உள்ளடக்கத்துக்குச் செல்

கருஞ்சிறுத்தைக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருஞ்சிறுத்தைக் கட்சி

கருஞ்சிறுத்தைக் கட்சி (ஆங்கிலம்: Black Panther Party), தொடக்கத்தில் முழுப் பெயர் கருஞ்சிறுத்தை தற்காப்புக் கட்சி (Black Panther Party for Self-Defense) 1960கள், 1970களில் இருந்த ஆப்பிரிக்க-அமெரிக்க கருப்பு தேசிய (black nationalist) அரசியல் கட்சியாகும். ஆப்பிரிக்க அமெரிக்கர்களை தற்காப்பு செய்வது, சமூக உரிமைகளை முன்னேற்றம் செய்வது இக்கட்சியின் முக்கிய நோக்கங்களாக இருந்தது. காவல்துறை கொடுஞ்செயலிலிர்நுது ஆப்பிரிக்க அமெரிக்கர்களை காப்பாற்றலும் இக்கட்சியின் ஒரு நோக்கமும் இருந்தது.

1966இல் கலிபோர்னியாவின் ஓக்லன்ட் நகரில் ஹியூயி பி. நியூட்டன் மற்றும் பாபி சீலால் தொடங்கப்பட்ட இக்கட்சி தொடக்கத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளது. இக்கட்சியின் தலைவர்கள் சமவுடமையில் நம்பிக்கை கொண்டுள்ளனர், ஆனால் இக்கட்சியின் "கருப்பு தேசியம்" மெய்யியலை சேர்ந்த உறுப்பினர்களில் சிலர் இடது சாரி, சிலர் வலது சாரியை சேர்ந்துள்ளனர்.

1967இல் "கருஞ்சிறுத்தை" என்ற இக்கட்சியின் இதழ் முதலாக வெளிவந்தது. 1968இல் இக்கட்சி கலிபோர்னியாவிலிருந்து சிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ், டென்வர், நியூயார்க் நகரம், பால்ட்டிமோர் போன்ற பல்வேறு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வாழும் நகரங்களுக்கு விரிந்தது. இக்கட்சி வளர்ந்ததுக் காரணமாக கருப்பு தேசிய மெய்யியலை விட்டு இன வேறுபாடுகளை கவனிக்காமல் சமவுடமையை மற்றும் பங்களித்துள்ளது. அமெரிக்காவின் வேறு சிறுபான்மை மக்கள் கட்சிகளுடன் சேர்ந்து இக்கட்சியின் உறுப்பினர்கள் வறுமையை குறைக்க, உடல்நலத்தை முன்னேற்ற சேவை செய்துள்ளனர்.

ஆனால் இக்கட்சியால் செய்த காவல்துறைக்கு எதிராக வன்முறை காரணமாக இக்கட்சியின் வீழ்ச்சி வந்தது. 1967 முதல் 1969 வரை இக்கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக வன்முறையில் 9 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்து 56 காயம் அடைந்தனர். இந்த பிரச்சனைகள் காரணமாக இக்கட்சி 1977இல் பிரிந்தது.