உள்ளடக்கத்துக்குச் செல்

செதில் கவசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கமுலாம் பூசிய எறும்புண்ணியின் (pangolin) செதில்களால் ஆன மேலுடுப்பு, இராசத்தான், இந்தியா, 19-ஆம் நூற்றாண்டின் முற்காலம்.
திரேஜனின் தூணின்மீதுள்ள தாசிய செதில் கவசம்.

செதில் கவசம் (ஆங்கிலம்:Scale armour, ஸ்கேல் ஆர்மர்) என்பது ஒரு துணி, அல்லது தோலை பின்புலமாகக் கொண்டு, பல தனித்தனியான சிறிய செதில்களை (தட்டுகள்) ஒன்றன்மீது ஒன்றாக இணைத்து செய்யப்படும் ஒரு முற்கால கவசம் ஆகும்.[1] செதில் கவசம் பல்வேறு கலாச்சாரங்களை சார்ந்த வீரர்கள் மற்றும் குதிரைகளால் அணியப்பட்டிருந்தன. செதில்களை செய்ய வெண்கலம், இரும்பு, பதனிடா விலங்குத் தோல் (rawhide), பதனிட்ட தோல் (leather), கொதிக்கவைக்கப்பட்ட தோல் (cuir bouilli), வித்துக்கள், கொம்பு, ஏறும்புண்ணிச் (pangolin) செதில்கள், மற்றும் பண்டைய சீனாவில், காகிதம்  முதலிய மூலபொருட்கள் பயன்படுத்தப் பட்டன. இந்த வேற்றுமைகள் மூலப்பொருட்களின் கிடைக்கும் தன்மையை பொறுத்தது.

செதில் கவச வகைகள் 

[தொகு]

ஒரு பின்புலத்தில், சிறிய செதில்களை (தட்டுகள்) ஒன்றன்மீது ஒன்றாக தைத்து (அல்லது கட்டி), மீன்/ஊர்வனவின் செதில்களை அல்லது வீட்டின் ஓடுகளை போன்ற தோற்றத்துடன் உருவாக்கப்படுவதே செதில் கவசம் ஆகும்.[2] லோரிக்கா சுக்குவாமாட்டா என்பது இவ்வகையான ரோமானிய கவசமாகும்.[1]


வரலாற்றுத் தகவல்கள் 

[தொகு]

இவ்வகை கவசத்தை சாகர்கள், ரோமானியர்கள், இந்தியர்கள், சீனர்கள், மற்றும் ஜப்பானியர்களும் பயன்படுத்தி உள்ளனர்.

இதர கவங்களுடனான ஒப்பீடு

[தொகு]

துளைக்கும் மற்றும் மழுங்கிய தாக்குதல்களில் இருந்து வலைக் கவசத்தைவிட செதில் கவசம் நல்ல பாதுகாப்பை அளித்தது.[3] இதன் தயாரிப்புச் செலவும் குறைவு. அனால் இது வலைக் கவசத்தின் நெகிழ்தன்மை மற்றும் முழுத் தழுவு அளவுக்கு (coverage) ஈடில்லை. தறையாணிக் கவசம் மற்றும் தகட்டு மேலுடுப்பை தவிர, மற்றவை மத்தியகால ஐரோப்பாவில் பிரபலமில்லை, ஆனால் செதில் மற்றும் பின்னல் கவசங்கள் மற்றெங்கும் பிரபலம்.

செதில் கவனத்தின் படிமை

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Armed Batavians: Use and Significance of Weaponry and Horse Gear from Non-military Contexts in the Rhine Delta (50 Bc to Ad 450), Author Johan Nicolay, Publisher Amsterdam University Press, 2008, ISBN 90-5356-253-2, ISBN 978-90-5356-253-6
  2. Publication: Anthropological series, Volume 13, (Field Museum of Natural History : 1909), Author Field Museum of Natural History, Publisher The Museum, 1913, Original from Harvard University P.258
  3. Goldman, Norma.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செதில்_கவசம்&oldid=3659215" இலிருந்து மீள்விக்கப்பட்டது