தென்னிந்தியா
தென்னிந்தியா | |
---|---|
தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களும் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் வரைபடம் | |
நாடு | இந்தியா |
மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகள் | |
அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள்(2011)[1] | |
பரப்பளவு | |
• மொத்தம் | 635,780 km2 (2,45,480 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 25,30,51,953 |
• அடர்த்தி | 400/km2 (1,000/sq mi) |
நேர வலயம் | இசீநே (ஒ.ச.நே + 05:30) |
அலுவல் மொழிகள் | |
பிற மொழிகள் |
தென்னிந்தியா (South India) அல்லது தென் இந்தியா என்பது தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரளம் மாநிலங்கள் மற்றும் ஆட்சி பகுதிகளான அந்தமான் நிக்கோபார், இலட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகியனவை உள்ளடக்கியதாகும். இது இந்தியாவின் நிலபரப்பில் 19.31% ஆக்கிரமித்து உள்ளது. இந்தியாவின் தெற்கு பகுதியான தக்காண பீடபூமியை உள்ளடக்கி, கிழக்கில் வங்காள விரிகுடா, மேற்கில் அரபிக் கடல் மற்றும் தெற்கில் இந்திய பெருங்கடலால் சூழப்பட்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை நடுவில் பீடபூமியை நடுப்பகுதியாக கொண்டுள்ளது.[2][3] கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, காவிரி மற்றும் சிறுவாணி ஆறுகள் தலைமை நீர் அடையாளங்களாகும்.[4] சென்னை, பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை, விசாகப்பட்டினம், கொச்சி மற்றும் கோழிக்கோடு மிகப் பெரிய நகர்ப்புற பகுதிகளாகும்.
தென் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் நான்கு முக்கிய திராவிட மொழிகளில் ஒன்றான தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியனவற்றையே பேசுகின்றனர்.[5] தென் இந்தியா பகுதிகளை பல வம்ச மன்னர்கள் ஆண்டனர் மற்றும் தென் இந்திய கலாச்சாரம் தெற்கு ஆசியா முழுவதும் பரவியது. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், சாளுக்கியர் மற்றும் விஜயநகரப் பேரரசு ஆகியவை தென் இந்தியாவில் நிறுவப்பட்ட தலைமை வம்சாவளிகள் ஆகும்.[6][7]
இந்திய சுதந்திரத்துக்கு பிறகு பல ஏற்ற இறக்கங்கள் பட்ட பிறகு, தென்னிந்திய மாநிலங்கள் மெதுவாக பொருளாதார முன்னேற்றம் அடைந்தன. கடந்த முப்பதாண்டுகளாக, நாட்டு சராசரி வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. தென் இந்திய மாநிலங்களில் சில முன்னேற்றம் கண்ட அதே வேளை, வறுமை நாட்டின் ஏனைய பகுதிகளை போல சிக்கலாக இருக்கிறது.[8] தென் மாநிலங்களில் பொருளாதாரம் வட மாநிலங்களை விட அதிக வேகத்தில் வளர்ச்சி பெற்றுவிட்டது. கல்வியறிவு விகிதம் தென் மாநிலங்களில் சுமார் 80% ஆக உள்ளது. இது இந்தியாவின் மற்ற பகுதிகளில் விட அதிகமானதாகும்.[9][10] தென்னிந்தியாவின் குழந்தை பிறப்பு வீதம் 1.9 ஆகும். அனைத்து இந்திய பகுதிகளில் இதுவே குறைவானதாகும்.
தென்னிந்தியாவின் முதல் தர பத்து மிகப்பெரிய நகரங்கள்
[தொகு]தென்னிந்தியாவில் பல தொழில் முதலீடுகளை உள்ள நகரங்கள் பல உள்ளன. மேலும் தென்னிந்தியாவின் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வகையில் கீழ்கண்ட முதல் பத்து நகரங்கள் தென்னிந்திய பொருளாதாரத்தில் பெரும் பங்காக உள்ளது.
போன்ற நகரங்கள் தென்னிந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய மாநகரங்கள் ஆகும். இதன் தர வரிசையே தென்னிந்திய பெருநகரங்கள் மற்றும் தென்னிந்திய வரிசைப்படட்டியல் நகரங்கள் ஆகும்.
