தெற்கு லெபனான்
தெற்கு லெபனான் (Southern Lebanon), மேற்காசியாவில் நடுநிலக்கடலை ஒட்டியுள்ள லெபனான் நாட்டின் தென் பகுதியாகும். தெற்கு லெபனானில் தெற்கு ஆளுநரகம், நபாதி ஆளுநரகம் மற்றும் பெக்கா ஆளுநரகத்தின் ரசாயா மாவட்டம் மற்றும் மேற்கு பெக்கா மாவட்டங்களைக் கொண்டது.
தெற்கு லெபனானின் முக்கிய நகரங்கள் சிதோன், டயர், நபாத்தியா, பிந்த் ஜுபைல், ஜெசின் ஆகும். தெற்கு லெபனானில் சியா இசுலாம் மற்றும் துருஸ் இசுலாமியர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். லெபனான் மரோனைட் கிறித்தவர்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர்.
வரலாறு
[தொகு]1970களில் தெற்கு லெபனான் பகுதி தன்னாட்சி பெற்ற அரசாக சாத் ஆதாத் அறிவித்தார்.[1]1984ஆம் ஆண்டில் சாத் ஆதார் இறப்பிற்குப் பின், தெற்கு லெபனான் பகுதி மீண்டும் லெபனானுடன் இணைக்கப்பட்டது.
1978ஆம் ஆண்டு முதல் தெற்கு லெபனான் பகுதியில் தங்கியுள்ள ஹிஸ்புல்லா படையினர், இஸ்ரேலுடன் மோதல் போக்கு கொண்டுள்ளனர். [2]
இதனயும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ feb2b பரணிடப்பட்டது 2008-07-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Israeli–Lebanese conflict