டிரையுண்ட்
டிரையுண்ட் மலை
Triund_Hill त्रिउंड | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | காங்கரா |
ஏற்றம் | 2,850 m (9,350 ft) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
இடக் குறியீடு | +91-177 |
டிரையுண்ட் மலை (Triund_Hill) (இந்தி : त्रिउंड) அல்லது திரையூந்து மலை இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் காங்கரா மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய மலை ஆகும். டிரையுண்ட் மலை தரம்காட்டின் பகுதியாகும். தவுலாதர் பகுதியின் அடிவாரத்தில் டிரையுண்ட் உள்ளது. இது 2,828 மீ உயரத்தில் உள்ளது. தர்மசாலாவின் கிரீடத்தில் சூட்டிய அருமணி என டிரையுண்ட்டைக் கூறுவர்.
டிரையுண்ட் மலை
[தொகு]டிரையுண்ட் பச்சைப் புல் நிறைந்த ஒரு பெரிய வெளி. கண்ணைக் கவரும் வலிமையான தாலுகாத்தர் சிலைகள் காணப்படுகின்றன.
போக்குவரத்து
[தொகு]சாலை வழியாக பதான்கோட்டிலிருந்து காக்கல் சென்று பின் தர்மசாலாவை அடையலாம். மேலும் புது தில்லியிலிருந்து சண்டிகார் சென்று காங்கரா வழியாக தர்மசாலாவை அடையலாம்.ஜசூர், பரோர் ஆகிய தொடருந்து நிலையங்கள் டிரையுண்டுக்கு அருகில் உள்ளன. இவை குறுகிய இருப்புத் தடத்தில் உள்ளன. அகல இருப்புத் தடத்தில் டிரையுண்டுக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் பதான்கோட் ஆகும்.காக்கல் விமான நிலையத்திலிருந்து (காங்கரா விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது) காக்கல் சென்றும் பின் தர்மசாலாவை அடையலாம்.
மலை ஏற்றம்
[தொகு]இங்கு மலையேற்றம் ஒரு பொழுதுபோக்காக உள்ளது. மலைஏற்றம் செல்பவர்களுக்கு ஏற்ற காலம் மார்ச் முதல் மே வரை மற்றும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை ஆகும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு அதிகம் பயணம் மிக அரிது. ஜூன், ஜூலை மழைக்காலம். எனவே, பனிக்காலத்திலு மழைக்காலத்திலும் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.