உள்ளடக்கத்துக்குச் செல்

தன்விருப்புக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளிப்படம் ஒரு சிறுவன் நீர்நிலையில் குதிப்பதைக் கட்டுகிறது. மாந்தர் தங்களின் தற்சார்பு துணிபின்படி முடிவு (எ.கா:நீரில் குதித்தல்) எடுக்கின்றனர் என பரவலாக கருதப்படுகிறது.

தற்சார்பு துணிவு (Free will) அல்லது தன்விருப்புக் கொள்கை என்பது கட்டற்ற முறையில் பிற தடங்கல் ஏதுமின்றி வேறுபட்ட செயல்பாட்டு வழிமுறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாகும்.[1][2]

தற்சார்பு துணிபு என்பது ஒழுக்கப் பொறுப்பு, பாராட்டல், குற்ற உணர்வு, பாவம், பிற தற்சார்பு துணிபுவழித் தேர்வில் மேற்கொள்ளும் செயல்களோடு மட்டுமே சார்ந்த தீர்வுகள் ஆகியவற்றோடு நெருக்கமாக பின்னப்பட்டிருக்கிறது.இது அறிவுரை, ஏற்கவைத்தல், விளக்குதல், தடுத்து நிறுத்தல் ஆகியவற்றோடும் தொடர்புடையதாகும். மரபாக, தற்சார்பு துணிபால் எடுக்கப்பட்ட செயல்கள் மட்டுமே பாராட்டப்படுகிறது அல்லது தூற்றப்படுகிறது. தற்சார்பு துணுவழித் தேர்வு வாய்ப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் பற்றிய பல வேறுபட்ட அக்கறைகள் உள்ளன. இவை இவற்றை எப்படி கருதிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அவை வேறுபடுவதால். விவாத்த்துக்கு உரியனவாக அமைகின்றன.

சிலர் தற்சார்பு துணிபைக் கடந்தகால நிகழ்ச்சிகளில் முன்பு தீர்மானித்த முடிவு ஏதும், அமையாதவற்றில் தேர்வு செய்யும் திறமையாகக் கருதுகிறார்கள். தீர்மானவாதம், நிகழ்ச்சிகளில் தற்சார்பு துணிபோடு பொருந்தாத ஒரேயொரு வழிமுறை மட்டும் தான் வாய்ப்புள்ளது எனப் பரிந்துரைக்கிறது. இந்தச் சிக்கல் பண்டைய கிரேக்க மெய்யியலில் இனங்காணப்பட்டுள்ளது;".[3][4]மெய்யியல் விவாதத்தில் இதற்கு முதன்மை வாய்ந்த கவனம் குவிக்கப்படுகிறது. தற்சார்பு துணிபு தீர்மான வாதத்தோடு பொருந்தாது எனும் கண்ணோட்டம் பொருந்தாமை வாதம் எனப்படுகிறது. இது தாராளவாதத்தோடு, அதாவது தீர்மானவாதம் பொய்யானது; தற்சார்பு துணிபு ஓரளவு இயல்வதே எனும் பார்வையோடு ஒத்துப்போகிறது; தீர்மானவாதமே உண்மையானது, தற்சார்பு துணிபு என்பது பொய்யானது எனக்கருதும் வன்தீர்மானவாதம், வன்பொருந்தாமை வாதத்தோடு ஒத்துப்போகிறது; பின்னது தீர்மானவாதம் மட்டுமல்ல, அதன் எதிர்மறையுங்கூட தற்சார்பு துணிபோடு பொருந்தாது எனக் கருதுகிறது; எனவே, தற்சார்பு துணிபு எந்நிலையிலும் தீர்மானவாதத்தைப் பொறுத்தவரையில் நிகழவே முடியாதது ஆகும்.

