காலிக் அமில வினையாக்கி
காலிக் அமில வினையாக்கி (Gallic acid reagent) என்பது காலிக் அமிலமும் கந்தக அமிலமும் சேர்ந்த ஒரு வினையாக்கியாகும். சிறுநீர், இரத்தம், வியர்வை போன்ற மாதிரிகளில் போதைப்பொருள் அல்லது அவற்றின் வளர்சிதைமாற்ற முன்னோடி வேதிப்பொருள்களை உடனடி சோதனை மூலம் முன்கூட்டியே அடையாளம் காண இவ்வினைப்பொருள் பயன்படுகிறது[1]. ஒவ்வொரு 10 மில்லி கந்தக அமிலத்திற்கும் 0.5 கிராம் காலிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது [2]. இதே விகித்த்தில் கந்தக அமிலத்திலுள்ள புரோப்பைல் காலேட்டு எனப்படும் காலிக் அமில என் – புரோப்பைல் எசுத்தரையும் இதற்காகப் பயன்படுத்தலாம் [3]. இதன் குறுகிய ஆயுள் (விரைவில் வெளிறிய ஊதா நிறமாக மாறுவதால்) சில நேரங்களில் தனி புட்டியில் காலிக் அமிலத்தை எத்தனாலில் கரைத்து வைத்துக் கொண்டு பரிசோதிக்கும் நேரத்தில் கந்தக அமிலத்தை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறையில் 100 மில்லி எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. எத்தனாலில் உள்ள இந்த காலிக் அமிலத்தில் ஒரு துளி கந்த அமிலம் மட்டும் சேர்க்கப்பட்டு வினையாக்கி தயாரித்துக் கொள்ளப்படுகிறது [1]..
பொருள் | நிறங்கள் |
---|---|
மெத்திலோன் | மஞ்சள்[3] |
மெத்திலீன்டையாக்சிபைரோவலேரோன் | மஞ்சள்[3] |
மெப்பீட்ரோன் | வினையில்லை[3] |
மெத்கேத்தினோன் | வினையில்லை[3] |
கேத்தினோன் | வினையில்லை[3] |
[[3-புளோரோமெத்கேத்தினோன் | வினையில்லை[3] |
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Colour Tests for Precursor Chemicals of Amphetamine-Type Substances" (pdf). UNODC. December 2007. p. 38. பார்க்கப்பட்ட நாள் 28 November 2015.
- ↑ Rapid Testing Methods of Drugs of Abuse. Manual for use by national law enforcement and narcotics laboratory personnel (ST/NAR/13/REV.1), United Nations, New York, 1994.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Toole, Kaitlyn E (2012). "Color Tests for the Preliminary Identification of Methcathinone and Analogues of Methcathinone". Microgram 9 (1). http://www.dea.gov/pr/microgram-journals/2012/mj9-1_27-32.pdf. பார்த்த நாள்: 2020-01-19.