நடு இலையுதிர் கால திருவிழா
இடை-இலையுதிர்கால கொண்டாட்டம் | |
---|---|
பெய்ஜிங்கில் இடை-இலையுதிர்கால கொண்டாட்ட அலங்கரிப்புக்கள். | |
அதிகாரப்பூர்வ பெயர் | 中秋節 (Zhōngqiū Jié in mainland China, சீனக் குடியரசு, சிங்கப்பூர்; Jūng-chāu Jit in ஆங்காங் மற்றும் மக்காவு) Tết Trung Thu (வியட்நாம்) |
பிற பெயர்(கள்) | சந்திர விழா, நிலவுத் திருவிழா (Moon Festival (八月節)) |
கடைப்பிடிப்போர் | சீன மக்கள், வியட்நாமியர் |
வகை | காலாச்சாரம், சமயம் |
முக்கியத்துவம் | இலையுதிர் கால அறுவடை முடிவுக்கான கொண்டாட்டம் |
அனுசரிப்புகள் | Consumption of mooncakes Consumption of cassia wine |
நாள் | எட்டாம் நிலாத் திங்களின் 15 ஆம் நாள் |
நடு இலையுதிர் கால திருவிழா அல்லது இடை-இலையுதிர்கால கொண்டாட்டம்(Mid-Autumn Festival, சீனம் :中秋節) என்பது சீனர் மற்றும் வியட்நாமியராலும் கொண்டாடப்படும் ஒரு அறுவடைக்கால விழாவாகும். [1][2] இந்தக் கொண்டாட்டம் கான் நாட்காட்டியிலும் மற்றும் வியட்நாமிய நாட்காட்டியிலும் எட்டாம் மாதம் 15ம் நாள் முழு நிலவன்று கொண்டாடப்படுகிறது. இடை-இலையுதிர்கால கொண்டாட்டம் கிரெகொரியின் நாட்காட்டியின் படி முன் செப்டம்பருக்கும் முன் அக்டோபருக்கும் இடையில் வரும் பூரணை இரவில் கொண்டாடப்படுகிறது.[1] இத்திருவிழா சீனா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இது சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இக் கொண்டாட்டத்தினை முதன்மைச் சீனா அருவ கலாச்சார பாரம்பரியம் ஆக 2006இல் குறிப்பிட்டது, மற்றும் 2008இல் பொது விடுமுறையாகவும் அறிவித்தது.[1] இது தாய்வான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளிலும் பொது விடுமுறையாகும். வியட்நாமிய கலாச்சாரத்தில், இது இரண்டாவது முக்கிய விடுமுறை தினமாகும்.
சீன மக்களின் கொண்டாட்டங்களில் முதன்மை இடத்தைப் வகிப்பது வசந்தவிழா ஆகும். அதனை அடுத்து வரும் மகத்தான ஒரு கொண்டாட்டமாக விளங்குவது இந்த இடைஇலையுதிர்கால கொண்டாட்டமாகும். அருமையான சிதோசன நிலை காணப்படும் இம்மகத்தான கொண்டாட்டம்; சந்திரன் இந்த நாள் வட்ட வடிவமாக காணப்படுவதால் சந்திர விழா எனவும் போற்றிக் கொண்டாடுவர். பூரண சந்திரன் அமைதிக்கும் சௌபாகியத்திற்கும் குடும்பங்கள் மீளச் சந்திப்பதற்குமான அடையாளமெனவும் சீன மக்கள் நம்புகின்றனர்.
வேறு பெயர்கள்
[தொகு]இடை-இலையுதிர்கால கொண்டாட்டம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. அவற்றுள் சில:
- சந்திர விழா அல்லது அறுவடை சந்திர விழா, இக்கொண்டாட்டம் பூரணை இரவுடன் தொடர்பு பட்டுக் காணப்படுவதாலும் மற்றும் சந்திர வழிபாட்டுக் கலாச்சாரத்தாலும் இப்பெயர் வந்தது.
