உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய மன்னிப்பு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய மன்னிப்பு நாள்
பிற பெயர்(கள்)மன்னிப்பு நாள்
கடைபிடிப்போர் ஆத்திரேலியா
வகைஆத்திரேலியத் தொல்குடிகள் பண்பாட்டைச் சிதைத்தல்
முக்கியத்துவம்ஆத்திரேலியத் தொல்குடி மக்களை தவறாக நடத்தியதை ஆண்டுதோறும் நினைவுப்படுத்தல்
அனுசரிப்புகள்?
நாள்26 மே
நிகழ்வுஆண்டுதோறும்
முதல் முறை26 மே 1998 (1998-05-26)
தேசிய மன்னிப்பு நாள் நினைவுப் பதாகை, 2008-ஆம் ஆண்டு முதல்

தேசிய மன்னிப்பு நாள் அல்லது தேசிய குணப்படுத்தும் நாள் (National Sorry Day), 1905-ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா நாட்டின் சட்டப்படி, ஆத்திரேலியாவின் தொல்குடி மக்களின் குழந்தைகளை, ஐரோப்பிய பண்பாட்டு முறையில் வளர்த்ததை, 1998-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அரசு மாபெரும் தவறு தெரிந்து கொண்டதால், பழங்குடி மக்களிடம், வெள்ளை இன ஆஸ்திரேலியர்கள், ஆண்டுதோறும் மே மாதம் 26ஆம் நாளன்று மன்னிப்பு கேட்கும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.[1][2]

வரலாறு

[தொகு]

1905-ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியா அரசின் சட்டப்பட்டி, ஆத்திரேலியாவின் பழங்குடி மக்களின் குழந்தைகளை, அவர்தம் பெற்றோரிடமிருந்து வலுகட்டாயமாக கைப்பற்றி அல்லது திருடி, கிறித்துவ மிஷினரிகள் மற்றும் அரசு நிறுவனம் நடத்தும் உண்டு - உறைவிடப் பள்ளிகள், முகாம்கள், விடுதிகள், காப்பகங்கள் அல்லது தனியார் ஐரோப்பியக் குடும்பத்தாரிடம் ஒப்படைத்து ஐரோப்பியப் பண்பாட்டு முறையில் வளர்த்தனர். இந்த முறையால் ஏராளமான தொல்குடியின குழந்தைகள் தங்கள் குடும்பங்களை இழந்தனர். தொல்குடி குழந்தைகளை வலுக்கட்டாயமாக பெற்றோரிடமிருந்து பிரித்து, ஐரோப்பிய பண்பாட்டு முறையில் வளர்க்கும் முறை 1970-ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவில் பின்பற்றப்பட்டது.[3]

ஐரோப்பியப் பண்பாட்டில் வளர்க்கப்படும் தொல்குடி குழந்தைகளை ஆஸ்திரேலிய காலனிய அரசு 'half Caste aborigines எனப்பெயரிட்டு தனி இனமாகப் பாவித்தனர். பின்னர் இக்குழந்தைகளை வெள்ளையின குழந்தைகளாக மாற்ற அரசு முடிவு எடுத்தது. எனவே இந்த குழந்தைகளை தங்கள் சொந்த இடத்தை விட்டு பிரிக்கப்பட்டு, வெள்ளை இன மக்களின் வீடுகளிலோ அல்லது கிறித்துவ மிஷனரிகளால் நடத்தப்படும் முகாம்களிலோ, பள்ளிகளிலோ வளர்க்கப்பட்டனர். இதற்காக தொல்குடியினர் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் 1905ஆம் ஆண்டில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி, குழந்தைகளை தொல்குடிகளின் இடங்களிலிருந்து பிரித்துக் கொண்டு வருவதற்கான அதிகாரம் அரசுக்கு உண்டு. இதற்காக அமைச்சர் ஒருவரின் தலைமையில் அந்தந்த பகுதிகளுக்கென தனி பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டனர். அந்தப் பாதுகாவலர் தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தொல்குடி குழந்தைகளை முகாம்களுக்கு அனுப்புவார். அனுப்ப மறுக்கும் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக குழந்தைகள் பறிக்கப்படுவர்.