சொற்பிறப்பு
[தொகு]தீபகற்ப இந்தியா என்றும் அழைக்கப்படும் தென்னிந்தியா, பல பெயர்களால் அறியப்படுகிறது. கடலோரப் பகுதிகளைத் தவிர்த்து தீபகற்ப இந்தியாவின், பெரும்பகுதி தக்காணப் பீடபூமியால் காணப்படுகிறது.[11] "டெக்கான்" என்ற சொல், தக்ஷின் என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்ட தக்ஹின் என்ற பிராகிருத வார்த்தையின் ஆங்கில வடிவமாகும். கருநாடகமும் தென்னிந்தியாவுடன் தொடர்புடையது ஆகும்.[12]
வரலாறு
[தொகு]பண்டைய காலம்
[தொகு]இரும்புக் காலத்திலிருந்து (பொ.ஊ.மு. 1200 - பொ.ஊ.மு. 24), பொ.ஊ. 14ம் நூற்றாண்டு வரையிலான பாண்டியர், சோழர், சேரர், சாதவாகனர், சாளுக்கியர், இராஷ்டிரகூடர், பல்லவர், காக்கத்தியர், போசளர் காலத்திய பண்டைய தென்னிந்திய வரலாறு அறியப்படுகிறது. களப்பிரர்கள் (பொ.ஊ. 250 – 600 ) சேர, சோழ, பாண்டியர்களை வென்று தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர். தென்னிந்திய அரச குலங்கள், தங்கள் பேரரசின் நிலவிரிவாக்கத்திற்கு ஒன்றுடன் ஒன்று எப்போதும் போரிட்டுக் கொண்டிருந்தாலும், வெளிநாட்டு, குறிப்பாக வடநாட்டு இசுலாமிய படைகளுடனும் எதிர்த்து நின்றது. தென்னிந்திய பேரரசுகளில், விஜயநகரப் பேரரசு, வட இந்தியா இசுலாமிய முகலாயர்களின் தாக்குதல்களை முடியறிடித்து, தென்னிந்தியாவிற்கு அரண் ஆக விளங்கியது.
விடுதலைக்குப் பின்பு
[தொகு]1956ல் இந்திய அரசு இயற்றிய மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, தென்னிந்தியாவில் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளை ஆந்திரப் பிரதேசம் எனும் புது மாநிலத்துடன் இணைத்தனர். கன்னட மொழி பேசும் பகுதிகள் மைசூர் மாநிலத்துடன் இணைத்தனர். மலையாளம் பேசும் பகுதிகள் கேரளா எனும் புதிய மாநிலத்துடன் இணைத்தனர். 1968ல் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்டது. 1972ல் மைசூர் மாநிலத்தின் பெயரை கர்நாடகா எனப் பெயரிடப்பட்டது. 1961ல் போர்த்துகேய இந்தியாவின் பகுதியான கோவா இந்தியாவின் ஒன்றியப் பகுதியானது. பின்னர் 1987ல் கோவா தனி மாநிலமாக உயர்ந்தது. 1950ல் பிரெஞ்சு இந்தியாவின் பகுதியான புதுச்சேரி, இந்தியாவின் ஒன்றியப் பகுதியானது. ஆந்திரப் பிரதேசத்தின் பழைய ஐதராபாத் இராச்சியத்தின் பகுதிகளைக் கொண்டு 2014ல் தெலங்கானா மாநிலம் உருவானது.
புவியியல்
[தொகு]இந்தியாவில் தெற்கில் தலைகீழ் முக்கோண வடிவ அமைப்பில் அமைந்த தென்னிந்திய தீபகற்பத்தின் எல்லைகளாக கிழக்கில் வங்காள விரிகுடா, தெற்கில் இந்தியப் பெருங்கடல், மேற்கில் அரபுக் கடல், வடக்கில் விந்திய மலைத்தொடர்களும் எல்லைகளாக உள்ளது.
சாத்பூரா மலைத்தொடர்களுக்கு தெற்கே அமைந்த தக்காண பீடபூமி தென்னிந்தியாவின் பெரும்பகுதிகளை கொண்டுள்ளது. தக்காண பீடபூமியின் மகாராட்டிரா மாநிலத்தின் கிழக்கில் பருத்தி அதிகம் விளையும் வறட்சி மிக்க விதர்பா மற்றும் மரத்வாடா பிரதேசங்கள் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கும், அரபுக் கடலுக்கும் இடையே மலபார் பிரதேசம் மற்றும் கொங்கண் மண்டலம் உள்ளது.
