உள்ளடக்கத்துக்குச் செல்

எல்லாம் வல்ல இறைவனிடமும் (செபம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாதாரண இலத்தீன் வழிபாட்டுமுறை திருப்பலியில் மன்னிப்பு வழிபாட்டு

எல்லாம் வல்ல இறைவனிடமும் எனத்தொடங்கும் கத்தோலிக்க செபமானது திருப்பலியின் மன்னிப்பு வழிபாட்டின் போது பயன்படுத்தப்படும் மனத்துயர் செபம் ஆகும். இது பொதுவாக குருவால் துவங்கப்பட்டு இறைமக்களால் முடிக்கப்படும். தொடக்கத்தில் இவ்வகை செபங்கள் இலத்தீன் வழிபாட்டு முறையில், குருக்கள் திருப்பலிக்கு முன்னர் ஆயத்தம் செய்ய பயன்படுத்திய தனிச்செபமாகவே இருந்துவந்தது. இவை திருப்பலியின் துவக்கத்தில் செபிக்கும் முறையானது 10ம் அல்லது 11ம் நூற்றாண்டில் வழக்கில் வந்தது. ஆயினும் கிழக்கு வழிபாட்டு முறைகளில் தொடக்கத்திலிருந்தே குரு திருப்பலியின் தொடக்கத்தில் மனத்துயர் செபம் செபிப்பது வழக்கமாக இருந்தது.

செபம்

[தொகு]

ஞாயிற்றுக்கிழமை அல்லாத சாதாரண நாட்களில் பயன்படுத்தப்படும் செபவடிவம்:

எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் . என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே ஆகையால், எப்போதும் கன்னியான தூய கன்னிமரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.