உள்ளடக்கத்துக்குச் செல்

சீன சோதிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன சோதிடத்தை விளக்கும் மத்தியக் கால ஓவியம்

சீன சோதிடம் (Chinese Astrology) என்பது 12 விலங்குகளை அடிப்படையாக கொண்டு, சீன வருடங்கள் அல்லது பிறப்புகளின்படி கணிக்கப்படும் ஒரு சோதிட முறை ஆகும். இதில் ஒவ்வொரு வருடமும் ஒரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வாறு 12 வருடங்கள், 5 மூலகங்கள் மற்றும் யின்-யான் எனப்படும் சீனத் தத்துவம் ஆகியவை சேர்த்து 60 வருடங்கள் கொண்ட ஒரு சக்கர வடிவில் சீன சோதிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின் பிறந்த வருடம், மாதம் மற்றும் நேரம் ஆகியவற்றைக் கொண்டு அவர்களின் எதிர்காலம் கணிக்கப்படுகின்றது.

புத்தர் தனது இறுதி நாட்களில் இந்த சோதிட முறையை உருவாக்கியதாக சீன மக்கள் நம்புகின்றனர். கி.மு 2600 -ல் பேரரசர் குவாங் தீ காலத்தில் விலங்குச் சக்கரம் அறிமுகப்படுத்தப்பட்டு எளிதாக்கப்பட்ட பின்பு, கான் பேரரசின் காலத்தில் இது மிகுந்த வளச்சியுற்றது. சீனாவில் இது சாதாரன சோதிடக் கலையாக மட்டும் இல்லாமல், சீனத் தத்துவங்களின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. இந்த சோதிடக் கலையின் அடிப்படையிலேயே சீனப் புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் ஒரு மிருகத்தின் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

== அடிப்படை ==[1][2][3]

சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவமரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதை கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்கு பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது.

சீன ஆண்டுகள்

[தொகு]

புத்தர் முக்தி அடைந்து, இந்த உலகத்தை விட்டுச் செல்லும் போது, உலகிலுள்ள அனைத்து விலங்குகளிடமும் விடை பெற்றுச் செல்ல வேண்டி, சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அவர் அழைப்பை ஏற்று வந்தவை பன்னிரண்டே. எனவே அவ்வாறு வந்த விலங்குகளுக்கு மதிப்பு தரும் வகையில், அவை வந்த வரிசையின் அடிப்படையில், ஒவ்வொரு விலங்கின் பெயரையும் பன்னிரண்டு சீன ஆண்டுகளுக்கும் வைத்தார். மேலே கூறப்பட்ட கதையின் அடிப்படையிலேயே சீன ஆண்டுகள் விலங்குகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அவை,

1. எலி
2. எருது
3. புலி
4. முயல்
5. டிராகன்
6. பாம்பு
7. குதிரை
8. ஆடு
9. குரங்கு
10.சேவல்
11.நாய்
12.பன்றி

சீன ஆண்டுகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன.எனவே இவை நடைமுறையில் உள்ள ஆங்கில நாள்காட்டியுடன் சரியாக ஒத்துப் போவதில்லை. சனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் இருந்து புது வருடம் கணக்கிடப்படுகின்றன.

