திசம்பர் 14
Appearance
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 14 (December 14) கிரிகோரியன் ஆண்டின் 348 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 349 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 17 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 557 – கான்ஸ்டண்டினோபில் நகரம் நிலநடுக்கத்தினால் பெரும் சேதத்துக்குள்ளானது.
- 1287 – நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர்சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1542 – இளவரசி மேரி ஸ்டுவர்ட் பிறந்த ஒரே வாரத்தில் முதலாம் மேரி என்ற பெயரில் இசுக்கொட்லாந்தின் அரசியாக முடிசூனாள்.
- 1782 – மொண்ட்கோல்பியர் சகோதரர்கள் ஆளில்லா வெப்பக்காற்று பலூனை முதன் முதலில் பிரான்சில் சோதித்தனர். 2 கிமீ உயரம் வரை இது பறந்தது.
- 1812 – உருசியா மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
- 1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானிய அரச கடற்படை லூசியானாவின் புரோக்னி ஆறுப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
- 1819 – அலபாமா அமெரிக்காவின் 22-வது மாநிலமாக இணைந்தது.
- 1845 – ஆங்கிலேய-சீக்கியப் போர் ஆரம்பமானது.[1]
- 1884 – இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.[2]
- 1899 – யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.[2]
- 1900 – குவாண்டம் இயங்கியல்: மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய தனது பிளாங்கின் விதியை நிறுவினார்.
- 1902 – சான் பிரான்சிஸ்கோ முதல் ஒனலுலு வரையான முதலாவது பசிபிக் தந்திக் கம்பிகள் அமைக்கப்பட்டன.
- 1903 – அமெரிக்காவின் வட கரொலைனா மாநிலத்தில் ரைட் சகோதரர்கள் தமது ரைட் பிளையர் வானூர்தியை முதல் தடவையாக சோதித்தனர்.
- 1907 – அமெரிக்காவின் தாமசு லோசன் என்ற கப்பல் சில்லி தீவுகளில் மூழ்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
- 1909 – ஆத்திரேலியத் தலைநகரை அமைப்பதற்கான நிலத்தை நியூ சவுத் வேல்சு மாநிலம் ஆத்திரேலிய பொதுநலவாய அரசுக்கு வழங்கியது.
- 1911 – ருவால் அமுன்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றது.
- 1918 – செருமனிய இளவரசர் பிரீட்ரிக்கு கார்ல் வொன் எசென் முதலாம் வைனோ என்ற பெயரில் பின்லாந்து மன்னராக அந்நாட்டு நாடாளுமன்றம் தெரிவு செய்தது.
- 1918 – போர்த்துகல் அரசுத்தலைவர் சிதோனியோ பாயிசு கொல்லப்பட்டார்.
- 1918 – ஐக்கிய இராச்சியத்தில் முதல் தடவையாக பெண்கள் நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
- 1939 – பனிக்காலப் போர்: பின்லாந்தை சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்ததை அடுத்து நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது.
- 1940 – கலிபோர்னியா, பெர்க்லியில் புளுட்டோனியம் (Pu-238) முதல் தடவையாகப் பிரித்தெடுக்கப்பட்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் தாய்லாந்துடன் இணைந்து போரிட உடன்பட்டது.
- 1941 – உக்ரைனின் கார்க்கிவ் நகரின் நாசி ஜேர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1946 – ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.
- 1955 – அல்பேனியா, ஆஸ்திரியா, பல்காரியா, கம்போடியா, இலங்கை, பின்லாந்து, அங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, யோர்தான், லாவோசு, லிபியா, நேபாளம், போர்த்துகல், உருமேனியா, எசுப்பானியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தன.
- 1962 – நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளிக் கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
- 1963 – கலிபோர்னியா, லாசு ஏஞ்சலசு நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் ஐவர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.