வடக்கிலிருந்து தெற்காக அமைந்த மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கிடையே மலைநாடு, மலபார் கடற்கரை, நீலகிரி, வயநாடு ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் மலைக்காடுகள் உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் திருமலை, ஸ்ரீசைலம் போன்ற திருத்தலங்களும், நல்லமலா மலைக்காடுகளும் அமைந்துள்ளது
தாவரங்கள் மற்றும் விலங்குகள்
[தொகு]மாநிலம்/யூனியன் பிரதேசம் | விலங்கு | பறவை | மரம் | பழம் | மலர் |
---|---|---|---|---|---|
அந்தமான் நிக்கோபார் தீவுகள்[13] | ஆவுளியா | அந்தமான் மரப் புறா (Columba palumboides) | அந்தமான் படாக் (Pterocarpus dalbergioides) | அந்தமான் கிரேப் மைர்ட்லே (Lagerstroemia hypoleuca) | |
ஆந்திரப் பிரதேசம்[14] | புல்வாய் | பனங்காடை | வேம்பு | மாம்பழம் | தாமரை |
கருநாடகம்[15] | இந்திய யானை | பனங்காடை | சந்தனம் | தாமரை | |
கேரளம்[16][17] | இந்திய யானை | மலை இருவாட்சி | தென்னை | பலா | கொன்றை |
இலட்சத்தீவுகள்[18][19] | கீட்டோடொன்டைடீ | நோட்டி டெர்ன் (Anous stolidus) | ஈரப்பலா | ||
புதுச்சேரி[20] | இந்திய அணில் | ஆசியக் குயில் | வில்வம் | நாகலிங்கம் | |
தமிழ்நாடு[21][22] | நீலகிரி வரையாடு | மரகதப்புறா | பனை | பலா | காந்தள் |
தெலங்காணா[23] | புள்ளிமான் | பனங்காடை | வன்னி | மாம்பழம் | ஆவாரை |
மக்கள் தொகை
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதிப்பிடப்பட்ட தென் இந்தியாவின் மக்கள்தொகை 25.2 கோடியாகும். இது இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும். குழந்தை பிறப்பு வீதமானது மக்கள் தொகையை வீழ்ச்சி அடையாமல் வைத்திருக்கக்கூடிய 2.1க்கும் குறைவாகவே அனைத்து தென்னிந்திய மாநிலங்களுக்கும் உள்ளது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாடு இந்திய அளவிலேயே மிகக் குறைந்த குழந்தை பிறப்பு விதமாக 1.7 ஐப் பெற்றுள்ளன.[24][25] இதன் காரணமாக 1981 முதல் 2011 வரை இந்திய மக்கள் தொகையில் தென் இந்தியாவின் பங்கு குறைந்து கொண்டே வந்துள்ளது.[26][27] தென்னிந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி சுமாராக ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 463 பேர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தென் இந்தியாவின் மக்கள்தொகையில் 18 சதவீதம் பேர் ஆவர். பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். 47.5% பேர் விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.[28] தென் இந்தியாவின் மக்கள் தொகையில் 60% பேர் நிலையான வீட்டு அமைப்புகளில் வாழ்கின்றனர்.[29] 67.8% தென்னிந்தியா குழாய் குடிநீர் வசதி பெற்றுள்ளது. கிணறுகள் மற்றும் நீர் ஊற்றுக்கள் குடிநீர் வழங்குவதில் முக்கியமான ஆதாரங்களாக உள்ளன.[30]
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தென் இந்திய பொருளாதாரம் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பிறகு கடந்த மூன்று தசாப்தங்களாக தேசிய சராசரியை விட அதிக வேகத்தில் தென்னிந்திய மாநிலங்களின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் சில சமூக பொருளாதார அளவீடுகளில் மேம்பட்ட போதிலும்,[31][32] வறுமையானது மற்ற இந்திய பகுதிகளைப் போலவே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவு வறுமை குறைந்துள்ள போதிலும் அதன் தாக்கம் தொடர்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தென்னிந்திய மாநிலங்களின் மனித மேம்பாட்டுச் சுட்டெண் ஆனது அதிகமாக உள்ளது மற்றும் பெரும்பாலான வட இந்திய மாநிலங்களை காட்டிலும் பொருளாதாரமானது வேகமாக வளர்ந்துள்ளது.[33]
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தென்னிந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 80%. இது தேசிய சராசரியான 74% விட குறிப்பிடத்தக்க அளவு அதிகம். தென்னிந்திய மாநிலங்களில் கேரளா அதிகபட்ச எழுத்தறிவு வீதமாக 93.91% ஐப் பெற்றுள்ளது.[9][34] தென்னிந்தியா, பாலின விகிதமான 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்பதனை அதிகமாக பெற்றுள்ளது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாடு முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன.[35] பொருளாதார சுதந்திரம், ஆயுட்காலம், குடிநீர் வசதி, சொந்த வீடு வைத்திருப்பது மற்றும் சொந்த டிவி வைத்திருப்பது ஆகிய அளவீடுகளில் தென்னிந்திய மாநிலங்கள் இந்திய அளவில் முதல் பத்து இடங்களுக்குள் வருகின்றன.[36][37][38][39][40] தென்னிந்திய மாநிலங்களில் 19% பேர் ஏழைகளாக உள்ளனர். அதே நேரத்தில் மற்ற இந்திய மாநிலங்களில் 38% பேர் ஏழைகளாக உள்ளனர். தென்னிந்திய மாநிலங்களில் சராசரி தனிநபர் வருமானம் ₹19,531 (US$240). இது மற்ற இந்திய மாநிலங்களின் சராசரி தனிநபர் வருமானமான ₹8,951 (US$110) ஐக் காட்டிலும் அதிகம்.[41][42] ஐக்கிய நாடுகள் அவை 2015க்குள் அடைய வேண்டும் என்று சில இலக்குகளை புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் என்று அறிவித்து உள்ளது. இதில் மக்கள் தொகை சார்ந்த மூன்று புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை கேரளா மற்றும் தமிழ்நாடு 2009லேயே அடைந்துவிட்டன. அந்த இலக்குகள் தாயின் ஆரோக்கியம், சேய் இறப்பு விகிதத்தை குறைப்பது மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பது ஆகியவையாகும்.[43][44]
