சன்குதரோ
சன்குதரோ | |
---|---|
மாற்றுப் பெயர் | சன்கு தரோ |
இருப்பிடம் | முல்லன் சாந்த், நவாப்ஷா மாவட்டம், பாகிஸ்தான் |
ஆயத்தொலைகள் | 26°10′25″N 68°19′23″E / 26.17361°N 68.32306°E |
வகை | தொல்லியல் களம் |
பரப்பளவு | 5 ha (12 ஏக்கர்கள்) |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு 4,000 |
பயனற்றுப்போனது | கிமு 1,700 |
காலம் | அரப்பா 4 |
கலாச்சாரம் | சிந்துவெளி நாகரிகம் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1930, 1935–1936 |
அகழாய்வாளர் | நானி கோபால் மசூம்தார், ஜான் ஹென்றி மக்கே |
சான்குதரோ (Chanhudaro (also Chanhu Daro or Chanhu Dado) பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில், நவாப்ஷா மாவட்டத்தில் உள்ள சான்குதராவில் சிந்துவெளி நாகரிக காலத்திய மூன்று தொல்லியல் மேடுகளை அகழ்வாய்வு செய்யப்பட்டது. அதில் ஒரு தொல்லியல் மேடு 5 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. சான்குதரோ தொல்லியல் களம் மொகெஞ்சதாரோவிற்கு தெற்கே 130 கிமீ தொலைவில் உள்ளது. சான்குதரோ கிமு 4,000 முதல் கிமு 1,700 வரை மக்கள் குடியிருப்பாக விளங்கியது.
தொல்பொருட்கள்
[தொகு]செப்புக் கத்திகள், ஈட்டிகள், கூர்மையான கத்திகள், தொழிற் கருவிகள் [1] கோடாரிகள், சமையல் பாத்திரங்கள் போன்ற தொல்பொருட்கள் இத்தொல்லியல் களத்தில் கிடைத்துள்ளது.[2] செப்பு மீன்பிடி கொக்கிகள் இத்தொல்லியல் களத்தில் கிடைத்துள்ளது.[3] மேலும் சுடுமண் வண்டி மாதிரிகள், சுடுமண் பறவை, தட்டுகள், கிண்ணங்கள் கிடைத்துள்ளது.
சன்குதரோ தொல்லியல் களத்தில் கிடைத்தவற்றில் ஈட்டி எறியும் ஆண் அல்லது நடனமாடுபவரின் சிதைந்த சிலை (4.1 cm) புகழ் பெற்றது. இது தற்போது பாஸ்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது.[4][5] சான்குதரோவில் சிந்துவெளி முத்திரைகள் கண்டறியப்பட்டுள்ளது.[6][7]
அழகிய மணிகள் உற்பத்தி செய்யும் தொழில் பட்டறைகள் மற்றும் ஊதுலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[8] சங்கு வளையல்கள், மணி செய்வதற்கான மூலப்பொருட்கள், சோப்புக் கல்லால் செய்யப்பட்ட சிந்துவெளி முத்திரைகள், உலோகப் பாத்திரங்கள் கிடைத்துள்ளது.[9]
எள் தானியம் இத்தொல்லியல் களத்தில் கிடைத்துள்ளது.[10] இங்கு பட்டாணி விளைவிக்கப்பட்டுள்ளது.[11]
சன்குதரோ, அரப்பா மற்றும் ராகி கர்கி போன்ற சிந்துவெளி தொல்லியல் களங்களில் மட்டுமே வெள்ளி அல்லது வெண்கலப் பாத்திரங்களில் பஞ்சு துணிகள் இருந்த அடையாளங்கள் கிடைத்துள்ளது.[12]
சன்குதரோவில், முண்டிகாக் தொல்லியல் களத்தில் கிடைத்தது போன்ற கிமு 3000 காலத்திய இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளது.[13]
சிந்துவெளி எழுத்துகள்
[தொகு]சிந்துவெளி எழுத்துகளில் ||/ வடிவ எழுத்து சான்குதரோ தொல்லியல் களத்தில் மட்டுமே கிடைத்துள்ளது.[14]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ [Paul Yule, A Harappan 'Snarling Iron' from Chanhu daro, Antiquity 62, 1988, 116–118, பன்னாட்டுத் தர தொடர் எண் 0003-598X. URL: http://archiv.ub.uni-heidelberg.de/savifadok/volltexte/2008/145/]
- ↑ "Illustrated London News, November 21, 1936". Archived from the original on ஜூலை 9, 2019. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 28, 2019.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. Page 135
- ↑ "Museum of Fine Arts, Boston". Archived from the original on 2013-01-18. பார்க்கப்பட்ட நாள் 2019-09-28.
- ↑ McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. Page 281
- ↑ McIntosh, Jane. (2008) The Ancient Indus Valle: New Perspectives. ABC-CLIO.Page 264 [1]
- ↑ McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. Page 303
- ↑ McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. Page 237
- ↑ McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. Page 150
- ↑ McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley, New Perspectives. ABC-CLIO. Page 114
- ↑ McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley, New Perspectives. ABC-CLIO
- ↑ McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. Page 333
- ↑ McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. Page 320 [2]
- ↑ Asko Parpola (1994)