உள்ளடக்கத்துக்குச் செல்

சார்லொட் அமாலீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்லொட் அமாலீ
சார்லொட் அமாலீ
சார்லொட் அமாலீ
நாடு ஐக்கிய அமெரிக்கா
பிரதேசம் அமெரிக்க கன்னித் தீவுகள்
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்18,481
அஞ்சற் குறியீடு
00801–00804
இடக் குறியீடு340

சார்லொட் அமாலீ அல்லது சார்லட் அமாலி அமெரிக்கக் கன்னித்தீவுகளின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் 1666இல் தபூஸ் எனும் பெயரில் தோற்றம்பெற்றது. 1691இல் இது டென்மார்க் அரசன் ஐந்தாம் கிரிஸ்டியனின் பட்டத்துராணியான சார்லொட் அமாலீ ஹெசி-கெசல் என்பவரின் பெயரையொற்றி சார்லொட் அமாலீ எனப் பெயர் மாற்றம் பெற்றது. இந்நகரிலுள்ள துறைமுகம் முன்னர் கடத்தல்காரர்களால் அதிகம் பயன்படித்தப்பட்டது. தற்போது சொகுசுக்கப்பல்கள் அதிகம் தரித்துச் செல்லும் ஒரு துறைமுகமாக இது விளங்குகின்றது. 2010இல் இந்நகரின் மக்கட்டொகை 18481[1][2] ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Census Bureau Releases Census 2000 Population Counts for the U.S. Virgin Islands, U.S. Census Bureau, ஜூலை 3, 2001
  2. By ALDETH LEWIN (Daily News Staff) (2011-08-25). "Census shows V.I.'s population down 2% - News". Virgin Islands Daily News. Archived from the original on 2013-04-12. பார்க்கப்பட்ட நாள் 2014-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லொட்_அமாலீ&oldid=3791499" இலிருந்து மீள்விக்கப்பட்டது