மொழிகள்
[தொகு]தென்னிந்தியாவின் மிகப்பெரிய மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் சுமார் 73 மொழிகள் உள்ளன.[45] தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகும்.[46] துளு மொழி கடற்கரையோர கேரளா மற்றும் கருநாடகாவில், 15 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. கொங்கணி எனப்படும் இந்தோ ஆரிய மொழி கொங்கண் கடற்கரையில் 10 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. தென்னிந்தியாவின் நகரப்பகுதிகளில் ஆங்கிலமும் பரவலாக பேசப்படுகிறது.[47] தென்னிந்தியாவில் உருது மொழி சுமார் 1.2 கோடி முஸ்லிம்களால் பேசப்படுகிறது.[48][49][50] தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மற்றும் கொங்கணி ஆகியவை அலுவல் மொழிச் சட்டம் 1963 இன் படி இந்தியாவின் அலுவல் மொழிகளான 22 இல் ஒன்றாக வருகின்றன. இந்திய அரசாங்கத்தால் செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்ட முதல் மொழி தமிழ் ஆகும். 2004 இல் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டது.[51][52] செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்ட பிறமொழிகள் கன்னடம் (2008), தெலுங்கு (2008) மற்றும் மலையாளம் (2013) ஆகும்.[53][54]
எண். | மொழி | பேசுபவர்களின் எண்ணிக்கை[55] | அலுவல் மொழி |
---|---|---|---|
1 | தெலுங்கு | 7,40,02,856 | ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, யானம் |
2 | தமிழ் | 6,07,93,814 | தமிழ்நாடு, புதுச்சேரி |
3 | கன்னடம் | 3,79,24,011 | கருநாடகா |
4 | மலையாளம் | 3,30,66,392 | கேரளா, லட்சத்தீவு, மாகே |
5 | உருது | 2,30,66,392 | கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, கருநாடகா |
6 | கொங்கணி | 24,89,015 | எந்த தென்னிந்திய மாநிலத்திலும் அலுவல் மொழியாக இல்லை |
7 | துளு | எந்த தென்னிந்திய மாநிலத்திலும் அலுவல் மொழியாக இல்லை |
மதம்
[தொகு]தென்னிந்தியாவின் மிகப் பெரிய மதமாக 80% மக்கள் பின்பற்றக்கூடிய இந்துமதம் உள்ளது. 11% பேர் இஸ்லாமையும், 8% பேர் கிறித்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர்.[56] வரலாற்றுக்கு முந்தைய மதம் தென்னிந்தியாவில் பின்பற்றப்பட்டுள்ளதற்கு ஆதாரமாக நடனங்கள் மற்றும் சடங்குகளை விவரிக்கும் கற்கால ஓவியங்கள் கிழக்கு கர்நாடகாவின் குப்கல் போன்ற இடங்களில் சிதறி காணப்படுகின்றன.[57] அடிக்கடி உலகின் பழமையான மதமாக கருதப்படும் இந்து மதம் அதன் ஆரம்பத்தை இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் கொண்டுள்ளது.[58] தென்னிந்தியாவின் முக்கியமான ஆன்மீக பாரம்பரியங்களாக இந்து மதத்தின் சைவ மற்றும் வைணவ கிளைகள் கருதப்படுகின்றன. எனினும் புத்த மற்றும் ஜைன தத்துவங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் செல்வாக்கு செலுத்திய போதும் இவை அவ்வாறு கருதப்படுகின்றன.[59] தென்னிந்தியாவின் தெற்குப் பகுதிகளில் அய்யாவழியும் பரவி காணப்படுகிறது.[60][61] தென்னிந்தியாவிற்கு இஸ்லாமானது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கேரளாவின் மலபார் கடற்கரையில் அரேபிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. 17 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தக்காண சுல்தான்களின் ஆட்சியின் கீழ் இது பரவியது. அரேபிய வழி வந்த கேரள இஸ்லாமியர்கள் மாப்பிளமார் என்று அழைக்கப்படுகின்றனர்.[62] கிறித்தவ மதம் தென்னிந்தியாவிற்கு புனித தோமையாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் பொ.ஊ. 52 இல் கேரளாவின் முசிறிக்கு விஜயம் செய்து கேரளாவின் யூதக் குடியிருப்புக்களுக்கு ஞானஸ்நானம் செய்தார்.[63][64] கேரளா உலகின் மிகப் பழமையான யூத சமூகங்களில் ஒன்றுக்கு உறைவிடமாகவும் உள்ளது. அவர்கள் சாலமன் ஆட்சிக்காலத்தில் மலபார் கடற்கரைக்கு வந்ததாக கருதப்படுகிறது.[65][66]
பொருளாதாரம்
