எராப்ரகடா
Appearance
எராப்பிரகடா எராண்ணா (Errapragada Erranna, தெலுங்கு: ఎఱ్రాప్రగడ என்பவர் ஒரு தெலுங்குக் கவிஞர் ஆவார். இவர் புரோலயா வேமா ரெட்டியின் (1325–1353) பேரரசில் அரசவைக் கவிஞராக இருந்தவர். இவர் "பிரபந்த பரமேசுவரா" என்று புகழப்பட்டவர்.[1]
சமசுகிருத மகாபாரதத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தவர்களில் இவரும் ஒருவர்.[2] தெலுங்கில் முக்கவிகளில் இவரும் ஒருவர். மற்றவர்கள் நன்னய்யா, திக்கனா ஆகியோர் ஆவர். அரி வம்சம், இராமாயணம் ஆகியவற்றையும் மொழிபெயர்த்தார். நரசிம்ம புராணம் என்ற சொந்த நூலையும் எழுதினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vaishanava yugamu" (PDF). Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
- ↑ Errapragada (1926). Harivamsamu (in Telugu). Madras: Vavilla Ramaswamy Sastrulu and Sons. பார்க்கப்பட்ட நாள் 16 June 2020.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)