சுருள் ஏடுகள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/26/TurinPapyrus1904.png/800px-TurinPapyrus1904.png)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/67/Psalms_Scroll.jpg/220px-Psalms_Scroll.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/10/Parliamentary_archives.jpg/220px-Parliamentary_archives.jpg)
சுருள் ஏடுகள் (scroll) பாபிரஸ் போன்ற தடித்த காகிதம், ஆட்டுத்தோல், இளங்கன்றின் மெல்லிய தோல் மற்றும் மெல்லியச் செப்புத் தகடுகளில் எழுதுவதற்கு பயன்படுத்துவதாகும். இவைகளில் எழுதப்படும் கையெமுத்துப் பிரதிகள் சுருட்டி வைத்து பயன்படுத்துவதால் இதனை சுருள் ஏடுகள் என்று அழைக்கப்படுகிறது.[1]
புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தின் போது (கிமு 1279 – கிமு 1213), பாபிரஸ் எனும் தடித்த காகிதத்தில், பண்டைய எகிப்திய மன்னர்களின் பெயர்களுடன், வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்தனர். இதனை துரின் மன்னர்கள் பட்டியல் என்பர்.[2]
கிமு மூன்றாம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல், கிபி 70 ஆண்டு வரை எஸ்சேனியர்கள்[3] எனும் யூதக் குழுவினர் விவிலியம் மற்றும் விவிலியம் தொடர்பற்ற குறிப்புகளை பாபிரஸ் மற்றும் ஆட்டுத்தோல் மற்றும் செப்புத் தகடுகளில் அரமேயம் மற்றும் கிரேக்க மொழியில் எழுதி வைத்த சுருள் ஏடுகளை சாக்கடலின் வடமேற்கே உள்ள கும்ரான் குகைகளில் கிபி 1947-இல் கண்டுபிடித்தனர்.[4][5][6][7]
பண்டைய எழுது பொருட்கள்[தொகு]
- பாபிரஸ் எனும் தடித்த காகிதம்
- ஓலைச் சுவடி
- களிமண் பலகை
- மெழுகுப் பலகை
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Beal, Peter. (2008) "scroll" in A Dictionary of English Manuscript Terminology 1450–2000 Online edition. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2008. http://www.oxfordreference.com பரணிடப்பட்டது 2 சூன் 2013 at the வந்தவழி இயந்திரம் Retrieved 21 November 2013.
- ↑ Turin King List
- ↑ Essenes
- ↑ Dead Sea Scrolls
- ↑ Dead Sea Scrolls
- ↑ சாக்கடல் ரகசியம் - சுருள்கள் சொல்லும் பொருள் கண்டுபிடிப்பு
- ↑ 'Dead Sea Scrolls' at the Museum of the Bible are all forgeries