உள்ளடக்கத்துக்குச் செல்

தாமஸ் சி. ஜெர்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமஸ் சி. ஜெர்டன்
Thomas Caverhill Jerdon
பிறப்பு(1811-10-12)அக்டோபர் 12, 1811
இறப்புதிசம்பர் 12, 1872(1872-12-12) (அகவை 61)
அறியப்படுவதுதாவரவியல்

தாமஸ் சி. ஜெர்டன் என்கிற தாமஸ் கேவரிஹில் ஜெர்டான் (12 அக்டோபர் 1811 - 12 சூன் 1872) என்பவர். ஒரு விலங்கியளாளர், தாவரவியளாளர், மருத்துவர் ஆவார். இவர் இந்தியாவில் உள்ள பறவைவைகள், தாவரங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து நூல்களை எழுதியவர். இவர் பணிகளை பாராட்டும் விதமாக இவர் பெயரை சில தாவரங்களுக்கும், பறவைகளுக்கும் (எ. கா. ஜெர்டன் கோர்சர்) பறவையியலாளர்கள் வைத்துள்ளனர்.[1]

பிறப்பு

[தொகு]

இவர் இங்கிலாந்தின் டெர்ஹாம் கவுண்டியில் பிறந்தவர். இவருக்கு சிறுவயதிலேயே பறவைகள், தாவரங்கள் ஆகியவற்றின் மீது ஆர்வம் இருந்தது. மருத்துவம் பயின்ற இவர் கிழக்கிந்திய கம்பெனியில் அறுவை சிக்கிச்சை மருத்துவராக இந்தியாவுக்கு 1836இல் வந்தார்.[2] அன்றைக்கு சென்னை மாகாணப்பகுதியாக இருந்த நெல்லூர் பகுதியிலும், பின்னர் தலைச்சேரியிலும் பகுதியிலும் பணிபுரிந்தார். புலோரா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இந்தியாவில்

[தொகு]

இந்தியவுக்கு வந்த பிறகு பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களைச் சேகரிக்கத் துவங்கினார். துவக்கத்தில் தான் சேகரித்த பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களை அடையாளம் காண ஸ்காட்லாந்து பறவையியலாளர் வில்லியம் ஜார்டைனுக்கு கப்பலில் அனுப்பிவைத்தார். கெடுவாய்ப்பாக அவரிடம் போய் சேர்வதற்குள் இந்த பதப்படுத்தப்பட்ட பறவை உடல்கள் பூச்சிகளால் சிதைந்துபோனது. இதன் பிறகு வேறுவழியின்றி தான் சேகரிக்கும் பதப்படுத்தப்பட்ட உயிரினங்களையும், தான் உற்றுநோக்குவதையும் குறிப்பெடுக்கத் துவங்கினார். இவரின் குறிப்புகளைக் கொண்டு 'கேட்லாக் ஆப் த இந்தியன் பெனின்சுலா' என்ற நூலை 1839-1840 காலகட்டத்தில் வெளியிட்டார். இதில் 420 பறவைகள் விவரிக்கப்பட்டிருந்தன. இதற்கு முன்னதாக டபிள்யூ. எச். சைக்ஸ் என்பவர் 1830இல் இந்திய பறவைகள் பற்றி புத்தகம் வெளியிட்டிருந்தார். அதில் இடம் பெற்ற பறவைகளைவிட ஜெர்டனின் புத்தகத்தில் இருமடங்கு பறவைகள் இடம்பெற்றிருந்நது சிறப்பு. 1847இல் சென்னையில் இல்லஸ்ட்ரேஷன்ஸ் ஆப் இந்தியன் ஆர்னிதாலஜி என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

இங்கிலாந்து திரும்புதல்

[தொகு]

1862இல் ஜெர்டன் பணி ஒய்வுபெற்று இங்கிலாந்து திரும்பினார். அங்கே இரண்டு தொகுதிகளாக 'தி பேர்ட்ஸ் ஆப் இந்தியா' என்ற நூலை வெளியிட்டார். இந்தியாவில் பறவைகளைப்பற்றி இதற்குப் பிறகு வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கு இந்த நூலே முன்னோடியாக அமைந்தது.

குறிப்புகள்

[தொகு]