளிகளே அவற்றை உருவாக்குகின்றன என்று நம்பினர்[7].ஐன்ஸ்டின் தனது ஒளியின் இரட்டைத்தன்மை கோட்பாட்டை வெளியிட்ட பின் ஹைஜன் ஒளியிணை ஆராய்ந்து , வெள்ளொளி பல நிறங்களையுடைய ஒளிகளின் கூட்டு ஒளி என நிறுபித்தார்.அதன் பின் பட்டகம் ஒளியிணைப்பற்றிய ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவின[8].மழை பெய்யும் போது மழைத்துளி பட்டகமாக செயல்பட்டு வெள்ளொளியில் உள்ள நிறங்களைப் பிரிக்கின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wyszecki, Günther; Stiles, W.S. (1982). Colour Science: Concepts and Methods, Quantitative Data and Formulae (2nd ed.). New York: Wiley Series in Pure and Applied Optics. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-02106-7.
  2. R. W. G. Hunt (2004). The Reproduction of Colour (6th ed.). Chichester UK: Wiley–IS&T Series in Imaging Science and Technology. pp. 11–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-470-02425-9.
  3. Arikawa K (November 2003). "Spectral organization of the eye of a butterfly, Papilio". J. Comp. Physiol. A Neuroethol. Sens. Neural. Behav. Physiol. 189 (11): 791–800. doi:10.1007/s00359-003-0454-7. பப்மெட்:14520495. 
  4. "A retina with at least ten spectral types of photoreceptors in a mantis shrimp". Nature 339 (6220): 137–40. 1989. doi:10.1038/339137a0. Bibcode: 1989Natur.339..137C. http://www.nature.com/nature/journal/v339/n6220/abs/339137a0.html. 
  5. Craig F. Bohren (2006). Fundamentals of Atmospheric Radiation: An Introduction with 400 Problems. Wiley-VCH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-40503-8.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Dalton J, 1798 "Extraordinary facts relating to the vision of colours: with observations" Memoirs of the Literary and Philosophical Society of Manchester 5 28-45
  7. "The Discovery of the Spectrum of Light". பார்க்கப்பட்ட நாள் 19 December 2009.
  8. F. J. Duarte and J. A. Piper (1982). "Dispersion theory of multiple-prism beam expanders for pulsed dye lasers". Opt. Commun. 43: 303–307. doi:10.1016/0030-4018(82)90216-4. Bibcode: 1982OptCo..43..303D. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறம்&oldid=3641340" இலிருந்து மீள்விக்கப்பட்டது