நாவல் நெட்வேர்
நாவல் நெட்வேர் | |
விருத்தியாளர் | நாவல் நிறுவனம் |
---|---|
மூலநிரல் வடிவம் | மூடிய மூலம் |
பிந்தைய நிலையான பதிப்பு | 6.5 SP7 / 9 அக்டோபர், 2007 |
கருனி வகை | Hybrid kernel |
இயல்பிருப்பு இடைமுகம் | கட்டளை இடைமுகம் |
அனுமதி | Proprietary |
தற்போதைய நிலை | தற்போதைய |
வலைத்தளம் | நாவல் |
நெட்வெயார் ஓர் நாவல் நிறுவனத்தினால் விருத்திசெய்யப்பட்ட ஓர் வலையமைப்பு இயங்குதளம் ஆகும்.[1][2][3]
வரலாறு
[தொகு]நெட்வெயார் மிகவும் இலகுவான ஓர் சித்தாந்ததின் அடிப்படையிலேயே விருத்தி செய்யப்பட்டது அதாவது வன்வட்டினைப் (ஹாட்டிஸ்க்) பகிர்வதற்கு மாறாக கோப்புக்களைப் பகிர்தல் என்னும் எண்ணக்கருவுடனேயே ஆரம்பிக்கப்பட்டது. 1983 இல் நெட்வெயாரின் முதலாவது பதிப்பானது வெளிவந்தது. அக்காலத்தில் இதன் போட்டியாளர்கள் எல்லாருமே நேரடியாகப் பகிரப்பட்ட வன்வட்டினைப் பாவிக்ககூடியதாகவே தமது வலையமைப்பு இயங்குதளங்களை வடிவமைத்தனர். இந்தத் தத்துவங்கள் ஒருகாலத்தில் கணினி ஜாம்பவானாக இருந்த ஐபிஎம் நிறுவனத்தால் 1984 பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டமை நாவல் நெட்வேரின் விருத்திக்கு வித்திட்டது.
நாவல் நெட்வேரில் வன்வட்டின் இடமானது டாஸ் இயங்குதளம் போன்று நெட்வெயார் வொல்லியூம் ஆகப் பகிரப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Morrissey, Jane (October 12, 1992). "Novell to roll out two-tier certification program". PC Week (Ziff-Davis) 9 (41): 174. https://link.gale.com/apps/doc/A12759235/GPS?sid=wikipedia.
- ↑ Foster, Ed (February 13, 1995). "Determining NetWare support can take work—or a bad experience". InfoWorld (IDG Publications) 17 (7): 62. https://books.google.com/books?id=tjoEAAAAMBAJ&pg=PA62.
- ↑ Staff writer (June 8, 1993). "Minigrams". Computergram International (GlobalData). https://link.gale.com/apps/doc/A13982139/GPS?sid=wikipedia.