உள்ளடக்கத்துக்குச் செல்

டைட்டானிக் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை டைட்டானிக் திரைப்படம் பற்றியது. டைட்டானிக் என்ற கப்பலைப் பற்றி அறிய டைட்டானிக் கட்டுரையைப் பார்க்கவும்.

டைட்டானிக்
இயக்கம்ஜேம்ஸ் கேமரூன்
தயாரிப்புஜேம்ஸ் கேமரூன்
ஜோன் லண்டௌ
கதைஜேம்ஸ் கேமரூன்
இசைஜேம்சு கோர்னர்
நடிப்புலியோனார்டோ டிகாப்ரியோ
கேட் வின்ஸ்லெட்
பில்லி சேன்
குளோரியா ஸ்டுவர்ட்
பிராண்செஸ் பிஸர்
ஒளிப்பதிவுரசல் கார்பெண்டர்
படத்தொகுப்புகோன்ராட் பஃவ் IV
ஜேம்ஸ் கேமரூன்
விநியோகம்20த் செஞ்சுரி ஃபோக்ஸ்
வெளியீடுநவம்பர் 1, 1997 - ஜப்பான்
ஓட்டம்194 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு200 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
மொத்த வருவாய்$1,843,201,268

டைட்டானிக் (Titanic) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கதை

[தொகு]

பாரிய ஆடம்பரப் பயணிகள் கப்பலான டைட்டானிக், அதன் முதற் பயணத்தின் போதே பனிப்பாறையுடன் மோதிக் கடலுள் அமிழ்ந்தது. ஆயிரக் கணக்கில் பயணிகள் இறந்து போன அந்த உண்மைச் சோகக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அமைந்ததே இதன் கதையாகும்.

1995 ஆம் ஆண்டில் அமிழ்ந்த ஆர்எம்எஸ் டைட்டானிக்கின் உண்மையான உடைந்த பகுதிகளைப் படம் எடுத்ததுடன், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் தொடங்கின. இந்த உண்மைத் துன்பியல் கதையில் மக்களை ஊன்ற வைப்பதற்கு, ஒரு காதல் கதையை இயக்குநர் கேமரூன் உருவாக்கியிருந்தார். தற்காலக் காட்சிகள் அனைத்தும் அக்கடமிக் ம்ஸ்டிஸ்லாவ் கெல்டிஷ் (Akademik Mstislav Keldysh) என்னும் ரஷ்ய ஆய்வுக் கப்பலில் எடுக்கப்பட்டன. அமிழ்ந்த கப்பலின் மீளமைப்பு ஒன்று மெக்சிக்கோவில் உள்ள பிலேயாஸ் டி ரொசாரிட்டோ (Playas de Rosarito) என்னும் இடத்தில் கட்டப்பட்டது. கேமரூன், பல அளவுத்திட்ட மாதிரிகளையும், கணினியில் உருவாக்கப்பட்ட மாதிரியுருக்களையும் கப்பல் கடலுள் ஆழ்வதைக் காட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளார். இத்திரைப்படமே அதுவரை எடுக்கப்பட்ட படங்களில் அதி கூடிய செலவு பிடித்த படம் ஆகும். இதற்கு நிதி வழங்கிய பராமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் 20த் செஞ்சுரி ஃபோக்ஸ் ஆகிய நிறுவனங்கள் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை இதற்காகச் செலவு செய்துள்ளன.

வெளியீடு

[தொகு]

தொடக்கத்தில் 1997 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம் தயாரிப்புக்குப் பிந்திய தாமதங்கள் காரணமாக அவ்வாண்டு டிசம்பர் 19 ஆம் தேதியே வெளியிட முடிந்தது. இத் தாமதம் அறிவிக்கப்பட்டபோது, இப்படம் தோல்வி அடையப் போவதாகப் பத்திரிகைகள் நம்பின. எனினும் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விமர்சன அடிப்படையிலும், வணிக அடிப்படையிலும் படம் பெரு வெற்றி பெற்றது. மிகக் கூடிய 14 அக்கடமி விருதுகளுக்கு நியமனம் செய்யப்பட்ட இப் படம், சிறந்த படத்துக்கான விருது உட்பட 11 விருதுகளை வென்றது. அத்துடன் உலகளாவிய அளவில், இதுவரை இல்லாதபடி, 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிச் சாதனை நிகழ்த்தியது.

வகை

[தொகு]

காதல்படம்

இதையும் காண்க

[தொகு]

டைட்டானிக் (1943 திரைப்படம்)

வெளியிணைப்புகள்

[தொகு]