உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியப் பொருண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரியப் பொருண்மை அல்லது சூரியத் திணிவு (M) (Solar mass) என்பது வானியலில் ஒரு திணிவலகு (திணிவை அளக்கும் அலகு) ஆகும். சூரியப் பொருண்மை என்பது சூரியனின் திணிவுக்கு சமமான திணிவு ஆகும்.அதாவது 2 சூரியத் திணிவு என்று குறிப்பிட்டால் அது சூரியனைப் போல இரண்டு மடங்கு திணிவு உடையது என்பது பொருள். இதன் மூலம் மற்ற விண்மீன்கள், விண்மீன் பேரடைகள், நெபுலாகள் மற்றும் விண்மீன் கொத்துகள் போன்றவற்றின் திணிவு அல்லது நிறையை குறிப்பிடுகிறார்கள்.
சூரியத் திணிவு முறையே:

[1][2]

மேலேயுள்ள சூரியப் பொருண்மை புவியை விட 332,946 மடங்கும், வியாழன் கோளை விட 1048 மடங்கும் பெரியது.
புவி, சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதால், சூரியனின் நிறையை சுற்றுக்காலத்திற்கான சமன்பாடு மூலம் கணக்கிடலாம் [3]. புவி, சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம், புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் (வானியல் அலகு) மற்றும் ஈர்ப்பியல் மாறிலி(G) இவைகளின் மூலம் கணக்கிடப்படுகிறது.

.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 2013 Astronomical Constants http://asa.usno.navy.mil/SecK/2013/Astronomical_Constants_2013.pdf பரணிடப்பட்டது 2013-02-14 at the வந்தவழி இயந்திரம்
  2. NIST CODATA http://physics.nist.gov/cgi-bin/cuu/Value?bg
  3. Harwit, Martin (1998), Astrophysical concepts, Astronomy and astrophysics library (3 ed.), Springer, pp. 72, 75, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-94943-7