சீன ஆண்டு அட்டவனை

[தொகு]
  வருடம் விலங்கு வருடம்
1924–1983 1984–2043
1 பெப்ரவரி 05 1924–சனவரி 23 1925 எலி பெப்ரவரி 02 1984–பெப்ரவரி 19 1985
2 சனவரி 24 1925–பெப்ரவரி 12 1926 எருது பெப்ரவரி 20 1985–பெப்ரவரி 08 1986
3 பெப்ரவரி 13 1926–பெப்ரவரி 01 1927 புலி பெப்ரவரி 09 1986–சனவரி 28 1987
4 பெப்ரவரி 02 1927–சனவரி 22 1928 முயல் சனவரி 29 1987–பெப்ரவரி 16 1988
5 சனவரி 23 1928–பெப்ரவரி 09 1929 டிராகன் பெப்ரவரி 17 1988–பெப்ரவரி 05 1989
6 பெப்ரவரி 10 1929–சனவரி 29 1930 பாம்பு பெப்ரவரி 06 1989–சனவரி 26 1990
7 சனவரி 30 1930–பெப்ரவரி 16 1931 குதிரை சனவரி 27 1990–பெப்ரவரி 14 1991
8 பெப்ரவரி 17 1931–பெப்ரவரி 05 1932 ஆடு பெப்ரவரி 15 1991–பெப்ரவரி 03 1992
9 பெப்ரவரி 06 1932–சனவரி 25 1933 குரங்கு பெப்ரவரி 04 1992–சனவரி 22 1993
10 சனவரி 26 1933–பெப்ரவரி 13 1934 சேவல் சனவரி 23 1993– பெப்ரவரி 09 1994
11 பெப்ரவரி 14 1934–பெப்ரவரி 03 1935 நாய் பெப்ரவரி 10 1994–சனவரி 30 1995
12 பெப்ரவரி 04 1935–சனவரி 23 1936 பன்றி சனவரி 31 1995–பெப்ரவரி 18 1996
13 சனவரி 24 1936–பெப்ரவரி 10 1937 எலி பெப்ரவரி 19 1996–பெப்ரவரி 06 1997
14 பெப்ரவரி 11 1937–சனவரி 30 1938 எருது பெப்ரவரி 07 1997–சனவரி 27 1998
15 சனவரி 31 1938–பெப்ரவரி 18 1939 புலி சனவரி 28 1998–பெப்ரவரி 15 1999
16 பெப்ரவரி 19 1939–பெப்ரவரி 07 1940 முயல் பெப்ரவரி 16 1999–பெப்ரவரி 04 2000
17 பெப்ரவரி 08 1940–சனவரி 26 1941 டிராகன் பெப்ரவரி 05 2000–சனவரி 23 2001
18 சனவரி 27 1941–பெப்ரவரி 14 1942 பாம்பு சனவரி 24 2001–பெப்ரவரி 11 2002
19 பெப்ரவரி 15 1942–பெப்ரவரி 04 1943 குதிரை பெப்ரவரி 12 2002–சனவரி 31 2003
20 பெப்ரவரி 05 1943–சனவரி 24 1944 ஆடு பெப்ரவரி 01 2003–சனவரி 21 2004
21 சனவரி 25 1944–பெப்ரவரி 12 1945 குரங்கு சனவரி 22 2004–பெப்ரவரி 08 2005
22 பெப்ரவரி 13 1945–பெப்ரவரி 01 1946 சேவல் பெப்ரவரி 09 2005–சனவரி 28 2006
23 பெப்ரவரி 02 1946–சனவரி 21 1947 நாய் சனவரி 29 2006–பெப்ரவரி 17 2007
24 சனவரி 22 1947–பெப்ரவரி 09 1948 பன்றி பெப்ரவரி 18 2007–பெப்ரவரி 06 2008
25 பெப்ரவரி 10 1948–சனவரி 28 1949 எலி பெப்ரவரி 07 2008–சனவரி 25 2009
26 சனவரி 29 1949–பெப்ரவரி 16 1950 எருது சனவரி 26 2009–பெப்ரவரி 14 2010
27 பெப்ரவரி 17 1950–பெப்ரவரி 05 1951 புலி பெப்ரவரி 15 2010–பெப்ரவரி 02 2011
28 பெப்ரவரி 06 1951–சனவரி 26 1952 முயல் பெப்ரவரி 03 2011–சனவரி 22 2012
29 சனவரி 27 1952–பெப்ரவரி 13 1953 டிராகன் சனவரி 23 2012–பெப்ரவரி 09 2013
30 பெப்ரவரி 14 1953–பெப்ரவரி 02 1954 பாம்பு பெப்ரவரி 10 2013–சனவரி 30 2014
