நாடகப்பிரியா
Appearance
நாடகப்பிரியா கருநாடக இசையின் 10 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 10 வது மேளத்திற்கு நடாபரணம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி1 க2 ம1 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம1 க2 ரி1 ஸ |
- நேத்ர என்றழைக்கப்படும் 2 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 4 வது இராகம்.
- இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
[தொகு]- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் ஷட்விதமார்க்கிணி (46) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் க, ம, நி ஆகிய சுரங்கள் முறையே வாசஸ்பதி (64), சாருகேசி (26), கௌரிமனோகரி (23) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றது (மூர்ச்சனாகாரக மேளம்).
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | விஸ்வநாதம் | முத்துசாமி தீட்சிதர் | ஆதி |
கிருதி | சதாசிவநின்னு | வீணை சேஷண்ணா | திரிபுட |
கிருதி | இருப்பிடம் | அம்புஜம் கிருஷ்ணா | ஆதி |
கிருதி | யாருக்கு தெரியும் | முத்துத் தாண்டவர் | மிஸ்ர ஜம்பை |
கிருதி | நாடகப்பிரியா | சுத்தானந்த பாரதியார் | ரூபகம் |
கிருதி | இரங்காதா சாமிநாதா | கோடீஸ்வர ஐயர் | ஆதி |
கிருதி | இதிசமயமு | மைசூர் வாசுதேவாச்சாரியார் | ரூபகம் |
ஜன்ய இராகங்கள்
[தொகு]நாடகப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.
- தீபரம்
- கனகாத்ரி
- நடாபரணம்
- ரசாளி
- பானுமதி
- நாகமணி
- அலங்காரப்பிரியா
- கின்னரேசப்பிரியா
- மாதாங்ககாமினி
- சித்தபோதினி
- வைசயந்தி
- யோகபோதினி
- சாந்தவபாஷினி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.