உள்ளடக்கத்துக்குச் செல்

கதிர் அடித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெற்கதிரில் இருந்து நெல்மணிகளை மனித சக்தி மூலம் பிரித்தல்
நவீன இணை அறுவடை இயந்திரம்

அறுவடை செய்யப்பட்ட நெல்லிருந்து நெல் மணிகளைப் பிரிக்கும் செயல் கதிர் அடித்தல் எனப்படுகிறது. இதனைக் கதிரடிக்கும் எந்திரத்தைக் கொண்டோ அல்லது மனிதர்களைக் கொண்டோ செய்யலாம்.

எந்திரமற்ற பாரம்பரிய மனிதச்செயல்முறையில் நெற்கட்டுகளைப் பிரித்து நெல்மணிகள் மேல்நோக்கி இருக்குமாறு களத்தில் வட்ட வடிவில் அடுக்கப்படும். அதன் மீது 2 அல்லது 3 ஜோடி எருதுகளைக் கொண்டு மிதிப்பர். இதன் மூலம் 95 சதவீத நெல் மணிகள் உதிர்ந்துவிடும். மீதம் உள்ளவை மனித சக்தி மூலம் பிரித்தெடுக்கப்படும். அதற்கு ஆடுகள் அடைக்க பயன்படும் பட்டிகள் கட்ட பயன்படுத்தப்படும். பிளந்த மூங்கில்களால் பின்னப்பட்ட "படல்கள்" பயன்படுத்தப்படும். அந்த படல்கள் 2 ஊன்றுகோல்கள் மூல சாய்வாக நிற்க வைத்து அதன் மீது நெற்பயிர்களை சிறு சிறு கத்தைகளாக ஓங்கி அடிப்பர். மீதம் ஒட்டி இருந்த நெல்மணிகளும் உதிர்ந்துவிடும். பிறகு வைக்கோலை மட்டும் எடுத்து காலி வயல்கள் அல்லது காலி இடத்தில் பரவலாக போட்டு உலர்த்துவர். பிறகு கீழே இருக்கும் நெல்களை முறங்களில் அள்ளி உயரமாக பிடித்துக் கொண்டு லேசாக அசைத்தவாறே நெல்மணிகள் கீழே விழச் செய்யப்படும். இதற்கு லேசான காற்றாவது வீசுவது தேவையாகும் . அப்போது தான் பதர்கள் காற்றில் பறந்து சற்று தூரமாக விழும். நல்ல மணிகள் மட்டும் கீழே ஓரிடத்தில் விழும். இதைப் பலர் சேர்ந்து செய்வர். நெல்லை அள்ளி வேகமாக வீசுவதன் மூலமும் இதை செய்யலாம். பிறகு உதிர்ந்த நெல் மணிகள் கோணிப்பைகளில் கட்டி சேமிக்கப்படும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "threshing". encyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 22 February 2021.
  2. Atack, Jeremy; Passell, Peter (1994). A New Economic View of American History. New York: W.W. Norton and Co. pp. detailing /neweconomicviewo00atac/page/282 282–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-96315-2.
  3. "The Bob & Diane Miller Collection - Wheat Threshing (1993)". Texas Archive of the Moving Image. பார்க்கப்பட்ட நாள் November 19, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்_அடித்தல்&oldid=4164967" இலிருந்து மீள்விக்கப்பட்டது