ஜேம்ஸ் குக்
ஜேம்ஸ் குக் | |
---|---|
பிறப்பு | 7 நவம்பர் [யூ.நா. 27 அக்டோபர்] 1728 மார்ட்டன், யோர்க்சயர், இங்கிலாந்து, பெரிய பிரித்தானியா |
இறப்பு | 14 பெப்ரவரி 1779 ஹவாய் | (அகவை 50)
தேசியம் | பிரித்தானியா |
பணி | நாடுகாண் பயணி |
பட்டம் | கப்டன் |
பெற்றோர் | ஜேம்ஸ் குக், கிரேஸ் பேஸ் |
வாழ்க்கைத் துணை | எலிசபெத் பாட்ஸ் |
பிள்ளைகள் | ஜேம்ஸ், நத்தானியல், எலிசபெத், ஜோசப், ஜோர்ஜ், ஹியூ |
கையொப்பம் |
ஜேம்ஸ் குக் (James Cook, 7 நவம்பர் 1728 - 14 பெப்ரவரி 1779) இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகாண் பயணி, பிரித்தானிய ஆய்வாளர், மாலுமி, வரைபடங்கள் உருவாக்குனர் மற்றும் பிரித்தானிய அரச கடற்படையின் (Royal navy) அணித்தலைவரும் (Captain) ஆவார். நியூபவுண்ட்லாந்துத் தீவினை முதன்முதலில் உலக வரைபடத்தில் குறித்ததுடன் அமைதிப் பெருங்கடலில் தனது எச்.எம்.பார்க் என்டேவர் கப்பலில் மூன்று பயணங்களை மேற்கொண்டவர். அமைதிப் பெருங்கடலின் பல இடங்களையும், தீவுகளையும் கண்டறிந்தவர். ஆத்திரேலியா, ஹவாய் போன்ற தீவுகளை முதன் முதலில் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஆவார்.
பிறப்பு
[தொகு]ஜேம்ஸ் குக் 1728- ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் யார்க்செயரில் பிறந்தார். இவர் பதினாறு குழந்தைகள் கொண்ட ஒரு ஸ்காட்லாந்து உழவருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அய்டான் நகரில் தனது பள்ளிக்கல்வியை பயின்ற குக், தனது பதினேழு வயதில் ஒரு கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தார். பதினெட்டு வயதில் படகு ஓட்டுனராக மாறினார். விட்பை (Whitby) துறைமுகத்தில் ஜான் வாக்கர் என்னும் நிலக்கரியினை கப்பல் மூலம் ஏற்றுமதி செய்பவரிடம் பயிற்சி பெறுபவராக சேர்ந்தார்[1]. வாக்கரிடமிருந்து அடிப்படை கணித அறிவையும், திசையமைப்பு குறித்தனவற்றையும் குக் கற்றுத் தேர்ந்தார். தனது சொந்த முயற்சியில் அறிவியலையும் கற்றுத் தேர்ந்தார்.
திருமணம்
[தொகு]ஜேம்ஸ் குக் திசம்பர் 21, 1762 அன்று எலிசபத் பாட்ஸ் என்பவரை மணம் புரிந்துகொண்டார். இத்தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள், ஜேம்ஸ் (1763–94), நாத்னெய்ல் (1764–80), எலிசபத் (1767–71), ஜோசப் (1768–68), ஜியாஜ் (1772–72) மற்றும் ஹக் (1776–93) ஆகியோராவர். கடைசி மகன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இறந்து விட்டார். இவரின் குழந்தைகள் பற்றிய விடயங்கள் வெளியுலகு அறியாதவையாகும்.
பயணங்களும் கண்டுபிடிப்புகளும்
[தொகு]தனது முதற்பயணத்தின்போது 1770 இல் அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்டார். இவரே அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்ட முதல் ஐரோப்பியராவார். அப்பிரதேசத்தை நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு இங்கிலாந்துக்குச் சொந்தமானதென உரிமை கோரினார். அவர் தன் வாழ்நாளில் இரு முறை உலகத்தை வலம் வந்துள்ளார். அன்டார்டிகா பகுதிகளிலும் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார் குக். வட அமெரிக்காவிலும் பல தீவுகளை இவர் கண்டுபிடித்துள்ளார். தனது கடல் பயணங்களின்போது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், தான் பார்த்த இடங்களின் வரைபடங்களை வரையவும் நேரங்களைச் செலவு செய்துள்ளார். இவர் கண்டுபிடித்த இடங்களைப் பற்றியும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.
