உள்ளடக்கத்துக்குச் செல்

எம்மன்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்மன்சைட்டுEmmonsite
மெக்சிகோவின் சான் மிகியூல் சுரங்கத்தில் கிடைத்த எம்மன்சைட்டு (அளவு: 6.3 x 4.1 x 1.1 செ.மீ)
பொதுவானாவை
வகைதெல்லூரைட்டு கனிமம்
வேதி வாய்பாடுFe2(TeO3)3•2(H2O)
இனங்காணல்
நிறம்மஞ்சள் பச்சை
படிக இயல்புமெல்லிய முடி போன்ற படிகங்கள், ரோசா அடுக்குகள், தெளிப்புகள்; இழை மணிகள், மேலோடுகள், கூட்டுத் தொகுதிகள் எனத் தோன்றுகிறது.
படிக அமைப்புமுச்சாய்வு
இரட்டைப் படிகமுறல்அறியப்படுகிறது
பிளப்பு{010} இல் தெளிவு; good on {100} மற்றும் {001} இல் நன்று
மோவின் அளவுகோல் வலிமை5
மிளிர்வுபளபளக்கும்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது அல்லது கசியும்
ஒப்படர்த்தி4.52–4.55
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.962 nβ = 2.090 nγ = 2.100 - 2.120
இரட்டை ஒளிவிலகல்δ = 0.138 - 0.158
பலதிசை வண்ணப்படிகமைபலவீனம்
2V கோணம்அளக்கப்பட்டது: 23°
மேற்கோள்கள்[1][2][3]

எம்மன்சைட்டு (Emmonsite) என்பது Fe2(TeO3)3•2(H2O) [1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம்|கனிமமாகும்]]. துர்தினைட்டு என்ற பெயராலும் அழைக்கப்படும் இக்கனிமம் இரும்பு தெல்லூரைட்டு கனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது. முச்சாய்வு படிகங்களாக எம்மன்சைட்டு தோன்றுகிறது. [1] பளபளப்பாகவும் மஞ்சள் பச்சை நிறத்திலும் மோவின் அளவுகோலில் 5 என்ற கடினத்தன்மை மதிப்பும் கொண்டதாக எம்மன்சைட்டு காணப்படுகிறது. [2]

மாக்டெசுமா சுரங்க எம்மன்சைட்டு கனிமம் (3 மி.மீ பிம்பம்)

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள கோச்சைசு மாகாணத்தின் டோம்ப்சுடோன் மாவட்டத்தில் 1885 ஆம் ஆண்டு எம்மன்சைட்டு முதன்முதலாக கண்டறியப்பட்டது. அமெரிக்க நில அளவாய்வுத்துறையைச் சேர்ந்த அமெரிக்க புவியியலாளர் சாமுவேல் பிராங்க்ளின் எம்மன்சு (1841-1911) நினைவாக கனிமத்திற்கு எம்மன்சைட்டு எனப் பெயரிடப்பட்டது. [1][2]

குவார்ட்சு அல்லது செருசைட்டுடன் சேர்ந்து பெரும்பாலும் அரிசோனாவின் டோம்ப்சுடோன் மாவட்டத்தில் எம்மன்சைட்டு கிடைக்கிறது. தாயகத் தெலூரியம், தெல்லூரைட்டு, தாயகத் தங்கம், பைரைட்டு, ரோதால்கியுலரைட்டு, மேக்காயைட்டு, சோனோரைட்டு, குசுட்டிசைட்டு, எசுட்லைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்த நிலையில் எம்மன்சைட்டு சேர்ந்து காணப்படுகிறது. [1]

மேற்கோள்கள்

[தொகு]

.

  • Frost, Ray L. and Dickfos, Marilla J. and Keeffe, Eloise C. (2008) "Raman spectroscopic study of the tellurite minerals: emmonsite Fe23+Te34+O9.2H2O and zemannite Mg0.5[Zn2+Fe3+(TeO3)3]4.5H2O." Journal of Raman Spectroscopy, 39(12). pp. 1784–1788. Found at Queensland University of Technology website; Accessed September 15, 2010.
  • W. F. Hillebrand, "Emmonsite (?) from a new locality," American Journal of Science, Series 4 Vol. 18, December 1904, P.433-434; எஆசு:10.2475/ajs.s4-18.108.433. Found at AJS Online; Accessed September 15, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மன்சைட்டு&oldid=2971009" இலிருந்து மீள்விக்கப்பட்டது