கொற்றலை ஆறு
கொற்றலை ஆறு அல்லது கொசஸ்தலை ஆறு (ஆங்கில மொழி: Kosasthalaiyar) திருவள்ளூர் மாவட்டம், சென்னை மாவட்டம் போன்ற வட தமிழகத்தில் ஓடும் ஆறாகும்.[1] வட ஆற்காடு மாவட்டப் பகுதிகளே இதன் நீர்பிடிப்புப் பகுதிகளாகும். மொத்த நீளம் 136 கி.மீ சென்னை நகருக்குள் 16 கி.மீ ஓடுகிற இந்த ஆறு ஆந்திரத்தின் கிருஷ்ணாபுரம் தொடங்கி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக, பூண்டி நீர்த் தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து திருவள்ளூர், சென்னை வழியாக ஓடி எண்ணூரில் வங்கக் கடலில் கலக்கிறது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு மேலே தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, மீஞ்சூர் அருகே சீமாபுரம் அணைக்கட்டு வள்ளூர் அணைக்கட்டு ஆகியவை மூலம் பாசனத்திற்கு பயன்படுகிறது. இதன் நீர்பிடிப்புப் பகுதி 3,757 சதுர கிலோமீட்டர், ஆற்றுப் படுக்கையின் அகலம் 150 முதல் 250 மீட்டர் வரை ஆற்றின் அதிகப்டச கொள்ளளவு வினாடிக்கு 1,25,000 கன அடி, சராசரி கொள்ளளவு 1,10,000 கன அடி, 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஓடிய வெள்ளம் வினாடிக்கு 90,000 கன அடி.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ் நாடு அரசு பொதுப்பணித் துறை
- ↑ ஓடும் நீரின் வேரை அறுத்த வரலாறு கட்டுரை, தி இந்து 7.12.2015
வெளியிணைப்புகள்
[தொகு]- RIVER AND DRAINAGE SYSTEM IN CMA - RIVERS AND DRAINAGE SYSTEM OF CHENNAI METROPOLITAN AREA
- The Kosasthalaiyar and Cooum Rivers - Kosasthalaiyar River Sub Basin