கண்டுபிடிப்புகளின் நோக்கம்
[தொகு]மிகப்பெரிய நீண்ட பயணங்களைக் குக் சில காரணங்களுக்காகவே ஓய்வு இல்லாமல் செய்தார்.
- தெற்கு கண்டத்தில் உள்ள பகுதிகளைக் கண்டுபிடிப்பது,
- வீனஸ் கிரகத்திற்கு வானியல் அளவீடுகள் செய்வது,
- புதிய நிலங்களைக் கண்டறிவது,
- பிரித்தானிய அரசர் ஜார்ஜ் மூன்றாமவருக்கு நிலங்களைக் கையகப்படுத்துவது,
- புதிய இராணுவத் தளங்கள் அமைக்க நல்ல இடங்கள் கண்டுபிடிப்பது,
- பசிபிக் மற்றும் அட்லாண்டிக் இடையில் புதிய வழித்தடங்களைக் கண்டுபிடிப்பது ஆகியனவே அவரின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.
முதல் பயணம்(1768-1771)
[தொகு]1766 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டி பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்யக் குக்கை அழைத்தது. இப்பயணத்தின் நோக்கம் வீனஸ் கிரகத்திற்கு உண்டான தூரத்தினை அளவிடவும், புதிய ஆராய்ச்சிகள் செய்யவுமாக இருந்தது. 39 வயதில், லெப்டினன்ட் பதவிக்கு குக் உயர்த்தப்பட்டார். கடல் பயணத்தின்போது தளபதியாகவும் ஆக்கப்பட்டார் குக். இப்பயணம் இங்கிலாந்திலிருந்து ஆகத்து 26,1768 அன்று தொடங்கப்பட்டது. மேற்கு மார்க்கமாகச் சென்று பசுபிக் பெருங்கடல் வழியே டெஹீட்டி தீவை அடைந்தார். அங்கு வீனஸ் பற்றிய சில ஆராய்ச்சிகளைக் குக் மேற்கொண்டார். பின் பூமியை ஒரு முறை வலம் வந்த இவரது பயணம் 1771, ஜீலை 12 அன்று செயின்ட் ஹெலனாவில் வந்து முடிந்தது[2].
அவர் எச்.எம்.எஸ் எண்டெவரில் பயணம் மேற்கொண்டார். அவர் ஆகஸ்டு 26 ,1768 அன்று இங்கிலாந்து சென்றடைந்தார்.[3] குக் மற்றும் அவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள் கேப் ஹார்ன் எனும் பகுதியினை சுற்றிப்பார்த்துவிட்டு தங்கள் பயணத்தை மெற்கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் ஏப்ரல் 13, 1769 அன்று டஹிடி எனும் இடத்தை வந்தடைந்தனர். அந்த இடத்தில் தான் வெள்ளி (கோள்) கடப்பு பற்றிய ஆய்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.[4] ஆனால் ஆராய்ச்சியின் முடிவுகள் எதிர்பார்த்த வகையில் வரவில்லை. தன்னுடைய முதல் ஆய்வு நிறைவு பெற்ற பின்பு தன்னுடைய கடற்படை அலுவலர்களால் கொடுக்கப்பட்ட இரண்டாவது கடற்பயணத்திற்கான சீல் செய்யப்பட்ட அந்த ஆணையைத் திறந்தார். அதில் தெற்கு பசுபிக் கண்டங்களின் தென்பகுதியில் உள்ள அறிகுறிகளை ஆராய்ச்சி செய்யும்படி இருந்தது.[5] பிறகு, குக் நியூசிலாந்து மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் நாள் ஆத்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரையை அவர் அடைந்தார். பின்பு அவர் மேற்கு நோக்கிப் பயணித்தார், இதன் மூலம் கிழக்கு கடற்கரையை எதிர்குக்கினுகொண்ட மல் ஐரோப்பியர் என்ற பெருமையைப்பெற்றார்.