- 1971 – வங்காளதேச விடுதலைப் போர்: கிழக்குப் பாக்கித்தானைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான அறிவாளிகள் பாக்கித்தான் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1981 – அரபு-இசுரேல் முரண்பாடு: இசுரேலின் நாடாளுமன்றம் ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்றுகளில் இசுரேலியச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
- 1992 – சியார்சியாவில் துகுவார்செலி என்ற இடத்தில் இருந்து அப்காசியா: அகதிகளை ஏற்றிச் சென்ற உலங்குவானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் 25 குழந்தைகள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர்.
- 2003 – சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை அமெரிக்கத் தலைவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
- 2003 – பாக்கித்தான் அரசுத்தலைவர் பெர்வேஸ் முசாரப் கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.
- 2004 – தெற்கு பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.
- 2012 – அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் சாண்டி ஊக் தொடக்கப்பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1503 – நோஸ்ராடாமஸ், சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர் (இ. 1566)
- 1546 – டைக்கோ பிராகி, தென்மார்க்கு வானியலாளர், வேதியியலாளர் (இ. 1601)
- 1895 – ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் (இ. 1952)
- 1895 – போல் எல்யூவார், பிரான்சியக் கவிஞர் (இ. 1952)
- 1896 – எம். அழகப்ப மாணிக்கவேலு, தமிழக அரசியல்வாதி (இ. 1996)
- 1908 – பாலூர் து. கண்ணப்பர், தமிழறிஞர், எழுத்தாளர்; உரையாசிரியர் (இ. 1971)
- 1918 – பி. கே. எஸ். அய்யங்கார், இந்திய யோகா பயிற்சியாளர், எழுத்தாளர் (இ. 2014)
- 1924 – ராஜ்கபூர், பாக்கித்தானிய-இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. [[1988
- 1932 – நாவேந்தன், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2000)
- 1934 – சியாம் பெனகல், இந்திய இயக்குநர்
- 1934 – ரெ. சண்முகம், மலேசியக் கலைஞர், கவிஞர் (இ. 2010)
- 1946 – மறைமலை இலக்குவனார், தமிழ்ப் பேராசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், நூலாசிரியர்
- 1946 – சஞ்சய் காந்தி, இந்திய அரசியல்வாதி (இ. 1980)
- 1947 – டில்மா ரூசெஃப், பிரேசிலின் 36வது அரசுத்தலைவர்
- 1953 – விஜய் அமிர்தராஜ், இந்திய தென்னிசு வீரர்
- 1960 – ஜேம்ஸ் கோமி, அமெரிக்கப் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியக இயக்குநர்
- 1965 – வசந்த், தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர்
- 1966 – எல் தோர்னிங் இசுமிட், தென்மார்க்கின் 41வது பிரதமர்
- 1982 – சமீரா ரெட்டி , இந்திய நடிகை
- 1982 – ஆதி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1984 – ரானா தக்குபாடி, இந்திய நடிகர், தயாரிப்பாளர்
- 1988 – வனேசா ஹட்ஜன்ஸ், அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
- 1332 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1326)
- 1591 – சிலுவையின் புனித யோவான், எசுப்பானிய மதகுரு, புனிதர் (பி. 1542)
- 1799 – சியார்ச் வாசிங்டன், அமெரிக்காவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1732)
- 1953 – வி. ஐ. முனுசாமி பிள்ளை, தமிழக அரசியல்வாதி (பி. 1889)
- 1959 – சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் (பி. 1879)
- 1989 – ஆந்திரே சாகரவ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1921)
- 2006 – அன்ரன் பாலசிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (பி. 1938)
- 2009 – வி. என். சுந்தரம், தமிழக நாடக, திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் (பி. 1918)
- 2011 – வி. எஸ். துரைராஜா, இலங்கைக் கட்டிடக் கலைஞர், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1927)
- 2013 – பீட்டர் ஓ டூல், பிரித்தானிய-ஐரிய நடிகர் (பி. 1932)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ 2.0 2.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)