31 பெப்ரவரி 03 1954–சனவரி 23 1955 குதிரை சனவரி 31 2014–பெப்ரவரி 18 2015
32 சனவரி 24 1955–பெப்ரவரி 11 1956 ஆடு பெப்ரவரி 19 2015–பெப்ரவரி 07 2016
33 பெப்ரவரி 12 1956–சனவரி 30 1957 குரங்கு பெப்ரவரி 08 2016–சனவரி 27 2017
34 சனவரி 31 1957–பெப்ரவரி 17 1958 சேவல் சனவரி 28 2017–பெப்ரவரி 18 2018
35 பெப்ரவரி 18 1958–பெப்ரவரி 07 1959 நாய் பெப்ரவரி 19 2018–பெப்ரவரி 04 2019
36 பெப்ரவரி 08 1959–சனவரி 27 1960 பன்றி பெப்ரவரி 05 2019–சனவரி 24 2020
37 சனவரி 28 1960–பெப்ரவரி 14 1961 எலி சனவரி 25 2020–பெப்ரவரி 11 2021
38 பெப்ரவரி 15 1961–பெப்ரவரி 04 1962 எருது பெப்ரவரி 12 2021–சனவரி 31 2022
39 பெப்ரவரி 05 1962–சனவரி 24 1963 புலி பெப்ரவரி 01 2022–சனவரி 21 2023
40 சனவரி 25 1963–பெப்ரவரி 12 1964 முயல் சனவரி 22 2023–பெப்ரவரி 09 2024
41 பெப்ரவரி 13 1964–பெப்ரவரி 01 1965 டிராகன் பெப்ரவரி 10 2024–சனவரி 28 2025
42 பெப்ரவரி 02 1965–சனவரி 20 1966 பாம்பு சனவரி 29 2025–பெப்ரவரி 16 2026
43 சனவரி 21 1966–பெப்ரவரி 08 1967 குதிரை பெப்ரவரி 17 2026–பெப்ரவரி 05 2027
44 பெப்ரவரி 09 1967–சனவரி 29 1968 ஆடு பெப்ரவரி 06 2027–சனவரி 25 2028
45 சனவரி 30 1968–பெப்ரவரி 16 1969 குரங்கு சனவரி 26 2028–பெப்ரவரி 12 2029
46 பெப்ரவரி 17 1969–பெப்ரவரி 05 1970 சேவல் பெப்ரவரி 13 2029–பெப்ரவரி 02 2030
47 பெப்ரவரி 06 1970–சனவரி 26 1971 நாய் பெப்ரவரி 03 2030–சனவரி 22 2031
48 சனவரி 27 1971–பெப்ரவரி 14 1972 பன்றி சனவரி 23 2031–பெப்ரவரி 10 2032
49 பெப்ரவரி 15 1972–பெப்ரவரி 02 1973 எலி பெப்ரவரி 11 2032–சனவரி 30 2033
50 பெப்ரவரி 03 1973–சனவரி 22 1974 எருது சனவரி 31 2033–பெப்ரவரி 18 2034
51 சனவரி 23 1974–பெப்ரவரி 10 1975 புலி பெப்ரவரி 19 2034–பெப்ரவரி 07 2035
52 பெப்ரவரி 11 1975–சனவரி 30 1976 முயல் பெப்ரவரி 08 2035–சனவரி 27 2036
53 சனவரி 31 1976–பெப்ரவரி 17 1977 டிராகன் சனவரி 28 2036–பெப்ரவரி 14 2037
54 பெப்ரவரி 18 1977–பெப்ரவரி 06 1978 பாம்பு பெப்ரவரி 15 2037–பெப்ரவரி 03 2038
55 பெப்ரவரி 07 1978–சனவரி 27 1979 குதிரை பெப்ரவரி 04 2038–சனவரி 23 2039
56 சனவரி 28 1979–பெப்ரவரி 15 1980 ஆடு சனவரி 24 2039–பெப்ரவரி 11 2040
57 பெப்ரவரி 16 1980–பெப்ரவரி 04 1981 குரங்கு பெப்ரவரி 12 2040–சனவரி 31 2041
58 பெப்ரவரி 05 1981–சனவரி 24 1982 சேவல் பெப்ரவரி 01 2041–சனவரி 21 2042
59 சனவரி 25 1982–பெப்ரவரி 12 1983 நாய் சனவரி 22 2042–பெப்ரவரி 09 2043
60 பெப்ரவரி 13 1983–பெப்ரவரி 01 1984 பன்றி பெப்ரவரி 10 2043–சனவரி 29 2044