மாறாக, பொருந்துமைவாதிகள் தற்சார்பு துணிபு தீர்மானவாதத்தோடு பொருந்தக் கூடியதே என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். சில பொருந்துமைவாதிகளோ, தற்சார்பு துணிபுக்கு தீர்மான வாதம் கட்டாயம் தேவை எனக்கூறி, தேர்வு என்பது செயல்பாட்டுக்கு ஒரு வழிமுறைக்கான தன்விருப்பமே; இதற்கு, தனது தேர்வு எப்படிப்பட்ட விளைவைத் தரும் என்பதைத் தேர்வாளர் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும்.[5][6] எனவே பொருந்துமைவாதிகள் தற்சார்பு துணிபு சார்ந்த, பொருந்துமைவாதிகளுக்கும் தாராளவாதிகளுக்கும் இடையிலான தற்சார்பு துணிபையும் தீர்மானவாதத்தையும் பற்றிய விவாதம் பொய்மைவாய்ந்த முரண்புதிரே ஆகும் எனக் கருதுகின்றனர்.[7]பல்வேறுவகைப் பொருந்துமைவாதிகள் தற்சார்பு துணிபுக்கான பல வரையறைகளைத் தருகின்றனர்; இதன்விளைவாக, இந்தச் சிக்கல் தொடர்பான பலவகைப்பட்ட கட்டுத்தளைகளினை அவர்கள் காண்கின்றனர். செவ்வியல் பொருந்துமைவாதிகள் தற்சார்பு துணிபைச் செயல்பாட்டு விடுதலையாக மட்டுமே கருதினர்; ஒருவர் தன் செயல்பாட்டுத் துணிபில் விடுதலையாக இருந்தால், வழக்கத்துக்கு மாறாக வேறுபட்ட வகையில் செயல்பட முனைந்தால், அப்படி அவர் எந்தப் புறநிலைக் கட்டுத்தளையுமின்றி செயல்படலாம். நிகழ்கால பொருந்துமைவாதிகள் மாறாக தற்சார்பு துணிபை உளவியல் திறமையாகக் கருதி, ஒருவர் தன் நடத்தையை முதல்-விளைவுத் துலங்கலுக்கு ஏற்ப வழிபடுத்திக்கொள்கிறார் எனக் கூறுகின்றனர். மேலும், தற்சார்பு துணிபு தொடர்பான வேறுபல கருத்துப்படிமங்களும், அவரவரது சொந்த அக்கறையைச் சார்ந்து அமைகின்றன. இவற்றுக்கிடையில் அமையும் ஒரே ஒற்றுமைக் கூறுபாடு, தற்சார்பு துணிபுக்கு எந்தவகையிலும் தீர்மானவாதம் அச்சுறுத்தலாக அமைவதில்லை என்பதே.[8]

மேற்கத்திய (மேலை) மெய்யியல்

[தொகு]

அடிப்படைக் கேள்விகளாக, நமது செயல்பாடுகளின் மீது நமது கட்டுபாடு உள்ளதா, அப்படியென்றால், எவ்வகையான கட்டுபாடு உள்ளது, அதுவும் எந்த அளவுக்கு உள்ளது ஆகியன அமைகின்றன. இக்கேள்விகள் கிரேக்க சுத்தாயிக்குகள் (stoics) எழுப்பிய காலத்தில் இருந்தே உள்ளன. எடுத்துகாட்டாக, கிரைசிப்பசுவும் மற்ற புத்தியல் மெய்யியலாளர்களும் இவை பற்றிய முன்னேற்றம் ஏதும் கடந்த ஆயிரமாண்டுகளாகவே, இல்லாமை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.[9][10]

ஒருவகையில், மாந்தர் வலிமையான விடுதலை உணர்வைக் கொண்டுள்ளனர். இந்நிலை நாம் தற்சார்பு துணிபைக் கொண்டுள்ளோம் என்பதைக் காட்டுகிறது.[11][12]மறுவகையில், தற்சார்பு துணிபு தவறானதோ எனும் உள்ளாக்க உணர்வும் நம்முள் நிலவுகிறது..[13][14]

