உள்ளடக்கத்துக்குச் செல்

கிண்ணர நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாபாரத இதிகாச கால நாடுகள்

கிண்ணரர்கள் (Kinnara Kingdom) பண்டைய பரத கண்டத்தின் இமயமலை பகுதிகளில் வாழ்ந்த உயர் சக்தி மனிதர்களாக புராணங்களும், மகாபாரதமும் கூறுகிறது. கிண்ணர நாட்டில் வாழும் மக்களை கிண்ணரர்கள் அழைக்கப்படுகின்றனர்.

புராணங்கள் கிண்ணரர்களை குதிரை கழுத்து மனிதர்கள் எனக் கூறுகிறது. கிண்ணரர்கள் மனிதர்களை விட உயர் சக்தி கொண்டவர்களாகவும்; இந்திரன் போன்ற தேவர்களை விட சக்தி குறைந்தவர்களாகவும் புராணங்கள் கூறுகிறது.

கிண்ணரர்கள் மேல் பாதி மனித உடலும்; கீழ் பாதி குதிரை உடலும் கொண்டவர்கள் என மகாபாரத இதிகாசம் வருணிக்கிறது. கிண்ணரர்கள் இமயமலையில் உயரத்தில் வாழ்பவர்கள் என்றும்; சிறந்த குதிரைப்படை வீரர்கள் என்றும்; கந்தர்வர் மற்றும் கிம்புருசர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் மகாபாரதம் விளக்குகிறது.

கிண்ணரர்களின் வாழிடங்கள்

[தொகு]

இமயமலையில் குறைந்த உயரத்தில் உள்ள மந்தார மலையில் (தற்கால இமாசலப் பிரதேசம்) கிண்ணரர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறாது.

பிற இனத்தவர்களுடான உறவுகள்

[தொகு]

கவர்ச்சியான இன மக்களான நாகர்கள், உரகர்கள், பன்னகர்கள், சுபர்ணர்கள், வித்தியாதரர்கள், சாரணர்கள், வாலகில்யர்கள், பிசாசர்கள், கந்தர்வர்கள், அரம்பையர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள், யட்சினிகள், அசுரர்கள், அரக்கர்கள் மற்றும் வானரர்களுடன் தொடர்புறுத்தி கிண்ணர மக்கள் பேசப்படுகிறார்கள். [1][2] [3] (1-18), (2-10), (3-82,84,104,108,139,200,223,273) (4-70), (5-12), (7-108,160), (8-11), (9-46), (12- 168,227,231,302,327,334,(13-58,83,87,140), (14-43,44,88,92).[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்ணர_நாடு&oldid=4057552" இலிருந்து மீள்விக்கப்பட்டது