உள்ளடக்கத்துக்குச் செல்

சாய் லுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாய் லுன்
காகிதத் தயாரிப்பின் காவல்தெய்வம் சாய் லுன் (18ம் நூற்றாண்டு ஓவியம்)
பிறப்புca. 50
கையாங் (இன்றைய லேயாங்), சீனா
இறப்பு121
சீனா

சாய் லுன் (T'sai Lun கி.பி.50 – கி.பி.121) காகிததைக் கண்டறிந்த சீன அறிஞர். இவர் சீனாவின் அரசவையில் ஓர் அதிகாரியாக இருந்தார். அவர் தாம் தயாரித்த காகித மாதிரிகளைப் பேரரசர் ஹோ-டியினிடம் கி.பி.105 வாக்கில் அளித்தார். ஹான் அரச மரபின் அகராதி முறை வரலாற்றில் சாய் லுன் கண்டுபிடிப்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது. இச்சாதனைக்காக அவர் சீனாவில்பெரிதும் மதிக்கப்பட்டார்.சீனாவில் இரண்டாம் நூற்றாண்டின் போது காகிதம் பெருமளவு பயன்பாட்டிற்கு வந்தது. அடுத்த சில நூற்றாண்டுகளில் சீனாவிலிருந்து மற்ற ஆசிய நாடுகளுக்கு காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. காகிதம் தயாரிக்கும் உத்தியை சீனர்கள் நீண்ட காலம் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனால் 151-ல் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சீனக் காகிதத் தயாரிப்பாளர்களைப் பிடித்துச் சென்றனர். அதன் பின் சில ஆண்டுகளிலேயே சமர்கண்ட், பாக்தாத்திலும் காகிதம் தயாரிக்கப்படலாயிற்று. இக்கலை படிப்படியாக அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. நவீன அச்சுக்கலையை ஜான் கூட்டன்பர்க் கண்டுபிடித்த பிறகு மேனாடுகளில் ஆட்டுத்தோலுக்குப் பதில் காகிதம் முக்கிய எழுது பொருள் ஆயிற்று. காகிதம் தயாரிக்க சாய் லுன் கையாண்ட அதே முறைதான் 1800-ல் எந்திர முறை புகுத்தப்பட்ட பிறகும் கூட அதே அடிப்படையில் மாற்றமின்றி காகிதம் தயாரிக்கப் பயன்படுகிறது.

சாய் லுன் வாழ்க்கை குறித்து அதிகமான விவரங்கள் கிடைக்கவில்லை அவர் ஓர் அலியாக இருந்தார் எனச் சீனச் சான்றுகள் கூறுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பிற்குப் பின்னர் மன்னர் பெரும் மகிழ்ச்சி கொண்டு சாய் லுன்னுக்கு பதவி உயர்வு அளித்தார். அவர் பணக்காரராகவும் ஆனார். ஆனால் அரண்மனை சூழ்ச்சி ஒன்றில் சிக்கி அவருடைய செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. துன்பத்திற்குள்ளான சாய் லுன் நீராடி அலங்கார ஆடைகள் அணிந்து நஞ்சுண்டு மாண்டார் என சீன வரலாறு கூறுகிறது.

சாய் லுன் காகிதம் தயாரித்த முறைகள்

[தொகு]
சாய் லுன் காகிதம் தயரித்த முறை

உசாத்துணை

[தொகு]

மைக்கேல் ஹெச்.ஹார்ட், 100 பேர் (புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை), மீரா பதிப்பகம்-2008

இவற்றையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்_லுன்&oldid=3859785" இலிருந்து மீள்விக்கப்பட்டது