[தொகு]தென்னிந்தியாவின் பொருளாதாரம் நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு சோசலிச கட்டமைப்பை நோக்கி உறுதி அடைந்துள்ளது. தனியார் துறையின் பங்கெடுப்பு, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு கடினமான அரசாங்க கட்டுப்பாடுகள் உள்ளன. 1960 முதல் 1990 வரை தென்னிந்திய பொருளாதாரங்கள் கலவையான பொருளாதார வளர்ச்சியை பெற்றன. 1960களில் கேரளா சராசரி பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது. அதே நேரத்தில் ஆந்திரப்பிரதேசத்தின் பொருளாதாரம் அக்காலகட்டத்தில் சரிவை சந்தித்தது. 1970களில் கேரளா பொருளாதார சரிவை சந்தித்தது. அதே நேரத்தில் 1970க்குப் பிறகு தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பொருளாதாரங்கள் தேசிய சராசரி வளர்ச்சி விகிதத்தை விட அதிகப்படியான வளர்ச்சி விகிதத்தை பெற்றன. மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் காரணமாக அவை இந்த வளர்ச்சியை பெற்றன.[67] 2017–18 கணக்கின்படி தென்னிந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹56 லட்சம் கோடி (US$780 பில்லியன்) ஆகும். இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெற்றுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு பிறகு இரண்டாவது அதிக தொழில்மயமான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.[68] மார்ச் 2015-இன் கணக்கெடுப்பின்படி தென்னிந்தியாவில் 109 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 60% தென்னிந்தியாவில்தான் உள்ளன.[69]
தென்னிந்திய மக்களில் 48%க்கும் அதிகமானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். விவசாயமானது பெரும்பாலும் பருவ மழையை நம்பியே உள்ளது. நெல், சோளம், திணை, பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, மிளகாய் மற்றும் ராகி ஆகியவை தென்னிந்தியாவில் அறுவடை செய்யப்படும் முக்கியமான பயிர் வகைகள் ஆகும். பாக்கு, காப்பி, டீ, ரப்பர் மற்றும் நறுமணப் பொருட்கள் மலை சார்ந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படுகின்றன. மக்களின் பிரதான உணவு பயிராக நெல் உள்ளது. கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி டெல்டா பகுதிகள் நாட்டின் அதிக அரிசி உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்றாக உள்ளன.[70] அடிக்கடி ஏற்படும் பஞ்சங்கள் காரணமாக விவசாயிகள் கடனாளிகளாகவும், தங்களது ஆடு மாடுகளை விற்கும் நிலைக்கும் மற்றும் சில நேரங்களில் தற்கொலை செய்யும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.[71] இந்தியாவின் மொத்த காப்பி உற்பத்தியில் 92% தென்னிந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.[72] பருத்தி, டீ, ரப்பர், மஞ்சள், மாம்பழங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் உற்பத்தி செய்யும் முக்கியமான பகுதியாகவும் தென்னிந்தியா விளங்குகிறது.[69][73][74][75] மற்ற பிற முக்கிய விவசாய உற்பத்தி பொருட்களானவை பட்டு மற்றும் கோழி சார்ந்த உற்பத்திப் பொருட்கள் ஆகும்.[76][77]
பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கோயம்புத்தூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவை நாட்டின் முக்கியமான தகவல் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக உள்ளன. இதில் பெங்களூரு இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப மையங்களின் வளர்ச்சி தென்னிந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வேலை தேடுவோரை ஈர்த்துள்ளது.[78] 2005–06ல் தென்னிந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி ₹64 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.[79] சென்னை "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த வாகன மற்றும் வாகன பாக உற்பத்தியில் 35% சென்னையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.[80] இப்பகுதி இந்தியாவின் மோட்டார்கள் மற்றும் பம்புகள் தேவையில் மூன்றில் இரண்டு பங்கை கோயம்புத்தூர் உற்பத்தி செய்கிறது. மேலும் நகைகள், ஈர அரவை இயந்திரங்கள் மற்றும் வாகன பொருட்கள் ஏற்றுமதி செய்யும் பெரிய பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.[81]
தென்னிந்தியாவின் மற்றொரு முக்கிய தொழில்துறை ஜவுளித் துறை ஆகும்.[82] இந்தியாவில் உள்ள மொத்த நார் ஜவுளி ஆலைகளில் 60% தென்னிந்தியாவில் குறிப்பாக கோயம்புத்தூர்,திருப்பூர், ஈரோட்டில் தான் உள்ளன.[83]
சுற்றுலாத்துறை தென் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம் மற்றும் தெலுங்காணா ஆகிய மாநிலங்கள் சுற்றுலா பயணிகள் வருகையின் எண்ணிக்கையில் முதல் பத்து மாநிலங்களுக்குள் வருகின்றன. உள்நாட்டு சுற்றுலா பயணிகளில் 50%க்கும் மேற்பட்டோர் இந்த நான்கு மாநிலங்களுக்குத்தான் வருகின்றனர்.[84]
பொருளாதார மற்றும் மக்கள் தொகை குறியீடுகள்[32] | ||
---|---|---|
அளவுரு | தென்னிந்தியா | தேசிய அளவு |
மொத்த உள்நாட்டு உற்பத்தி | ₹56 லட்சம் கோடி | ₹104.7 லட்சம் கோடி |
நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி | ₹29,027 | ₹23,222 |
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் | 15.41% | 26.1% |
நகரமயமாக்கப்பட்ட மக்கள் தொகை | 32.8% | 27.8% |
மின்சார வசதி உள்ள வீடுகள் | 98.91% | 88.2% |
எழுத்தறிவு விகிதம் | 81% | 74%[85] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. Archived from the original (PDF) on 7 May 2012. பார்க்கப்பட்ட நாள் 21 December 2018.
