உள்ளடக்கத்துக்குச் செல்

தூக்கு குண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு தூக்கு குண்டு

தூக்கு குண்டு (plumb bob, or plumb-line) என்பது பம்பரம் போன்று கீழே கூரான முனையைக் கொண்ட, இரும்பினாலான ஒரு கனமான பொருளாகும். இவை ஒரு கம்பியில் அல்லது நூலால் கட்டப்பட்டு அந்த நூலின் மறுமுனை செங்குத்து அச்சான ஒரு குச்சி அல்லது மரக்கட்டையில் செல்லும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். கிடைமட்ட அச்சில் மட்டம் பார்க்க ரசமட்டம் (spirit level) உதவுவது போல், தூக்கு குண்டு செங்குத்து அச்சில் மட்டம் பார்க்க உதவுகிறது. தொடக்க காலத்தில் தூக்குக் குண்டானது கல்லால் உருவாக்கப்பட்டது. இன்று இரும்பு, பித்தளை எனப் பல விதமான உலோகங்கள் கொண்டு தூக்குக் குண்டுகள் உருவாக்கப்படுகின்றன.[1]

பண்டைய எகிப்து காலத்திலிருந்து இந்த கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.[2] நில அளவியலில் இக்கருவி புவியீர்ப்பு தாழ்ப்புள்ளியைக் (nadir) நிறுவிட உதவுகிறது. இவை செங்குத்தாக மட்டமாக்க வேண்டிய ஆய்வுக்கருவிகள், தியோடலைட்டுகள், அளக்கும் நாடா போன்ற பல கருவிகளுடன் பயன்படுத்தப்படுகிறது. நில அளவியல் குறியீடுகளை (survey marker) பதிக்கும் இடத்தை அடையாளங் காண உதவுகிறது.[3]

சொற்பிறப்பியல்

[தொகு]
தூக்கு குண்டுக் கோல் பற்றி காசல்சின் (Cassells) தச்சு வேலை மற்றும் கட்டுமானவியல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள படம்
தூக்கு குண்டுச் சதுரம் பற்றி காசல்சின் (Cassells) தச்சு வேலை மற்றும் கட்டுமானவியல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள படம்

பிளம்பம் (plumbum) என்ற இலத்தீன் மொழி சொல்லிருந்தும், பிளம்ப் (plomb) என்ற பிரெஞ்சு மொழி சொல்லிருந்தும் பெறப்பட்டது. தூக்கு குண்டு ஆரம்பத்தில் காரீயத்தால் [lead (Chemical Name: Plumbum)]செய்யப்பட்டதால் இப்பெயர் பெற்றது. அலோம்ப் (aplomb) என்ற பெயர்ச் சொல்லுக்கு செங்குத்தாக நிற்பவை என்று பொருள் ஆகும்.

பயன்பாடு

[தொகு]

நவீன காலம் வரை, மிக உயரமான கட்டிடங்களின் செங்குத்துத்தன்மையைக் காண தூக்கு குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

அளவுகோலுடன் கூடிய விட்டமானியில் பொருத்தப்பட்ட தூக்கு குண்டு

தூக்கு குண்டு, ஒரு விட்டமானியுடன் (inclinometer) பொருத்தப்படும் போது, குத்துக்கோட்டுடன் ஏற்படுத்தும் கோணங்களைக் காண பயன்படுகிறது. ஆரம்ப கால வானளாவிய கட்டிடங்களில் (skyscrapers) உள்ள மின்தூக்கியின் சுழல் தண்டுடன் (elevator shafts) கனமான தூக்கு குண்டுகள் பிணைக்கப்பட்டிருக்கும். தூக்கு குண்டுகள், தண்ணீர் கொள்கலனுடனும் (உறையும் வெப்பநிலைக்கு மேலே), கழிவுச் சர்க்கரைக் பாகு (molasses) கொள்கலனுடனும், அதிகப் பாகுத்தன்மை கொண்ட திரவக் கொள்கலனுடனும் பயன்படுத்தப்படுகின்றன.[4]

சீரற்ற உருவ அமைப்பின் புவியீர்ப்பு மையம் காணுதல்

[தொகு]

சீரற்ற உருவ அமைப்பின் புவியீர்ப்பு மையம் காண உதவுகிறது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. எஸ்.வி.எஸ். (14 ஏப்ரல் 2018). "மட்டம் பார்க்கும் குண்டு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. Denys A. Stocks. Experiments in Egyptian archaeology: stoneworking technology in ancient Egypt. Routledge; 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-30664-5. p. 180.
  3. Brinker, Russell Charles; Minnick, Roy, eds. (1995). The surveying handbook. Springer. pp. 93–94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-98511-9.
  4. Staley, W. W.. Introduction to mine surveying,. 2nd ed. Stanford University, Calif.: Stanford University Press, 1964. Print. 138.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூக்கு_குண்டு&oldid=3846631" இலிருந்து மீள்விக்கப்பட்டது