குளூட்டன் ஒவ்வாமை
Appearance
குளூட்டன் ஒவ்வாமை | |
---|---|
குளூட்டன் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட சிறுகுடலின் தோற்றம். | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | இரையக குடலியல் |
ஐ.சி.டி.-10 | K90.0 |
ஐ.சி.டி.-9 | 579.0 |
ம.இ.மெ.ம | 212750 |
நோய்களின் தரவுத்தளம் | 2922 |
மெரிசின்பிளசு | 000233 |
ஈமெடிசின் | med/308 ped/2146 radio/652 |
பேசியண்ட் ஐ.இ | குளூட்டன் ஒவ்வாமை |
ம.பா.த | D002446 |
ஜீன்ரிவ்வியூசு |
குளூட்டன் ஒவ்வாமை (Coeliac disease) என்பது சிறுகுடலில் ஏற்படும் தன்னெதிர்ப்பு நோயாகும். இந்நோய் குழந்தைப் பருவத்திலிருந்து முதியவர்கள் வரை மரபியல் முன்னிணக்கம் கொண்டவர்களில் ஏற்படுகிறது. செரிமானப் பாதையில் தொந்தரவு மற்றும் வலி, நாட்பட்ட மலச்சிக்கல், பேதி, குழந்தை மரணம், இரத்தச்சோகை[1], அசதி முதலியவை இந்நோயின் அறிகுறிகளாகும். என்றாலும், இத்தகு அறிகுறிகளில்லாமலும் பிற உடல் உறுப்புகளில் வேறு அறிகுறிகள் காணப்படலாம். உணவிலிருந்து தேவையான உயிர்ச்சத்துகளைச் சிறுகுடல் சரியாக உறிஞ்சுவது குறைபாடடைவதால் உயிர்ச்சத்து ஏ குறைபாடு இந்நோயாளிகளில் காணப்படுகிறது.
காரணங்கள், நோய்க்கூற்று உடலியக்கவியல்
[தொகு]கோதுமைப் புரதம் மற்றும் பிற தானியங்களில் (உதாரணமாக வாற்கோதுமை, ராய் (புல்வகை)) உள்ள இதே மாதிரியானப் புரதங்களுக்கெதிராக ஏற்படும் வினைகளினால் குளூட்டன் ஒவ்வாமை ஏற்படுகிறது[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ van der Windt DA, Jellema P, Mulder CJ, Kneepkens CM, van der Horst HE (2010). "Diagnostic testing for celiac disease among patients with abdominal symptoms: a systematic review". JAMA 303 (17): 1738–46. doi:10.1001/jama.2010.549. பப்மெட்:20442390.
- ↑ Di Sabatino A, Corazza GR (April 2009). "Coeliac disease". Lancet 373 (9673): 1480–93. doi:10.1016/S0140-6736(09)60254-3. பப்மெட்:19394538.