இடைவேளை
[தொகு]குக்கினுடைய இதழ்கள் அவருடைய வருகையாஇப் பற்றி எழுதின. விஞ்ஞான சமூக மக்களின் கதாநாயகனாக அவர் பார்க்கப்பட்டார். பொதுஜனங்களின் கதாநாயகனாக ஜோசப் பேங்க் என்பவர் பார்க்கப்பட்டார்.[6] குக்கினுடைய மகன் இவரது இரண்டாவது பயணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் தான் பிறந்தார்.[7]
இரண்டாவது பயணம்
[தொகு]மீகாமன் ஜேம்ஸ் குக்கின் இறப்பு (ஓவியம்) | |
---|---|
ஓவியர் | ஜோஹான் ஸோஃப்பானி |
ஆண்டு | c. 1795 |
வகை | எண்ணெய் ஓவியம் |
பரிமானங்கள் | 137.2 cm × 182.9 cm (54.0 அங் × 72.0 அங்) |
இடம் | தேசிய கடல்சார் அருங்காட்சியகம், லண்டன் |
1771 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் பயணம் முடித்து வந்த உடனேயே ஜேம்ஸ் குக்கிற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது [8][9] 1772 ஆம் ஆண்டில்
ராயல் சொசைட்டி சார்பாக அறிவியல் பயனத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதன் நோக்கம் சிக்கலான பூமியின் தென்பகுதியினை ஆய்வு செய்வதாகும்.
மூன்றாம் பயணம்
[தொகு]கருத்துரு
[தொகு]இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமானது வட அமெரிக்காவின் மேல் உள்ள அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் பசிப்பிக் பெருங்கடல் இடையே புகழ்பெற்று விளங்கக் கூடிய வடமேற்கு பாதையைக் கண்டுபிடிப்பது ஆகும் . இதனைச் செயல்படுத்த குக்கிற்கு அவருடைய கடற்படை அலுவலர்களால் 1775 ஆம் ஆண்டில் அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது . ஆனால் 1745 ஆம் ஆண்டு வரை நீட்டிப்புச் செய்யப்பட்டது. அந்தப் பாதைகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு £ 20,000 பரிசு அறிவிக்கப்பட்டது.[10] ஆரம்பத்தில் சார்லிஸ் கிளெர்கே தான் இந்தப் பயணத்தைத் தலைமை தாங்க வேண்டும் என்று விரும்பினார், ஓய்வு பெற்றிருந்த குக், ஓர் ஆலோசகராகச் செயல்பட்டார்.
குழு உறுப்பினர்கள்
[தொகு]- வில்லியம் பேய்லி - வானியலாளாரக பணியாற்றினார்.
- ராபர்ட் - தச்சர்
- ஜான் லியார்ட் - மீகாமன்
- டேவிட் நெல்சன் - தாவரவியல் சேகரிப்பாளர்
- ஒமாய்- குக்கிற்கு பயனம் முடியும் வரையில் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்
- டேவிட் சாம்வெல் - அறுவைச் சிகிச்சை
- வில்லியம் டெய்லர் - உதவி மாலுமி (midshipman)
- ஜேம்ஸ் ட்ரேவெனன் - உதவி மாலுமி (midshipman)
- ஜான் வாட்ஸ் - உதவி மாலுமி (midshipman)
1776 ஆம் ஆண்டு குக் தனது மூன்றாவது பயணத்தினைத் தொடர்ந்தார். அந்தப் பயணத்தின்போது ஹவாய்த் தீவுவாசிகளுடனான சண்டையில் கொல்லப்பட்டார். ஜேம்ஸ்குக் இறந்ததால் அவரின் வீரர்கள் குக்கின் சடலத்துடன் பயணத்தின் பாதியில் நாடு திரும்பினர்.
கலானி ஒபு யு - கடத்தல் மற்றும் இறப்பு
[தொகு]மீகாமன் ஜேம்ஸ் குக் 1779 ஹவாய் தீவின் ஆளும் தலைவரான கலானி ஒபு யு( Kalani'o'pu'u) வைகடத்தியது மற்றும் ஒரு திருடப்பட்ட நீண்ட படகு (லைட்போட்) க்கு பதிலாக அவரைக் காப்பாற்ற முடிவெடுத்து ஆகியவவை குக்கினுடைய இறுதிப் பயணத்தின் இறுதிப் பிழையாக அமைந்தது மட்டுமல்லாது அவருடைய இறப்பிற்கும் வழிவகுத்தது.
