கொங்கிராடு
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/81/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_1207.png/220px-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_1207.png)
கொங்கிராடு (மொங்கோலியம்: Хонгирад) என்பது மங்கோலியப் பழங்குடியினரில் ஒரு பிரிவு ஆகும். இவர்களது பகுதியானது சீனாவின் உள் மங்கோலியா மாகாணத்தின் ஹுலுன் ஏரி மற்றும் மங்கோலியாவின் கால்கா நதி ஆகியவற்றுக்கு அருகில் அமைந்திருந்தது.[1][2] இங்கிருந்தபடி இவர்கள் ஆளும் வட சீன அரசுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். பல்வேறு கொங்கிராடு இனங்கள் ஒரே தலைவரின் கீழ் ஒன்றிணையாமலேயே இருந்தன. இதனால் இவர்களால் ஒரு இராணுவ சக்தியாக உருவாக முடியவில்லை.
குறிப்புக்கள்
[தொகு]- ↑ Хонгирад аймаг mongol.undesten.mn பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் (Mongolian)
- ↑ M. Sanjdorj, History of the Mongolian People's Republic, Volume I, 1966