உள்ளடக்கத்துக்குச் செல்

ஏக்தா பியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏக்தா பியான்
தனிநபர் தகவல்
குடியுரிமைஇந்தியா
பிறப்பு7 ஜூன் 1985 (வயது 35)
வசிப்பிடம்இசார், அரியானா, இந்தியா
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
தங்கப் பதக்கம் – முதலிடம் {{{2}}} மகளிர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் {{{2}}} கலப்பு
உருட்டுத்தடி எறிதல் விளையாட்டின், உருட்டுத்தடி அளவுகள்

ஏக்தா பியான் (Ektha bhyan) இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீராங்கனையாவார். 1985 ஆம் ஆண்டு சூன் மாதம் 7 ஆம் தேதி இவர் பிறந்தார். மகளிர் உருட்டுத்தடி எறிதல் மற்றும் தட்டெறிதல் நிகழ்வுகளில் இந்தியாவிற்காகக் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.[1][2].

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற, 2018 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவிற்காக உருட்டுத்தடி வீசுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். உலக பாரா தடகளப் போட்டிகளுக்காக, 2017 ஆம் ஆண்டு இலண்டனிலும், 2019 ஆம் ஆண்டு துபாயிலும் கலந்து கொண்டார். எனவே, டோக்கியோ 2020 பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ள, இவர் தகுதி பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டில் பெர்லினிலும், 2017 ஆம் ஆண்டு துபாயிலும், 2018 ஆம் ஆண்டு துனிசியாவிலும் நடைபெற்ற, பல ஐபிசி கிராண்ட் பிரிக்சு போட்டிகளிலும், இவர் பதக்கங்களை வென்றுள்ளார். 2016, 2017, 2018 ஆகிய மூன்று தேசிய பாரா தடகள வாகைப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார். 2018ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளை மேம்பாட்டிற்கான, இந்திய தேசிய விருதையும், 2019 ஆம் ஆண்டு மகளிர் தினத்தன்று, அரியானாவின் ஆளுநரிடம், அம்மாநில விருதையும் பெற்றார். பாரா சாம்பியன்ஸ் திட்டத்தின் மூலம், கோசுபோர்ட்சு அறக்கட்டளையின் நல்கையையும் பெற்றுள்ளார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி

[தொகு]

1985ஆம் ஆண்டு, அரியானாவின் ஹிசாரில் ஓய்வுபெற்ற மாவட்ட தோட்டக்கலை அதிகாரி பால்ஜீத் பியானுக்கு, ஏக்தா பியான் பிறந்தார். அவருக்கு இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர்.[4]. 2003ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தால், இவரது முதுகெலும்பு சேதமடைந்தது. ஏக்தா. அதனால் ஒன்பது மாதங்களை மருத்துவமனையிலேயே, இரண்டு அறுவை சிகிச்சைகள் மற்றும் மறுவாழ்விற்கான கடின உழைப்பைப்பிற்குப் பின்,தன்நம்பிக்கை பெற்றார். ஹிசாரில் பட்டப்படிப்பை முடித்தார். 2011ஆம் ஆண்டில், அவர் அரியானா குடியியல் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று உதவி வேலைவாய்ப்பு அதிகாரியாக சேர்ந்தார்.[4]. 2015ஆம் ஆண்டு, தடகள வீரர் அமித் சரோஹாவை சந்தித்தார். பியானைத் தன்னைப் போலவே, ஒரு பாரா-தடகள வீரராக உருவெடுக்க ஊக்கமளித்தார் அமித். தட்டெறிதலில், பியான் பயிற்சியைத் தொடங்கினார்.[5]

தொழில்முறை சாதனைகள்

[தொகு]
  • ஏக்தா பியான், ஜூலை மாதம் பெர்லினில் நடைபெற்ற 2016 ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டி மூலம் தனது விளையாட்டு உலக வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு பியான், உருட்டுத்தடி வீசுதலில் வெள்ளி பதக்கம் பெற்றார். பின்னர், அவர் பஞ்ச்குலாவில் நடைபெற்ற, இந்திய 2016 தேசிய பாரா தடகள வாகைப்போட்டியில் போட்டியிட்டுத் தங்கப் பதக்கத்தையும், வட்டெறிதலில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
  • 2017ஆம் ஆண்டில், இரண்டாவது முறையாக இந்திய தேசிய வாகைப் போட்டியில் பங்கேற்று, இரு நிகழ்வுகளிலும் தங்கப் பதக்கதைப் பெற்றார். துபாயில் நடைபெற்ற 2017 ஐபிசி கிராண்ட் பிரிக்ஸிலும் அவர் போட்டியிட்டார். இந்த மொத்த போட்டியில், 4வது இடத்தைப் பிடித்தது மட்டுமின்றி, இரு நிகழ்வுகளிலும், புதிய ஆசிய சாதனை படைத்தார். அதே ஆண்டு, லண்டனில் நடைபெற்ற, தனது முதல் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று, பன்னாட்டு அளவில், 6ஆவது இடத்தைப் பிடித்தார். அதேப் போட்டியில், உருட்டுத்தடி எறிதல் விளையாட்டுப்போட்டியில், ஆசிய அளவில் முதல் இடத்தையும் பிடித்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Akundi, Sweta (2018-07-16). "Gold-winning para-athlete Ekta Bhyan on life and sports". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  2. "From Being Paralysed To Winning Medals At World Para Athletics GP - Ekta Bhyan Is Full Of Heart". IndiaTimes (in Indian English). 2018-07-14. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  3. "நன்னம்பிக்கை முனை: வலிகளை வெற்றியால் வென்றவர்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  4. 4.0 4.1 https://timesofindia.indiatimes.com/city/chandigarh/Before-Deepa-Ekta-Bhyan-had-made-state-proud/articleshow/54339502.cms
  5. 5.0 5.1 https://oldweb.indusind.com/content/forsports/programmes/para-champions/ekta-bhyan.html[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏக்தா_பியான்&oldid=3306808" இலிருந்து மீள்விக்கப்பட்டது