முகாம்களில் வளரும் தொல்குடி குழந்தைகளின் இன அடையாளம் முழுமையாக மறைக்கப்பட வேண்டும் என்பதற்காக, குழந்தைகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவர்களுக்குப் புதிய ஆங்கிலப் பெயர்கள் வைக்கப்பட்டது. ஆங்கிலேய உடைகள், உணவுகள் வழங்கப்பட்டது. மேலும் தேவாலயங்களில் கிறித்துவ வழிபாட்டு முறை கற்றுத்தரப்பட்டது. தொல்குடி குழந்தைகள் தங்கள் தங்கள் தாய்மொழியில் பேசக்கூடாது போன்ற சிறப்புக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. முகாமுக்குச் செல்லாமல் வெள்ளையின மக்களின் வீடுகளில் வேலைக்குச் சென்ற தொல்குடி ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

1970ஆம் ஆண்டுவரை பின்பற்றப்பட்ட இந்த முறையால் ஏராளமான தொல்குடியின குழந்தைகள் தங்கள் குடும்பங்களை இழந்திருந்தனர். தாங்கள் வெள்ளையினத்தவராகவும் சிந்திக்க முடியாமல், தொல்குடி இனமாகவும் வாழ முடியாமல் குழந்தைகள் அவதிப்பட்டனர். 1967ஆம் ஆண்டு வரையிலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கூட இவர்கள் சேர்க்கப்படவில்லை.

ஐரோப்பிய பண்பாட்டைப் பின்பற்றும் ஆஸ்திரேலிய தொல்குடியினர் பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து முறையான ஆய்வறிக்கை சமர்ப்பிக்க 1995ஆம் ஆண்டு அரசு ஒரு குழுவை அமைத்தது. 1997-ஆம் ஆண்டில் அக்குழு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. ஐரோப்பிய பண்பாட்டை பின்பற்றும் தொல்குடியினரை அவர்களை வீட்டில் சேர்ப்போம் என்று பொருள்படும் விதமாக (Bringing them home) தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கை 26 மே 1977 அன்று ஆஸ்திரேலியா அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது இதைக் குறிக்கும் விதமாகவே ஆஸ்திரேலிய அரசால் ஆண்டுதோறும் மன்னிப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

2008ஆம் ஆண்டு அரசின் சட்டங்களால் இந்த தொல்குடி மக்கள் நடத்தியமைக்கு, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் அப்போதைய பிரதமர் கெவின் ரட். நல்லிணக்க செயல்முறையின் ஒரு பகுதியாக நாட்டின் பழங்குடி மக்களை தவறாக நடத்தியதை நினைவுகூருகிறது.

தொல்குடி மக்களுக்கு ஆஸ்திரேலியா அரசு இழைத்த பண்பாட்டு சிதைவை குறிக்கும் விதமாக 26 மே 1998 அன்று ஆஸ்திரேலிய பூர்வகுடிகளிடம் மன்னிப்பு கேட்கும் நாள் அரசாலும், வெள்ளையர்களாலும் கடைபிடிக்கப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு அரசின் சட்டங்களால் இந்த தொல்குடி மக்கள் நடத்தப்பட்ட விதத்துக்காக, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் அப்போதைய பிரதமர் கெவின் ரட்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Sorry Day 2020". Reconciliation Australia (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). 2020-05-25. பார்க்கப்பட்ட நாள் 2022-05-26.
  2. Every May 26 in Australia, National Sorry Day
  3. ஆஸ்திரேலிய அரசால் திட்டமிட்டு திருடப்பட்ட பழங்குடி இனத்தின் தலைமுறைகள் - மன்னிப்பு தினத்தின் பின்னணி

வெளி இணைப்புகள்

[தொகு]