கூட்டல்-கழித்தல் குறி
கூட்டல்-கழித்தல் குறி அல்லது பிளசு-மைனசு குறி (plus-minus sign - ±) என்பது பல பொருள்கொண்ட ஒரு கணிதக் குறியாகும்.
- கணிதத்தில் ஒன்றுக்கொன்று எதிரானதாக அமையும் இரு மதிப்புகளைக் குறிக்கப் பயன்படும்.
- சோதனைமுறை அறிவியலில், இக்குறி நம்பக இடைவெளியையும், அளவீட்டுப் பிழையையும் குறிக்கும்.[1]
- பொறியியலில் மதிப்புகள் ஏற்கக்கூடிய, பாதுகாப்பான வீச்சைக் குறிக்கும்.(Engineering tolerance)
- வேதியியலில் சுழிமாய்க் கலவையைக் (racemic mixture) குறிக்கும்.
- சதுரங்க விளையாட்டில் இக்குறி வெள்ளை நிறக்காய் ஆட்டக்காரரின்ஆதாயத்தையும், இக்குறியின் நிரப்பிக் குறியான ∓ , கருப்புக் காய் ஆட்டக்காரரின் ஆதாயத்தையும் குறிக்கும்.[2]
இக்குறி "பிளசு அல்லது மைனசு" ("plus or minus") என வாசிக்கப்படுகிறது.
வரலாறு
[தொகு]அல்லது என்ற பொருள்கொண்ட பிரெஞ்சு வார்த்தை "ou" உட்பட்ட இக்குறியின் வடிவம் அதன் கணிதப் பொருளில் 1626 இல் கணிதவியலாளர் ஆல்பெர்டு ஜிரடாலும், இக்குறியின் தற்கால வடிவம் 1631 இலும் பயன்படுத்தப்பட்டது.[3]
பயன்பாடு
[தொகு]கணிதம்
[தொகு]வாய்பாடுகளில் + அல்லது − ஆகிய இரண்டு குறிகளில் ஏதேனும் ஒன்றால் பதிலிடப்படக்கூடிய குறியைக் காட்டுவதற்கு ± பயன்படுத்தப்படும். இக்குறியைக் கொண்ட வாய்ப்பாடுகள் இரு மதிப்புகள் அல்லது இரு சமன்பாடுகளைத் தரும்.
எடுத்துக்காட்டு:
- x2 = 1 சமன்பாட்டின் தீர்வு x = ±1.
- ax2 + bx + c = 0 இருபடிச் சமன்பாட்டின் தீர்வு:
- முக்கோணவியல் முற்றொருமை:
- இம்முற்றொருமையில் ± குறியைப் பயன்படுத்தி, ஒன்றில் இருபுறமும் "+" குறியையும் மற்றொன்றில் இருபுறமும் "−" குறியையும் கொண்ட இரு வாய்ப்பாடுகள் ஒன்றாகச் சுருக்கித் தரப்பட்டுள்ளது. ஒருபுறம் "+" குறியும், மறுபுறம் "−" குறியும் எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்துக்கொள்ளும்போது கிடைக்கும் வாய்பாடு உண்மையானதாக இருக்காது.
சைன் சார்பின் டெயிலர் விரிவு:
இத்தொடரிலுள்ள கூட்டல்-கழித்தல் குறி, இத்தொடரின் உறுப்புகளின் குறி +, - என மாறி மாறிவரும் என்பதைக் காட்டுகிறது. அதாவது இத்தொடரில் n இன் இரட்டை மதிப்புக்கான உறுப்புகள் கூட்டப்படுகின்றன; n இன் ஒற்றை மதிப்புக்கான உறுப்புகள் கழிக்கப்படுகின்றன.