மூலகம்

[தொகு]

சீன சோதிடத்தில் மொத்தம் ஐந்து மூலகங்கள் உள்ளன. மரம், நெருப்பு, உலோகம், நீர் மற்றும் பூமி ஆகிய இவை அனைத்தும் தனியே அன்றி யின்-யான் சக்திகளுடன் சேர்த்தே குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு மூலகமும் ஒவ்வொரு குறிகளின் தன்மைகளை ஆளும் சக்தி கொண்டவையாக கருதப்படுகின்றன.

மூலக அட்டவனை

[தொகு]
மூலகம் வருடக்குறி
மரம் முயல், புலி (மெலிந்த), டிராகன் (வலுத்த)
நெருப்பு பாம்பு, குதிரை (வலுத்த), ஆடு (மெலிந்த)
உலோகம் குரங்கு (வலுத்த), சேவல், நாய் (மெலிந்த)
நீர் எலி (வலுத்த), எருது, பன்றி (மெலிந்த)
பூமி டிராகன், ஆடு, நாய், எருது (சம நிலையில் இருப்பதால் அனைத்து குறிகளின் தன்மைகளை ஆள வல்லது.)

யின்-யான்

[தொகு]

யின் மற்றும் யான் எனப்படுபவை இந்த உலகத்தை ஆளும் இரு வேறு நேர் எதிர் சக்திகள் என சீனத் தத்துவம் கூறுகின்றது. இரவு-பகல், ஆண்மை-பெண்மை என்று இவ்வாறான நேர் எதிர் யின்-யான் சக்திகளே போட்டி போட்டுக் கொண்டு இந்த உலகத்தை இயக்குவதாக சீன சோதிடம் கூறுகின்றது. இவ்விரு சக்திகளின் ஆளுமை ஒரு மனிதனின் நடவடிக்கைகளை மாற்ற வல்லது என சீன சோதிடம் குறிப்பிடுகின்றது.

யின் கூறுகள்

[தொகு]

எதிர்மறை சக்தி, கருப்பு, அடிமைத்தனம், நீர், உலோகம் மற்றும் பூமி ஆகியவை யின் கூறுகள் ஆகும். இவை இரவு, பள்ளத்தாக்கு, நதிகள் மற்றும் ஓடைகள் ஆகியவற்றைச் சார்ந்தது.

யான் கூறுகள்

[தொகு]

நேர்மறை சக்தி, ஆளுமை, நெருப்பு, மரம் மற்றும் காற்று ஆகியவை யான் கூறுகள் ஆகும். இவை பகல், மலைகல் மற்றும் குன்றுகள் ஆகியவற்றைச் சார்ந்தது

யின்-யான் அட்டவனை

[தொகு]

யின் யான் ஆகியவை மரம், நெருப்பு, பூமி, உலோகம், நீர் ஆகிய ஐந்து மூலகங்களுடன் சேர்த்து கணிக்கப்படுகின்றது. இவை பத்து வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வருகின்றன. எனவே வருட முடிவு எண்ணைக் கொண்டே இதை சுலபமாக கணிக்கலாம். மாதங்கள் போல அல்லாமல் சீன வருடங்கள் ஆங்கில வருடங்களை ஒத்து வருவதால் இதைக் கணிக்க ஆங்கில ஆண்டு முறையையே பயன்படுத்தலாம்.

  • வருட முடிவு 0 ஆக இருந்தால் - யான் உலோகம்
  • வருட முடிவு 1 ஆக இருந்தால் - யின் உலோகம்
  • வருட முடிவு 2 ஆக இருந்தால் - யான் நீர்
  • வருட முடிவு 3 ஆக இருந்தால் - யின் நீர்
  • வருட முடிவு 4 ஆக இருந்தால் - யான் மரம்
  • வருட முடிவு 5 ஆக இருந்தால் - யின் மரம்
  • வருட முடிவு 6 ஆக இருந்தால் - யான் நெருப்பு
  • வருட முடிவு 7 ஆக இருந்தால் - யின் நெருப்பு
  • வருட முடிவு 8 ஆக இருந்தால் - யான் பூமி
  • வருட முடிவு 9 ஆக இருந்தால் - யின் பூமி

உள்குறி

[தொகு]

சீன சோதிடத்தில் அதன் வருடங்கள் மொத்தம் பன்னிரெண்டாக பிரிக்கப்பட்டு, அவைகளுக்கு பன்னிரெண்டு விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது போலவே, அதன் மாதங்களும் பன்னிரெண்டாக பிரிக்கப்பட்டு அவற்றிர்கும் அதே விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருக்கும் நாள்களும் இரண்டு மணிகளுக்கு ஒரு காலம் என்ற விகிதத்தில் மேலும் பன்னிரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவையே சீன சோதிடத்தின் உள்குறிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த உள்குறிகள் ஒரு மனிதனின் குணாதிசயங்களை நுணுக்கமாக அறியப் பயன்படுத்தப்படுகின்றன.