- ↑ Edward Balfour (1885). The Cyclopædia of India and of Eastern and Southern Asia, Commercial Industrial, and Scientific: Products of the Mineral, Vegetable, and Animal Kingdoms, Useful Arts and Manufactures. Bernard Quaritch. pp. 1017–1018.
- ↑ Dr. Jadoan, Atar Singh (செப்டம்பர் 2001). Military Geography of South-East Asia. India: Anmol Publications Pvt. Ltd. pp. 270 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-261-1008-2. பார்க்கப்பட்ட நாள் 2008-06-08.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ Thammineni Pullaiah, D. Muralidhara Rao, K. Sri Ramamurthy. Flora of Eastern Ghats: Hill Ranges of South East India. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2015.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Browse by Language Family". Ethnologue. 19 பிப்ரவரி 1999. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூலை 2015.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|date=
(help) - ↑ "They administered our region". The Hindu. 4 சூன் 2007. Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Nilakanta Sastri 1955, ப. 216
- ↑ "Human development, poverty, health & nutrition situation in India". NCBI. 20 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூலை 2015.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|date=
(help) - ↑ 9.0 9.1 "Census 2011, Chapter 6 (State of Literacy), p.14" (PDF). Government of India. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூலை 2015.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "NFHS India". NFHS. Archived from the original on 2009-05-24. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூலை 2015.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Yule, Henry; Burnell, A. C. Hobson-Jobson: The Definitive Glossary of British India. Oxford. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-164583-9.
- ↑ "Origins of the word 'Carnatic' in the Hobson Jobson Dictionary". University of Chicago. Archived from the original on 14 July 2012. பார்க்கப்பட்ட நாள் 15 September 2006.
- ↑ "State Bird/Animal/Tree". Department of Environment & Forest, Andaman & Nicobar Administration. பார்க்கப்பட்ட நாள் 2 January 2018.
- ↑ "Symbols of AP". andhrabulletin.in. Archived from the original on 30 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 15 October 2013.
- ↑ "Symbols of Karnataka". Government of Karnataka. Archived from the original on 10 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 அக்டோபர் 2013.
- ↑ "Symbols of Kerala". Government of India. Archived from the original on 12 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2013.
- ↑ "Symbols of Kerala". Government of Kerala. Archived from the original on 18 October 2013. பார்க்கப்பட்ட நாள் 17 October 2013.
- ↑ "Symbols of Lakshadweep". Government of India. Archived from the original on 12 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2013.
- ↑ "Symbols of Lakshadweep" (PDF). Government of Lakshadweep. Archived from the original (PDF) on 17 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2013.
- ↑ "Puducherry comes out with list of State symbols". தி இந்து. 21 April 2007 இம் மூலத்தில் இருந்து 31 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071031012044/http://www.hindu.com/2007/04/21/stories/2007042103560200.htm. பார்த்த நாள்: 10 February 2014.
- ↑ "Symbols of Tamil Nadu". Government of India. Archived from the original on 12 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 திசம்பர் 2013.
- ↑ "Symbols of Tamil Nadu". Government of Tamil Nadu. Archived from the original on 20 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 திசம்பர் 2013.
- ↑ "Telangana symbols". Government of Telangana. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
- ↑ Espenshade, TJ; Guzman, JC; Westoff, CF (2003). "The surprising global variation in replacement fertility". Population Research and Policy Review 22 (5/6): 580. doi:10.1023/B:POPU.0000020882.29684.8e.
- ↑ Maternal & Child Mortality and Total Fertility Rates (PDF) (Report). India: Office of Registrar General. 7 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 3 திசம்பர் 2013.
{{cite report}}
: Check date values in:|date=
(help) - ↑ Ishtiaq, M. (1999). Language Shifts Among the Scheduled Tribes in India: A Geographical Study. Delhi: Motilal Banarsidass. pp. 26–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1617-6. பார்க்கப்பட்ட நாள் 7 செப்டம்பர் 2012.
{{cite book}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Comparative Speaker's Strength of Scheduled Languages – 1971, 1981, 1991 and 2001 (Report). Census of India. 1991. Archived from the original on 11 ஏப்ரல் 2009.
{{cite report}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ Distribution of workers by category of workers, Census 2011 (Report). Government of India. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச்சு 2016.
- ↑ Houselisting and Housing, Census 2011 (Report). Government of India. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச்சு 2016.
- ↑ Households access to safe drinking water (Report). Government of India. 2011. Archived from the original on 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2014.