புள்ளியியல்
[தொகு]புள்ளியியலில் தோராயமாக்கத்தில் ஒரு கணியத்தின் எண் மதிப்புடன் சேர்த்து அதன் பிழை எல்லையையும் தரும்போது ⟨±⟩ குறி பயன்படுத்தப்படுகிறது.[1] எடுத்துக்காட்டாக, "5.7±0.2" என்பது ஒரு கணியத்தின் மதிப்பு 5.5 முதல் 5.9 வரை இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
பிழை எல்லையைக் குறிக்க விழுக்காடும் பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, 230 ± 10% V என்பது மின்னழுத்தத்தின் அளவு 230 V விட 10% குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ (207 V to 253 V) இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. மேல் வரம்புக்கும் கீழ் வரம்புக்கும் வெவ்வேறான மதிப்புகள் பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக,
ஒரு கணியத்தின் மதிப்பு 5.7 ஆக இருக்கலாம்; அதேசமயம் அதிகபட்சமாக 5.9 ஆகவும், குறைந்தபட்சம் 5.6 ஆகவும் இருக்கலாம் என்பதை 5.7+0.2
−0.1 எனக் குறிக்கலாம்.
சதுரங்கம்
[தொகு]சதுரங்க விளையாட்டில் வெள்ளைக் காய் ஆட்டக்காரரின் ஆதாயத்தைக் குறிக்க ± குறியும், கருப்புக் காய் ஆட்டக்காரரின் ஆதாயத்தைக் குறிக்க ∓ குறியும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் சதுரங்கத்தில் + , – குறிகளே பெரும்பாலும் கையாளப்படுகின்றன.[2] + , − குறிகள், ± , ∓ குறிகளை விட மிக அதிகளவு ஆதாயத்தைக் குறிக்கின்றன..
கழித்தல்-கூட்டல் குறி
[தொகு]"±" குறியுடன் இணைத்து பயன்படுத்தப்படும் மற்றொரு குறி கழித்தல்-கூட்டல் குறி (∓). எடுத்துக்காட்டாக "x ± y ∓ z" என்ற கோவை, "x + y − z" அல்லது/மற்றும் "x − y + z" எனப் பொருள்படும். ஆனால் "x + y + z" , "x − y − z" எனப் பொருள்படாது. "∓" குறியில் மேலமைந்துள்ள "−" குறியானது "±" இலுள்ள "+" குறியுடனும், "∓" குறியில் கீழமைந்துள்ள "+" குறியானது "±" இல் இலுள்ள "-" குறியுடனும் இணையும். ஒரு கோவையில் இருமுறை "±" குறி காணப்படுமானால், அக்கோவை இரண்டு அல்லது நான்கு வெவ்வேறான கோவைகளாகப் பொருள்படுமா என்பதைக் குறியீட்டை மட்டும் கொண்டு கூற முடியாது. குழப்பமின்றி பொருள் கொள்வதற்கு மேலே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டை "x ± (y − z)" என எழுதலாம்.
இருப்பினும் முக்கோணவியல் முற்றொருமைகளில் "± , ∓" இரண்டும் பயன்படுத்தப்படுகின்றன:
இதிலிருந்து பெறப்படும் சமன்பாடுகள்:
ஆனால் கீழுள்ள இரு இரு சமன்பாடுகளாக ஒருபோதும் அமையாது:
இரு சமன்பாடுகளைத் தரும் மற்றொரு எடுத்துக்காட்டு:
இதிலிருந்து பெறப்படும் இரு சமன்பாடுகள்:
ஒத்த எழுத்துருக்கள்
[தொகு]கூட்டல்-கழித்தல் மற்றும் கழித்தல்-கூட்டல் குறிகள் முறையே, சீன எழுத்துமுறையிலுள்ள 土, 干 இரண்டையும் ஒத்துள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Brown, George W. (1982), "Standard Deviation, Standard Error: Which 'Standard' Should We Use?", American Journal of Diseases of Children, 136 (10): 937–941, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1001/archpedi.1982.03970460067015.
- ↑ 2.0 2.1 Eade, James (2005), Chess For Dummies (2nd ed.), John Wiley & Sons, p. 272, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471774334.
- ↑ Cajori, Florian (1928), A History of Mathematical Notations, Volumes 1-2, Dover, p. 245, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486677668.