இயற்பியல் விதியின்படியே முழுமையாகப் புறநிலை உலகம் இயங்குவதாக விளக்கும் பார்வையைச் சார்ந்தே, நினைவோடு எடுக்கும் முடிவுகள் அமைகின்றன எனும் உள்ளுணர்வை நாம் மாற்றிக்கொள்வது மிகவும் அரியதே.[15] உள்ளுணர்வுவழி உணரும் விடுதலைக்கும் இயற்கை விதிக்கும் இடையிலான முரண்பாடு இயற்பியல் தீர்மானவாதத்தை உறுதிபடுத்தும்போதோ அல்லது காரணமுடைமையை புறந்தள்ளும்போதோ அல்லது மறுக்கும்போதோ உருவாகிறது. காரணமுடைமையை மறுக்கும்போது அல்லது புறந்தள்ளும்போது, புறநிலை நிகழ்ச்சிக்குப் புற உலகத்துக்கு அப்பாலான காரணம் உருவாகிறது; இயற்பியல் தீர்மானவாதத்தை உறுதிபடுத்தும்போது எதிர்காலம் முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைச் சார்ந்து அமைகிறது, அதாவது முதல்-விளைவு விதியைப் பின்பற்றுகிறது.

தற்சார்பு துணிபைத் தீர்மானநிலை உலகத்தோடு எதிர்கொள்ளும் புதிர் தற்சார்பின் சிக்கல் அல்லது சிலபோது தீர்மானவாதத்தின் முரண்புதிர் அல்லது தீர்மானவாதத்தின் இருமைநிலை எனப்படுகிறது.[16] இந்த முரண்புதிர் ஒழுக்கநெறி முரண்புதிருக்கும் இட்டுச் செல்கிறது: கடந்தகால நிகழ்ச்சிகளால் முழுமையாக ஏற்படும் செயல்களுக்கு ஒழுக்கப் பொறுப்பை எப்படிக் குறிப்பிடுவது எனும் கேள்வி எழுகிறது.[17][18]

பொருந்துமைவாதிகள் மன உலகம் முதல்-விளைவு விதியை முழுமையாக பின்பற்றுவதில்லை என நிலைநிறுத்துகின்றனர்.[19][20] செவ்வியல்காலப் பொருந்துமைவாதிகள் புறத்தில் இருந்துகட்டுபடுத்தாதவரை அல்லது திணிக்கப்படாதவரை தற்சார்பு துணிபு இயலும் என வாதிட்டுத் தற்சார்பு துணிபின் முரன்புதிரை விடுவித்துள்ளனர்.[21] புத்தியல் பொருந்துமைவாதிகளோ துணிபின் விடுதலையையும் செயல்பாட்டின் விடுதலையையும் பிரித்து பாகுபடுத்துகின்றனர்; அதாவது, தேர்ந்தெடுக்கும் விடுதலையையும் அதைச் செயல்படுத்தும் விடுதலையையும் பிரித்துப் பார்க்கின்றனர்.[22] அனைத்து மாந்தரும் தற்சார்பு துணிபைப் பட்டறிவுவழி உணர்வதால், சிலர் இந்த உள்ளுணர்வையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என வாதிடுகின்றனர். [23][24] பொருந்துமைவாதிகள் எப்போதும் தற்சார்பு துணிபை பகுத்தறிவால் முடிவுகளை எடுக்கும் திறமையோடு பொருத்துகின்றனர்.

இந்த முரண்புதிருக்குப் பொருந்தாமைவாதிகள் வேறுபாட்ட அணுகுமுறையைப் பின்பற்றுகின்றனர்; உலகம் தீர்மானமானது என்றால், அப்போது, ஒரு செயலை நாம் விடுதலையாகத் தேர்வு செய்யலாம் எனும் உணர்வே பொய்த்தோற்றமே. இயக்க மறுப்புத்/மீவியற்பியல் தாராளவாதம் ஒருவகை பொருந்தாமைவாதமே. இது தீர்மானவாதம் என்பதே பொய்யானதாகும்; எனவே, தற்சார்பு துணிபு இயல்வதே (சிலராவது தற்சார்பு துணிபைப் பெற்றுள்ளனர்).[25] இந்தக் கண்ணோடம் பொருள்முதலியம் சாராத இருமைவாதிகளது புனைவாகும்;.[26] இத்தகைய அணுகுமுறை அடையாள இருமைவாதம் எனப்படுகிறது. நினைப்போடு கூடிய பட்டறிவு மூளையை எப்படி தாக்கவல்லது என்பது பற்றிய விவரிப்பு, நினைப்போடு செய்யும் தற்சார்பு துணிபை நரம்பியலான காரணிகளைச் சார்ந்த முதனிலைத் தேர்வு கட்டுபடுத்துகிறது என்பதை விளக்குகிறது."[26] மேலுமிது மரபான அல்லது கார்த்தேய இருமைவாதத்தையும் நினைப்பொடு ஒரு செயலையோ விருப்ப ஆர்வத்தையோ மறுக்கவல்ல அல்லது நிறுத்தி வைக்கவல்ல வரன்முறை ஏற்பு படிமங்களையும் உள்ளடக்கும்.[27]."[28] புறநிலைத் தீர்மானவாத விவாதங்களும் கூட தாராளவாதத்துக்கு மறுப்பாகவே அமைதலைக் காணலாம். கட்டற்ற தீர்மானவாதம் சாராத, தற்சார்புத் தேர்வுகளுக்கான செயலின் தோற்றுவாயை குறிப்பிடுவது அரியதாகும்.