{{cite report}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Guha, Ramachandra (22 ஜூலை 2015). "The Better Half". Outlook இம் மூலத்தில் இருந்து 20 மார்ச்சு 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160320010101/http://outlookindia.com/full.asp?fodname=20070716&fname=AOpenning+Essay+%28F%29&sid=1. பார்த்த நாள்: 20 மார்ச்சு 2016.
- ↑ 32.0 32.1 "Also A Head For Numbers". Outlook. 16 ஜூலை 2007 இம் மூலத்தில் இருந்து 2 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130502014202/http://outlookindia.com/full.asp?fodname=20070716&fname=HThe+Stats&sid=1. பார்த்த நாள்: 22 ஜூலை 2015.
- ↑ Antony, G.M.; Laxmaiah, A. (20 ஏப்ரல் 2015) (PDF). Human development, poverty, health & nutrition situation in India. Council of Social Development, Southern Regional Centre & Division of Community Studies National Institute of Nutrition (ICMR). http://medind.nic.in/iby/t08/i8/ibyt08i8p198.pdf. பார்த்த நாள்: 22 ஜூலை 2015.
- ↑ CIA factbook (Report). CIA. Archived from the original on 2008-06-11. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2006.
{{cite report}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Vital statistics report 2012 (PDF) (Report). Registrar General & Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 19 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்ரல் 2014.
{{cite report}}
: Check date values in:|access-date=
and|date=
(help) - ↑ Inequality-Adjusted Human Development Index for India's States 2011 (PDF) (Report). United Nations Development Programme. Archived from the original (PDF) on 2013-03-01. பார்க்கப்பட்ட நாள் 13 பிப்ரவரி 2013.
{{cite report}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Economic Freedom of the States of India: 2013 (PDF) (Report). கேட்டோ நிறுவனம். 2013. p. 24. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2014.
{{cite report}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Households access to safe drinking water (Report). Government of India. Archived from the original on 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2014.
{{cite report}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Access to safe drinking water in households in India (Report). Government of India. Archived from the original (PDF) on 2019-01-06. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2014.
{{cite report}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "TV ownership". Government of India. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Dravida Nadu: What If The South Seceded From The Republic Of India?". IBT Times. 10 மார்ச்சு 2013. http://www.ibtimes.com/dravida-nadu-what-if-south-seceded-republic-india-1413910.
- ↑ "Who is doing better?". இந்தியா டுடே. 7 மார்ச்சு 2013. http://indiatoday.intoday.in/story/north-india-vs-south-india-who-is-doing-better-report-says-south-india/1/269761.html.
- ↑ "Missing targets". Frontline. 12 மார்ச்சு 2014. http://www.frontline.in/other/data-card/missing-targets/article5740024.ece.
- ↑ Millenium Development Goals – Country report 2015 (PDF) (Report). Government of India. Archived from the original (PDF) on 13 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2016.
- ↑ Caldwell, Robert (1998). A comparative grammar of the Dravidian or South-Indian family of languages (3rd ed.). New Delhi: Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0117-8.
- ↑ Nilakanta Sastri, K.A. (1996). A History of South India (7th ed.). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-560686-7.
- ↑ Baldridge, Jason. Lingusitic and Social Characteristics of Indian English. University of Edinburgh. http://www.languageinindia.com/junjul2002/baldridgeindianenglish.html. பார்த்த நாள்: 22 ஜூலை 2015.
- ↑ Religious statistics, Census 2011 (Report). Government of India. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூலை 2015.
{{cite report}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Fatihi, A.R.. Urdu in Andhra Pradesh. Language in India இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150713110121/http://www.languageinindia.com/april2003/urduinap.html. பார்த்த நாள்: 22 ஜூலை 2015.
- ↑ Upadhyaya, Padmanabha (1973). Coastal Karnataka: Studies in Folkloristic and Linguistic Traditions of Dakshina Kannada Region of the Western Coast of India. Govind Pai Samshodhana Kendra. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86668-06-3.
- ↑ "India sets up classical languages". BBC news. 17 செப்டம்பர் 2004. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3667032.stm.
- ↑ "Tamil to be a classical language". தி இந்து (Chennai, India). 18 செப்டம்பர் 2004. http://www.thehindu.com/2004/09/18/stories/2004091806530100.htm.
- ↑ Ministry of Tourism and Culture, Government of India. "Declaration of Telugu and Kannada as classical languages". செய்திக் குறிப்பு.
- ↑ "Classical status for Malayalam". தி இந்து (Thiruvananthapuram, India). 24 மே 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/classical-status-for-malayalam/article4744630.ece.
- ↑ Abstract of speakers' strength of languages and mother tongues (Report). Government of India. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச்சு 2016.
- ↑ Population By Religious Community – Tamil Nadu (XLS) (Report). Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2011. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2015.
{{cite report}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Ancient Indians made 'rock music'". BBC News. 19 மார்ச்சு 2004. http://news.bbc.co.uk/2/hi/science/nature/3520384.stm.
- ↑ Webster, Merriam (1999). Encyclopedia of World Religions. Merriam-Webster. p. 484. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87779-044-0.