மாதக் குறி அட்டவனை

[தொகு]
  சூரிய
ரேகை
தேதி சீன
மாதம்
நிலையான
முகம்
காலம் தேதி சூரிய
ரேகை
1 314 பெப் 4 - பெப் 18 புலி மரம் வசந்த காலம் பெப் 19 - மார்ச் 5 329
2 344 மார்ச் 6 - மார்ச் 20 முயல் மரம் வசந்த காலம் மார்ச் 21 - ஏப் 4 0
3 14 ஏப் 5 - ஏப் 19 டிராகன் மரம் வசந்த காலம் ஏப் 20 - மே 4 29
4 44 மே 5 - மே 20 பாம்பு நெருப்பு கோடை காலம் மே 21 - சூன் 5 59
5 74 சூன் 6 - சூன் 20 குதிரை நெருப்பு கோடை காலம் சூன் 21 - சூலை 6 89
6 104 சூலை 7 - சூலை 22 ஆடு நெருப்பு கோடை காலம் சூலை 23 - ஆக 6 119
7 134 ஆக 7 - ஆக 22 குரங்கு உலோகம் இலையுதிர் காலம் ஆக 23 - செப் 7 149
8 164 செப் 8 - செப் 22 சேவல் உலோகம் இலையுதிர் காலம் செப் 23 - அக் 7 181
9 194 அக் 8 - அக் 22 நாய் உலோகம் இலையுதிர் காலம் அக் 23 - நவ 6 211
10 224 நவ 7 - நவ 21 பன்றி நீர் குளிர் காலம் நவ 22 - டிச 6 244
11 251 டிச 7 - டிச 21 எலி நீர் குளிர் காலம் டிச 22 - சன 5 271
12 284 சன 6 - சன 19 எருது நீர் குளிர் காலம் சன 20 - பெப் 3 301

நேரக் குறி அட்டவனை

[தொகு]
  நேரம் குறி
1 23:00 – 1:00 எலி
2 1:00 – 3:00 எருது
3 3:00 – 5:00 புலி
4 5:00 – 7:00 முயல்
5 7:00 – 9:00 டிராகன்
6 9:00 – 11:00 பாம்பு
7 11:00 – 13:00 குதிரை
8 13:00 – 15:00 ஆடு
9 15:00 – 17:00 குரங்கு
10 17:00 – 19:00 சேவல்
11 19:00 – 21:00 நாய்
12 21:00 – 23:00 பன்றி

கணிப்பு

[தொகு]

சீன சோதிடம் ஒருவர் பிறந்த வருடத்தைக் கொண்டு அவரின் பொதுவான குணங்கள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கூறுகின்றது. அதோடு அவரின் உள்குறிகளைக் கொண்டு நுணுக்கமான அளவிலும் அறிய முடிகின்றது. இந்த உள்குறிகள் பின்வருமாறு கணிக்கப்படுகின்றன.

1980 ஆம் வருடம், மார்ச் மாதம் 26 ஆம் திகதி, காலை 7.45 மணிக்கு பிறந்த ஒருவரின் உள்குறிகள்,

  • வருடக்குறி - வலுத்த குரங்கு - (1980 ஆம் வருடத்தில் பிறந்ததால்)(உலோக மூலத்தில் பிறந்ததால்)
  • யின் யான் சக்தி - யான் சக்தி (வருட முடிவு '0' வாக இருப்பதால்)
  • மாதக்குறி - முயல் (மார்ச் 21 மற்றும் ஏப்ரல் 19 ஆகிய திகதிகளின் இடைப்பட்ட நாளில் பிறந்ததால்)
  • நிலையான மூலகம் - மரம் (முயல் மாதத்தில் பிறந்ததால்)
  • காலம் - வசந்த காலம் (முயல் மாதத்தில் பிறந்ததால்)
  • நேரக்குறி - டிராகன் (காலை 7.00 மற்றும் 9.00 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்ததால்)

இதையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 何丙郁 (2003). Chinese mathematical astrology : reaching out to the stars. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415297591.
  2. Sun, Xiaochun; Kistemaker, Jacob (1997). The Chinese Sky during the Han: Constellating Stars and Society. Sinica Leidensia, vol. 38. Leiden: Brill. pp. 3–4. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1163/9789004488755_009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-10737-3.
  3. Levitt, Ellen Dorn (2013). Fate A Chinese Zodiac (in English) (1st ed.). London: Center Press, John L. Norris Art Center, Lyndon Institute. pp. 1–130.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_சோதிடம்&oldid=4098942" இலிருந்து மீள்விக்கப்பட்டது