மற்ற தீர்மானவாத வடிவங்கள் தற்சார்பு துணிபுடன் பொருந்தும் என்றாலும், இங்குத் தற்சார்பு துணிபு முதன்மையாக புறநிலைத் தீர்மானவாதத்துடன், சரியான பொருளில் ஏரணமுறைத் தீர்மானவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசப்படுகிறது..[29] இருந்தாலும், தீர்மானவாதம் பொய்யானதெனும் அறிவியல் பரிந்துரைகளால் அண்மைக் காலத்தில் வன்தீர்மானவாதம் வேகமாகப் பரவவில்லை, ஆனாலும் இது வன்பொருந்தாமைவாதத்தில் இன்னமும் நிலைகொண்டுள்ளது.[25] எடுத்துகாட்டாக, ஏரணமுறை, இறையியல்சார் தீர்மானவாதம், மீவியற்பியல்சார் தீர்மானவாதத்தை அறுதிகதி, விதி, உயிரியல், பண்பாட்டு, உளவியல் தீர்மானவாதம்வழியாக அறைகூவல் விடுத்து பொருந்துமைவாத படிமங்களை உருவாக்க தகவல்களைத் தருகின்றன. இவற்றைத் தெளிவாகக் குறிப்பிட, தனித்தனி பொருந்துமைவாதங்களையும் பொருந்தாமைவாதங்களையும் உருவாக்கலாம்.[30]

கீழே இந்த முரண்புதிரையும் அதன் விளைவுகளையும் குறித்த செவ்வியற்கால விவாதங்கள் தரப்படுகின்றன.

பொருந்தாமைவாதம்

[தொகு]

உண்மைக்கும் பொய்க்கும் முறையே T, F குறியீடுகளைப் பயன்படுத்துவோம்; முடிவு எடுக்கப்படாத்தை ? எனக் குறிப்பிடுவோம்; இந்நிலையில் இம்மூன்று வாய்ப்புகளில் இரண்டு அமைந்த முன்தீர்மானவாதம்/தற்சார்பு துணிவில் ஒன்பது இருப்புகள் (பட்டியல்) அமையும்:[31]

காலென் சுட்டிராசன் பட்டியல்[31]
1 2 3 4 5 6 7 8 9
தீர்மானவாதம் D T F T F T F ? ? ?
தற்சார்பு துணிபு FW F T T F ? ? F T ?