- ↑ Eliade, Mircea; Adams, Charles J. (1993). The Encyclopedia of Religion. Mcmillan. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-897135-3.
- ↑ Singh, Janak (2010). World religions and the new era of science. Xlibris Corporation. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4535-3572-1.
- ↑ Wallis, Graham Harvey; Wallis, Robert (2010). The A to Z of shamanism. Lanham, Md.: Scarecrow Press. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-7600-2. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2014.
- ↑ மேaram, Shail; Pandian, M. S. S.; Skaria, Ajay (2005). Muslims, Dalits and the Fabrications of History. Permanent Black and Ravi Dayal Publisher. pp. 39–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7824-115-9.
- ↑ Fahlbusch, Erwin (2008). The Encyclopedia of Christianity. Vol. 5. Eerdmans Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-2417-2.
- ↑ Slapak, Orpa (2003). The Jews of India: A Story of Three Communities. The Israel Museum, Jerusalem. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 965-278-179-7.
- ↑ Henry, James (1977). The Jews in India and the Far East. Greenwood Press. p. 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8371-2615-0.
- ↑ Katz, Nathan; Goldberg, Ellen S (1993). The Last Jews of Cochin: Jewish Identity in Hindu India. Univ. of South Carolina Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87249-847-6.
- ↑ Krishna, K.L. (செப்டம்பர் 2004) (PDF). Economic Growth in Indian States. ICRIER. http://www.icrier.org/pdf/wp144.pdf. பார்த்த நாள்: 22 ஜூலை 2015.
- ↑ "Gross State Domestic Product (GSDP) at Current Prices" (PDF). Planning Commission Government of India. Archived from the original (PDF) on 15 ஜூலை 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 69.0 69.1 "Special Economic Zones" (PDF). Government of India. Archived from the original (PDF) on 28 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2016.
- ↑ "India: A Country Study: Crop Output". அமெரிக்கக் காங்கிரசு நூலகம், வாசிங்டன், டி. சி. செப்டம்பர் 1995. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச்சு 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Farooq, Omer (3 சூன் 2004). "Suicide spree on India's farms". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3769981.stm.
- ↑ Yeboah, Salomey (8 மார்ச்சு 2005), Value Addition to Coffee in India, Cornell Education, archived from the original on 19 செப்டம்பர் 2006, பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2005
{{citation}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Production of Spice by countries". UN Food & Agriculture Organization. 2011. Archived from the original on 13 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2013.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Possibilities for improving vehicular traffic flow explored". தி இந்து. 8 செப்டம்பர் 2015. http://www.thehindu.com/news/national/tamil-nadu/possibilities-for-improving-vehicular-traffic-flow-explored/article7627408.ece.
- ↑ "Turmeric at an all-time high price". தி எகனாமிக் டைம்ஸ். 29 திசம்பர் 2009. http://articles.economictimes.indiatimes.com/2009-12-29/news/28384976_1_turmeric-lakh-bags-quintal.
- ↑ "Sericulture note". Government of Tamil Nadu. Archived from the original on 27 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச்சு 2016.
- ↑ "Tamil Nadu Poultry Industry Seeks Export Concessions". Financial Express. 28 சூன் 2013 இம் மூலத்தில் இருந்து 2015-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402114342/http://archive.financialexpress.com/news/tamil-nadu-poultry-industry-seeks-export-concessions/88614.
- ↑ "Maharashtra tops FDI equity inflows". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 1 திசம்பர் 2012. http://www.business-standard.com/article/economy-policy/after-delhi-maharastra-tn-received-highest-fdi-equity-inflows-in-fy15-114113000130_1.html.
- ↑ "TN software exports clock 32 pc growth". பிசினஸ் லைன். 7 மே 2006. http://www.thehindubusinessline.com/todays-paper/tp-info-tech/tn-software-exports-clock-32-pc-growth/article1733052.ece.
- ↑ "Madras, the Detroit of South Asia". ரெடிப்.காம். 30 ஏப்ரல் 2004. http://www.rediff.com/money/2000/oct/25cars.htm.
- ↑ "India's Gems and Jewellery Market is Glittering". Resource Investor. Archived from the original on 26 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Lok Sabha Elections 2014: Erode has potential to become a textile heaven says Narendra Modi". DNA India. 17 ஏப்ரல் 2014. http://www.dnaindia.com/india/report-lok-sabha-elections-2014-erode-has-potential-to-become-a-textile-heaven-says-narendra-modi-1979317.
- ↑ "State wise number of cotton mills" (PDF). Confederation of Textile Industry. Archived from the original (PDF) on 2016-01-25. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2016.
- ↑ India Tourism Statistics at a Glance (PDF), Ministry of Tourism, Government of India, archived from the original (PDF) on 2017-10-09, பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2018
{{citation}}
: Check date values in:|access-date=
(help) - ↑ The World Factbook, CIA, archived from the original on 2008-06-11, பார்க்கப்பட்ட நாள் 22 ஜூலை 2015
{{citation}}
: Check date values in:|access-date=
(help)