தாசோஸ்
தாசோஸ்
Περιφερειακή Ενότητα / Δήμος Θάσου | |
---|---|
பிராந்திய அலகு | |
கிழக்கு மாசிடோனியா மற்றும் திரேசிற்குள் தாசோஸ் | |
ஆள்கூறுகள்: 40°41′N 24°39′E / 40.683°N 24.650°E | |
நாடு | கிரேக்கம் |
பிராந்தியம் | கிழக்கு மாசிடோனியா மற்றும் திரேஸ் |
தலைநகரம் | தாசோஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 380.097 km2 (146.756 sq mi) |
ஏற்றம் | 1,205 m (3,953 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 13,770 |
• அடர்த்தி | 36/km2 (94/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (EET) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 640 04 |
தொலைபேசி குறியீட்டு எண் | 25930 |
வாகன பதிவு எண் | ΚΒ |
இணையதளம் | www |
தாசோஸ் (Thasos அல்லது Thassos கிரேக்கம்: Θάσος ) என்பது ஒரு கிரேக்க தீவு ஆகும். புவியியல் ரீதியாக இது வடக்கு ஏஜியன் கடலின் ஒரு பகுதியாகும். ஆனால் நிர்வாக ரீதியாக கவாலா பிராந்திய அலகு, மாசிடோனியாவின் ஒரு பகுதியாகும். இது வடக்கே உள்ள பெரிய கிரேக்க தீவாகும். மேலும் கிரேக்கத் தீவுகளில் பரப்பளவில் 12 வது பெரிய தீவாகும். தீவில் உள்ள மிகப்பெரிய நகரத்தின் பெயர் தாசோஸ் (அதிகாரப்பூர்வமாக லிமெனாஸ் தாசோ, "போர்ட் ஆஃப் தாசோஸ்" என அழைக்கப்படுகிறது) ஆகும். இந்த நகரம் தீவின் வடக்குப் பகுதியில், கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதிக்கு எதிரே அமைந்துள்ளது. மேலும் இது கெரமோட்டியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர்கள் (6 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. தசேஸ் தீவு பழங்காலத்திலிருந்தே அதன் மிதவெப்ப நீர் ஊற்று குளியல் வளாகங்களுக்காக அறியப்படுகிறது.
தாசோசின் பொருளாதாரமானது மரம் (காடுகள் நிறைந்தது), பளிங்கு சுரங்கங்கள், ஆலிவ் எண்ணெய், தேன் ஆகியவற்றை நம்பியுள்ளது. மற்ற கிரேக்க தீவுகளின் அளவிற்கு இல்லாவிட்டாலும், 1960களில் இருந்து சுற்றுலாவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.