மேற்கோள்கள்

[தொகு]
குறிப்புகள்
  1. Omoregie, J. (2015). அதாவது, ஒவ்வொரு மனிதனும் என்ன செய்யவேண்டும் என்பதைக் கட்டற்ற முறையில் தானே துணிய முடியும் எனும் மெய்யியல் கோட்பாடு ஆகும். இது, அனைத்தும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது என்னும் முன்தீர்மானக் கொள்கைக்கு (determinism) எதிரானது. தற்சார்பு துணிவு: உள்ளுக்குள் அமைந்த விடுதலையின் அளவு. UK: Author House | பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781504987516
  2. Hegeler, Edward C. (1910). The Monist, Vol. 20. Open Court. p. 369.
  3. Bobzien, Susanne (1998). Determinism and freedom in Stoic philosophy. Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 2015-12-09. ...Aristotle and Epictetus: In the latter authors it was the fact that nothing hindered us from doing or choosing something that made us have control over them. In Alexander's account, the terms are understood differently: what makes us have control over things is the fact that we are causally undetermined in our decision and thus can freely decide between doing/choosing or not doing/choosing them.
  4. Bobzien, Susanne (2000). Did Epicurus discover the free-will problem?. http://philpapers.org/rec/BOBDED. பார்த்த நாள்: 2015-12-09. 
  5. An argument by Rudolph Carnap described by: C. James Goodwin (2009). Research In Psychology: Methods and Design (6th ed.). Wiley. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 047052278X.
  6. Robert C Bishop (2010). "§28.2: Compatibilism and incompatibilism". In Raymond Y. Chiao; Marvin L. Cohen; Anthony J. Leggett; William D. Phillips; Charles L. Harper, Jr. (eds.). Visions of Discovery: New Light on Physics, Cosmology, and Consciousness. Cambridge University Press. p. 603. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521882397.
  7. See, for example, Janet Richards (2001). "The root of the free will problem: kinds of non-existence". Human Nature After Darwin: A Philosophical Introduction. Routledge. pp. 142 ff. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 041521243X.
  8. McKenna, Michael; Coates, D. Justin (1 January 2015). Zalta, Edward N. (ed.). The Stanford Encyclopedia of Philosophy – via Stanford Encyclopedia of Philosophy.
  9. Thomas Nagel (1989). "Freedom". The View From Nowhere. Oxford University Press. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195056440. Nothing that might be a solution has yet been described. This is not a case where there are several possible candidate solutions and we don't know which is correct. It is a case where nothing believable has (to my knowledge) been proposed.
  10. John R Searle (2013). "The problem of free will". Freedom and Neurobiology: Reflections on Free Will, Language, and Political Power. Columbia University Press. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231510554. The persistence of the traditional free will problem in philosophy seems to me something of a scandal. After all these centuries...it does not seem to me that we have made very much progress.
  11. Gregg D Caruso (2012). Free Will and Consciousness: A Determinist Account of the Illusion of Free Will. Lexington Books. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0739171364. One of the strongest supports for the free choice thesis is the unmistakable intuition of virtually every human being that he is free to make the choices he does and that the deliberations leading to those choices are also free flowing..
  12. Corliss Lamont (1969). Freedom of choice affirmed. Beacon Press. p. 38.
  13. Roy F Baumeister; Matthew T Galliot; Dianne M Tice (2008). "Chapter 23: Free Willpower: A limited resource theory of volition, choice and self-regulation". In Ezequiel Morsella; John A. Bargh; Peter M. Gollwitzer (eds.). Oxford Handbook of Human Action (Volume 2 of Social Cognition and Social Neuroscience ed.). Oxford University Press. pp. 487 ff. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195309987. The nonconscious forms of self-regulation may follow different causal principles and do not rely on the same resources as the conscious and effortful ones.
  14. TW Clark (1999). "Fear of mechanism: A compatibilist critique of The Volitional Brain.". Journal of Consciousness Studies 6 (8–9): 279–93. http://www.ingentaconnect.com/content/imp/jcs/1999/00000006/f0020008/979. "Feelings or intuitions per se never count as self-evident proof of anything.".  Quoted by Shariff, Schooler & Vohs: The hazards of claiming to have solved the hard problem of free will For full text on line see this பரணிடப்பட்டது 2013-05-05 at the வந்தவழி இயந்திரம்.
  15. Max Velmans (2002). "How Could Conscious Experiences Affect Brains?". Journal of Consciousness Studies 9 (11): 2–29. http://cogprints.org/2750/. 
  16. William James (1896). "The dilemma of determinism". The Will to believe, and other essays in popular philosophy. Longmans, Green. pp. 145 ff.