- சந்திர கேக் விழா, இக்கொண்டாட்டத்தின் போது பிரபல கலாசார உணவான சந்திரக் கேக்கை உண்பதால் இப்பெயர் வந்தது.
- Jūng-chāu Jit (中秋節), கண்டோனீய சீனதின் அதிகாரப்பூர்வ பெயர்.
- Tết Trung Thu, வியட்நாமிய அதிகாரப்பூர்வ பெயர்.
- Zhōngqiū Jié (中秋節), மாண்டரின் மொழியின் அதிகாரப்பூர்வ பெயர்.
- விளக்கு விழா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் சில சமயங்களில் அழைக்கப்படுவதுண்டு.
- ரீயூனியன் விழா
- குழந்தைகள் விழா, வியட்நாமில், குழந்தைகளின் கொண்டாட்டம் வலியுறுத்தப்படுவதால்.[3]
திருவிழாவின் நோக்கம்
[தொகு]இத்திருவிழாவின் நோக்கம் ஒன்று கூடுதல், நன்றி செலுத்துதல், பிரார்த்தனை செய்தல் போன்றனவாக்கும்.
தோற்றம்
[தொகு]சீனர்கள் ஷாங் வம்சம் முதலே இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். டாங் வம்சத்தின்போது இத்திருவிழா மேலும் புகழ் பெறத் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் பேரரசி டோவாகர் சிக்சி காலத்தில் சீன நாட்காட்டியின் 8 -வது மாதத்தில் 13 ஆம் நாள் முதல் 17 ஆம் நாள்வரை இவ்விழா கொண்டாடப்பட்டது.[4]
விளக்கு
[தொகு]இப்பண்டிகையின் போது உயரமான கோபுரங்களில் வண்ண விளக்குகளை ஏற்றுவர். சீனர்களின் பாரம்பரியப்படி விளக்கானது கருவுறுதலின் சின்னமாகும். மேலும் விளக்கு அலங்காரத்திற்காகவும் ஏற்றப்படுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருவிழாவுக்காகவே விளக்கு ஏற்றப்படுகிறது. பண்டைய காலத்தில் விளக்கானது இயற்கைப் பொருட்களால் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டன.
கொண்டாட்டம்
[தொகு]இக்கொண்டாடத்தில் முக்கிய இடம் வகிப்பன சிங்கம் நடனம் மற்றும் டிராகன் நடனம் ஆகும். இடை-இலையுதிர்கால கொண்டாட்டத்தில் கடவுளுக்காக போலி பணங்களை எரித்தல் போன்றது நடைபெறும்.
சிறப்பு உணவு
[தொகு]இக்கொண்டாட்டத்தின் போது பிரபல கலாசார உணவாக நிலவு ரொட்டி (Moon cake) அல்லது மூன் கேக் விளங்குகிறது. இதன் காரணமாக இக்கொண்டாட்டத்திற்கு நிலவு ரொட்டி விழா என்ற பெயரும் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Yang, Fang. "Mid-Autumn Festival and its traditions". http://news.xinhuanet.com/english2010/culture/2011-09/12/c_131134150.htm. "The festival, celebrated on the 15th day of the eighth month in the Chinese calendar, has no fixed date on the Western calendar, but the day always coincides with a full moon."
- ↑ Nguyen, Van Huy (2003), "The Mid-Autumn Festival (Tet Trung Thu), Yesterday and Today", in Kendall, Laurel (ed.), Vietnam: Journeys of Body, Mind, and Spirit, University of California Press, pp. 93–106, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0520238729
- ↑ Lee, Jonathan H.X. (2010). Encyclopedia of Asian American folklore and folklife. Santa Barbara, Calif.: ABC-CLIO. p. 1180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0313350663.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Roy, Christian (2005). Traditional festivals: a multicultural encyclopedia. Santa Barbara, Calif.: ABC-CLIO. pp. 282–286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1576070891.
வெளி இணைப்புகள்
[தொகு]- மேலும் தெரிந்து கொள்ள பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்