கைட்டோசேன்
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாலிக்லூசம்; டிஅசிட்டைல்கைடின்; பாலி-(D)குளுகோஸ்அமைன் (Poliglusam; Deacetylchitin; Poly-(D)glucosamine)
| |
இனங்காட்டிகள் | |
9012-76-4 | |
ChemSpider | 64870 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
தொடர்புடைய சேர்மங்கள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | D-குளுக்கோசமைன், N-அசிடைல்குளுக்கோசமைன் (ஒருபடிகள்) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கைட்டோசேன் (Chitosan) /ˈkaɪt[invalid input: 'ɵ']sæn/ என்பது ஒரு நேரியல் பலசர்க்கரை (polysaccharide) ஆகும். இது ஒழுங்கமைவின்றி (random) அமைந்த β-(1-4)-பிணைப்புடைய D-குளுக்கோசமைனையும் (அசிட்டைல் நீக்கப்பட்ட அலகு) N-அசிடைல்குளுக்கோசமைனையும் (அசிட்டைலேற்றப்பட்ட அலகு) கொண்டது. இது கூனிறால் (shrimp) போன்ற பல வெளிஓடுடைய உயிரினங்களின் (crustacean) ஓடுகளைக் கார சோடியம் ஐட்ராக்சைடுடன் வினைபுரியவைத்துப் பெறப்படுகிறது
கைட்டோசேன் உயிரிமருத்துவத்தில் (biomedical) பல வகையான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இது விவசாயத்தில் விதை நேர்த்திக்கும் உயிரி பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது தாவரங்கள் பூஞ்சைத் தொற்றுகளை எதிர்த்துப் போரிட உதவுகிறது. இது ஒயின் உற்பத்தியில் ஒருங்காக்கும் காரணியாகப் (fining agent) பயன்படுத்தப்படுகிறது. இது தொழிலகங்களில் தானாக உரியும் பாலியூரித்தேன் வண்ணப் பூச்சாகப் பயன்படுகிறது. மருத்துவத்தில் இது புண்களுக்குப் போடப்படும் ஒட்டுகளில் (bandages) பயன்படுகிறது. இது குருதிப் போக்கைக் குறைப்பதோடு பாக்டீரிய எதிர்ப்புக் காரணியாகவும் செயல்படுகிறது. இது தோல் வழியாக மருந்துகளைச் செலுத்தவும் பயன்படுகிறது.
மிகவும் சச்சரவுக்குரிய வகையில், கைட்டோசேன் கொழுப்பை உறிஞ்சத்தக்கது என்று வகைப்படுத்தப்பட்டு, உணவுக் கட்டுப்பாட்டுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு உறுதியான தக்க எதிர்ப்பும் நிலவுகிறது.
ஆய்வு செய்து அறியப்பட்டதில் கைட்டோசேன் ஒரு கரையத்தகு உணவு நார்ப்பொருள் (soluble dietary fiber) ஆகும்.
வெளி இணைப்புகள்
[தொகு]- Is Chitosan a "Fat Magnet"? — Quackwatch: A critical look on the claims how chitosan can be used for weight management