உள்ளடக்கத்துக்குச் செல்

தாமசு யங் (அறிவியலாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமசு யங்

பிறப்பு (1773-06-13)13 சூன் 1773
மில்வெர்டன், சாமர்செட், இங்கிலாந்து
இறப்பு10 மே 1829(1829-05-10) (அகவை 55)
இலண்டன், இங்கிலாந்து
துறைஇயற்பியல்
உளவியல்
பண்டைய எகிப்திய வரலாறு
Alma materஎடின்பர்க் மருத்துவப் பள்ளி பல்கலைக்கழகம்
காட்டிங்கன் பல்கலைக்கழகம்
இம்மானுவேல் கல்லுாரி, கேம்பிரிட்ஜ்
அறியப்பட்டதுஒளியின் அலைக்கொள்கை
யங்கின் குறுக்கீட்டு சோதனை
சிதறல் பார்வை (கண்)
யங்–எல்ம்ஹோல்ட்சு கொள்கை
யங் மனப்போக்கு
யங்கின் குணகம்

தாமசு யங் (Thomas Young) (13 சூன் 1773 – 10 மே 1829) ஒரு பிரித்தானிய பல்துறை அறிஞர் மற்றும் மருத்துவர் ஆவார். யங் அறிவியல் துறையில் பார்வை, ஒளி, திண்ம இயற்பியல், ஆற்றல், உடலியங்கியல், மொழி மற்றும் இசை ஒத்திசைவு தொடர்பாக தனது குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.  

அவர் எகிப்திய படுகைத்தளக்குறியீடுகளில் (குறிப்பாக ரோசெட்டாக் கல்லில்) ஜீன் பிரான்கோயிசு இவருடைய பணியை விரிவாக்கம் செய்வதற்கு முன்னதாகவே, உள்ளுணர்வின்படியான, அசலான, பல புதுமைகளைச் செய்துள்ளார்.[1] இவர் வில்லியம் எர்செல், எரமான் வான் எல்ம்ஹோல்ட்சு, ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல், மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோரால் குறிப்பிடப்படுகிறார். "அனைத்தையும் அறிந்திருந்த கடைசி மனிதர்" என யங் குறிப்பிடப்படுகிறார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இங்கிலாந்தின் சாமர்செட்டிலுள்ள மில்வெர்டனில் நண்பர் கழகக் கோட்பாட்டை பின்பற்றுபவர்களின் குடும்பமொன்றில் 1773 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் குடும்பத்தில் பிறந்த பத்து குழந்தைகளில் மூத்த குழந்தை இவரேயாவார்.[2] தனது பதினானகாம் வயதில் யங் கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழிகளைக் கற்றார். பிரெஞ்சு, இத்தாலி, ஹெப்ரூ, செருமானியம், அராமைக், சிரியாக், சமாரிடன், அராபியம், பெர்சியன், துருக்கி, அமாரிக் ஆகிய மொழிகளுடன் நன்கு பழக்கப்பட்டவரானார்.[3] 1792 ஆம் ஆண்டில், யங் இலண்டனில் புனித பார்த்தோலோமீவ் மருத்துவமனையில் மருத்துவம் பயிலத் தொடங்கினார். 1794 ஆம் ஆண்டில், எடின்பெர்க் மருத்துவக் கல்லூரிக்கும், பின்னர், ஓராண்டு கழித்து, செருமனி, சாக்சோனி, காட்டிங்கன் பல்கலைக்கழகத்திற்கும் சென்றார். அங்கு, அவர் 1796 ஆம் ஆண்டில் மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்.[4] 1797 ஆம் ஆண்டில் அவர் கேம்பிரிட்ஜ் இம்மானுவேல் கல்லூாரிக்குச் சென்றார்.[5]

அதே வருடத்தில் அவர் தனது பெரிய மாமா ரிச்சர்டு பிராக்லெஸ்பியின் தோட்டத்தை மரபுவழியாக உரிமையாகப் பெற்றார். அது அவரை பொருளாதாரரீதியாக சார்புத்தன்மையிலிருந்து விடுவித்தது. 1799 ஆம் ஆண்டில் அவர் தனது 48 வயதில் இலண்டன் வெல்பெக் தெருவில் தன்னை ஒரு மருத்துவராக நிறுவினார். யங் தனது பல கல்விசார்ந்த கட்டுரைகளை மருத்துவராகவுள்ள தனது புகழை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு பெயரின்றியே வெளியிட்டார்.[6]

1801 ஆம் ஆண்டில், யங் இயற்கை தத்துவத்தில், முக்கியமாக இயற்பியல் துறையில் இராயல் நிறுவனத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[7] இரண்டு ஆண்டுகளில், 91 விரிவுரைகளை ஆற்றி முடித்தார். 1802 ஆம் ஆண்டில், இராயல் சொசைட்டியின் வெளிநாட்டு செயலாளராக நியமிக்கப்பட்டார்.[8] இவர் 1794 ஆம் ஆண்டில், சக ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கபபட்டார்.[9] தனது மருத்துவப்பணி பாதிக்கப்பட்டு விடக் கூடாதென்பதற்காக, 1803 ஆம் ஆண்டில் தனது பேராசிரியர் பதவியை  துறந்தார். 1807 ஆம் ஆண்டு இவரது விரிவுரைகள் இயற்கை தத்துவத்தில் விரிவுரைகள் என்ற தலைப்பில் பின்னர் வரவிருக்கும் கோட்பாடுகள் குறித்து முன் கருத்துகளுடன் தொகுத்து வெளியிடப்பட்டது.[10] 1811 ஆம் ஆண்டில் யங் புனித ஜார்ஜ் மருத்துவமனையில் மருத்துவரானார். 1814 ஆம் ஆண்டில்  இலண்டனை ஒளியூட்ட பயன்படுத்தப்பட்ட வாயு விளக்குகளின் அபாயங்களைப பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.[11] 1816 ஆம் ஆண்டில் வினாடியின் துல்லியமான காலத்தை (வினாடி ஊசல்) உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் செயலாளரானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dictionary of National Biography
  2. "ThomasYoung". School of Mathematics and Statistics  University of St Andrews, Scotland. பார்க்கப்பட்ட நாள் 30 August 2017. {{cite web}}: no-break space character in |publisher= at position 38 (help)
  3. Singh, Simon (2000). The Code Book: The Science of Secrecy from Ancient Egypt to Quantum Cryptography. Anchor. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-49532-3.
  4. "Thomas Young (1773-1829)". Andrew Gasson. பார்க்கப்பட்ட நாள் 30 August 2017.
  5. "Young, Thomas (YN797T)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  6. Robinson, Andrew (2006). The Last Man Who Knew Everything: Thomas Young, the Anonymous Polymath Who Proved Newton Wrong, Explained How We See, Cured the Sick and Deciphered the Rosetta Stone. Oneworld Publications. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1851684946.
  7. "Ri Professors". Royal Institution. பார்க்கப்பட்ட நாள் 30 August 2017.
  8. "THOMAS YOUNG (1773 - 1829)". Emmanuel College. Archived from the original on 31 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 August 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Portrait of Thomas Young". Royal Society. பார்க்கப்பட்ட நாள் 30 August 2017.
  10. Morgan, Michael (2002). "Thomas Young's Lectures on Natural Philosophy and the Mechanical Arts". Perception 31: 1509–1511. doi:10.1068/p3112rvw. http://journals.sagepub.com/doi/pdf/10.1068/p3112rvw. 
  11. Weld, Charles Richard (2011). A History of the Royal Society: With Memoirs of the Presidents. Cambridge University Press. pp. 235–237. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781108028189.