.
இன விளக்க ஆராய்ச்சியின் சேமிப்புகள்
[தொகு]1984 ஆம் ஆண்டில் ஆத்திரேலியா அருங்காட்சியகமானது, நியூ சவுத் வேல்ஸ் அரசிடமிருந்து குக்கினுடைய பொருட்களை வாங்கியது. அதேசமத்தில் 1768- 1780 வரையிலான குக்கினுடைய மூன்று பயணங்களிலும் அமைதிப் பெருங்கடல் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 115 கலைப்பொருட்களும் பெறப்பட்டன. அங்கிருந்து பெறப்பட்ட அனைத்து கலைப்பொருட்களுமே அமைதிப் பெருங்கடலின் அருகே வாழ்ந்த மக்களுக்கும் , ஐரோப்பிய மக்களுக்குமான தொடர்பினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. 1935 ஆம் ஆண்டில் இவருடைய பெரும்பகுதி நினைவுச் சின்னங்களும், கலைப்பொருட்களும் நியூ சவுத் வேல்ஸ் மாநில நூலகமான மிச்செல் நூலகத்திற்கு மாற்றப்பட்டது.
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Cook, James (1728-1779) Biographical Entry" (in English). Australian Dictionary of Biography On Line Edition. Australian National University. 1966. Retrieved 2010-05-28.
- ↑ "Secret Instructions to Captain Cook, 30 June 1768" (PDF). தேசிய ஆவண பாதுகாப்பகம் ஆத்திரேலியா. பார்க்கப்பட்ட நாள் 3 September 2011.
- ↑ தெ சிட்னி மார்னிங் ஹெரால்டு"The Sydney Morning Herald". தெ சிட்னி மார்னிங் ஹெரால்டு (National Library of Australia): p. 12. 2 May 1931. http://nla.gov.au/nla.news-article16774546. பார்த்த நாள்: 4 September 2012.
- ↑ "பிபிசி -வரலாறு- ஜேம்ஸ் குக்". பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
- ↑ "Secret Instructions to Captain Cook, 30 June 1768" (PDF). National Archives of Australia. பார்க்கப்பட்ட நாள் 3 September 2011.
- ↑ Collingridge 2003
- ↑ "Captain Cook: Obsession & Discovery. (Part 2 of 4) – Britain on DocuWatch – free streaming British history documentaries". 2011. Archived from the original on 7 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Hough 1994, ப. 180
- ↑ McLynn 2011, ப. 167
- ↑ Cook, James. A voyage to the Pacific Ocean. Lord Commissioners of the Admiralty.
வெளியிணைப்புகள்
[தொகு]- Captain Cook historic plaque, Halifax
- 'Cook, James (1728–1779)', Australian Dictionary of Biography, Volume 1, Melbourne University Press, 1966, pp. 243–244
- Biography at the Dictionary of Canadian Biography Online
- from the Dictionary of New Zealand Biography
- The Endeavour journal (1) and The Endeavour journal (2), as kept by James Cook – digitised and held by the National Library of Australia
- The South Seas Project: maps and online editions of the Journals of James Cook's First Pacific Voyage, 1768–1771. Includes full text of journals kept by Cook, Joseph Banks and Sydney Parkinson, as well as the complete text of John Hawkesworth's 1773 Account of Cook's first voyage.
- Digitised copies of log books from James Cook's voyages பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம் at the British Atmospheric Data Centre
- குட்டன்பேர்க் திட்டத்தில் James Cook இன் படைப்புகள்
- Works by ஜேம்ஸ் குக் at LibriVox (public domain audiobooks)
- Log book of Cook's second voyage: high-resolution digitised version in Cambridge Digital Library
- Cook's Pacific Encounters: Cook-Forster Collection online Images and descriptions of more than 300 artefacts collected during the three Pacific voyages of James Cook.
- Images and descriptions of items associated with James Cook at the Museum of New Zealand Te Papa Tongarewa
- James Cook Birthplace Museum பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம்
- Cook's manuscript maps பரணிடப்பட்டது 2013-10-31 at the வந்தவழி இயந்திரம் of the south-east coast of Australia, held at the American Geographical Society Library at UW Milwaukee.