  17. John A Bargh (2007-11-16). "Free will is un-natural" (PDF). Archived from the original (PDF) on 2012-09-03. பார்க்கப்பட்ட நாள் 2012-08-21. Are behaviors, judgments, and other higher mental processes the product of free conscious choices, as influenced by internal psychological states (motives, preferences, etc.), or are those higher mental processes determined by those states? Also found in John A Bargh (2008). "Chapter 7: Free will is un-natural". Are We Free? Psychology and Free Will. Oxford University Press. pp. 128 ff. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195189639. {{cite book}}: Unknown parameter |editors= ignored (help)
  18. Paul Russell (2002). "Chapter 1: Logic, "liberty", and the metaphysics of responsibility". Freedom and Moral Sentiment: Hume's Way of Naturalizing Responsibility. Oxford University Press. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195152905. ...the well-known dilemma of determinism. One horn of this dilemma is the argument that if an action was caused or necessitated, then it could not have been done freely, and hence the agent is not responsible for it. The other horn is the argument that if the action was not caused, then it is inexplicable and random, and thus it cannot be attributed to the agent, and hence, again, the agent cannot be responsible for it.... Whether we affirm or deny necessity and determinism, it is impossible to make any coherent sense of moral freedom and responsibility.
  19. Azim F Shariff; Jonathan Schooler; Kathleen D Vohs (2008). "Chapter 9: The hazards of claiming to have solved the hard problem of free will". In John Baer; James C. Kaufman; Roy F. Baumeister (eds.). Are We Free? Psychology and Free Will. Oxford University Press. p. 193. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195189639.
  20. Max Velmans (2009). Understanding Consciousness (2nd ed.). Taylor & Francis. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415425158.
  21. Strawson, Galen (2011) [1998]. "Free will. In E. Craig (Ed.)". Routledge encyclopedia of philosophy. London: Routledge. Archived from the original on 26 August 2012. பார்க்கப்பட்ட நாள் 12 December 2012.
  22. O'Connor, Timothy (Oct 29, 2010). Edward N. Zalta (ed.). "Free Will". The Stanford Encyclopedia of Philosophy (Summer 2011 Edition). பார்க்கப்பட்ட நாள் 2013-01-15.
  23. Joshua Greene; Jonathan Cohen (2011). "For the law, neuroscience changes nothing and everything". In Judy Illes; Barbara J. Sahakian (eds.). Oxford Handbook of Neuroethics. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0191620912. Free will, compatibilists argue, is here to stay, and the challenge for science is to figure out exactly how it works and not to peddle silly arguments that deny the undeniable (Dennett 2003) referring to a critique of Libet's experiments by DC Dennett (2003). "The self as a responding and responsible artifact". Annals of the New York Academy of Sciences 1001: 39–50. doi:10.1196/annals.1279.003. http://ase.tufts.edu/cogstud/papers/SelfasaResponding.pdf. 
  24. Walter J. Freeman (2000). How Brains Make Up Their Minds. Columbia University Press. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0231120087. Instead of postulating a universal law of causality and then having to deny the possibility of choice, we start with the premise that freedom of choice exists, and then we seek to explain causality as a property of brains.
  25. 25.0 25.1 McKenna, Michael (2009). "Compatibilism". The Stanford Encyclopedia of Philosophy (Winter). Ed. Edward N. Zalta. 
  26. 26.0 26.1 Azim F Shariff; Jonathan Schooler; Kathleen D Vohs (2008). "The hazards of claiming to have solved the hard problem of free will". In John Baer; James C. Kaufman; Roy F. Baumeister (eds.). Are We Free? Psychology and Free Will. Oxford University Press. pp. 183, 190–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-518963-6.
  27. Libet, (2003). "Can Conscious Experience affect brain Activity?", Journal of Consciousness Studies 10, nr. 12, pp. 24–28.
  28. Kane, Robert; John Martin Fischer; Derk Pereboom; Manuel Vargas (2007). Four Views on Free Will (Libertarianism). Oxford UK: Blackwell Publishing. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4051-3486-0.
  29. Vihvelin, Kadri (2011). "Arguments for Incompatibilism". The Stanford Encyclopedia of Philosophy (Spring 2011). Ed. Edward N. Zalta. 
  30. Zagzebski, Linda (2011). "Foreknowledge and Free Will". The Stanford Encyclopedia of Philosophy (Fall 2011). Ed. Edward N. Zalta.  See also McKenna, Michael (2009). "Compatibilism". The Stanford Encyclopedia of Philosophy (Winter 2009). Ed. Edward N. Zalta. 
  31. 31.0 31.1 Strawson, Galen (2010). Freedom and belief (Revised ed.). Oxford University Press. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0199247501.