உள்ளடக்கத்துக்குச் செல்

உருசிய வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீவன் உருஷ்யா 11-ஆம் நூற்றாண்டில்

உருசிய வரலாறு 9ஆம் நூற்றாண்டில் துவங்குகிறது. நொவ்கொரொடு (Novgorod) என்ற நகரத்தில் வாழ்ந்த ஸ்லாவ் (Slav) இன மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த பொ.ஊ. 860-இல் வைகிங் என்ற இன மக்கள்[1] அழைத்து வரப்பட்டனர். நாளடைவில் அவர்கள் நாவ்கொராடு[2] மற்றும் கீவ் (Kiev) நகரங்களுக்கு இடையே தங்கி வாழத்தொடங்கினர்.[3] அவர்கள் வாஞ்சியன் ருஸ் (Vangian Rus) என்று அழைக்கப்பட்டமையால் அவர்கள் வாழுமிடம் உருஷ்யர்கள் நாடு என்று அழைக்கப்பட்டது.

1237-1240 ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்ற மங்கோலிய படையெடுப்புகள் காரணமாக அங்குள்ள மக்களில் பாதிபேர் இறந்தனர் மேலும் அது பல்வேறு பகுதிகளாக சிதறுண்டது. அதேசமயத்தில் அங்கு பல குழுக்களிடையே அந்நாட்டின் மரபுரிமைக்காக போராடின அவற்றுள் நொவ்கொரோட் (Novgorod), சொகோவ் (Pskov) ஆகியவை குறிப்பிடதக்கவையாகும்.

13 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் மாஸ்கோ ஒரு கலாச்சார மையமாக மாறியது. 18 ஆம் நூற்றாண்டில், ரஷ்யா ட்சார்டோம் (Tsardom) பேரரசு போலந்து , லிதுவேனிய காமன்வெல்த் இருந்து கிழக்கில் பசிபிக் பெருங்கடல் அகன்று இருந்தது. மேற்கு திசையில் அதன் விரிவாக்கம் ஐரோப்பாவில் நடந்த பிறகு அது அங்கு பிரபலமடைந்தது. 1861 இல் ரஷியாவிலிருந்து பண்ணையடிமை முறை நீக்கப்பட்டது எனினும் விவசாயிகளுக்கு சாதகமில்லாத நிபந்தனைகளை அது கொண்டிருந்தது புரட்சிக்கு வித்திட்டது. அடிமைத்தனத்தை ஒழித்ததிலிருந்து 1914 ல் முதல் உலக போர் வரையிலான காலகட்டத்தில் அங்கு பல் சீர்திருத்தங்கள் ஏற்பட்டது. 1906 ல் அதன் டுமா மாநிலம் அரசியலமைப்பு, பொருளாதாரம் மற்றும் ரஷ்ய அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தியது, எனினும் ட்சார்ஸ் (tsars) பகுதி தன் சர்வாதிகார ஆட்சியை கைவிட தயாராக இல்லை.

1917 ல் ரஷியாவின் பொருளாதார சரிவு, போர் களைப்பு , மற்றும் அரசாங்கத்தின் எதேச்சதிகார அமைப்பு மீதான அதிருப்தி காரணமாக அங்கு ஒரு புரட்சி வெடித்தது.இதன் காரணமாக 25 அக்டோபர் அன்று கம்யூனிஸ்ட் போல்ஷ்விக்குகள் தலைமையில் ஆட்சியை கைப்பற்றினர்.1922 மற்றும் 1991 க்கு இடையில் ரஷ்ய வரலாறு சோவியத் ஒன்றியத்தின் வரலாறாக மாறியது.மார்ச் 1918 ல் தொடங்கி 80 கள் வரை அங்கு கம்யூனிஸ்ட்டுகளின் ஒரு கட்சி ஆட்சியே நடைமுறையில் இருந்தது. எனினும் 1980 ஆம் ஆண்டுகளில் இறுதியில் அரசியல் கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார பலவீனங்கள், கம்யூனிஸ்ட் தலைவர்களின் சீர்திருத்தங்கள் போன்றவை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது

ரஷியன் கூட்டமைப்பு வரலாறு ஜனவரி 1992 ல் இருந்து தொடங்குகிறது இது சர்வதேச அரங்கில் சோவியத் ஒன்றியத்தின் சட்டபூர்வ வாரிசு என அறிவிக்கப்பட்டத.எனினும் ரஷ்யா சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின் அதன் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் தீவிர சவால்களை எதிர்கொள்கிறது இதன் காரணமாக அது அதன் வல்லரசு நிலையை இழந்துவிட்டது.அது சந்தை முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பொருளாதாரத்தை உருவாக்க முயற்சிக்கிறது எனினும் அது பெரும்பாலும் எதிர்பாரா விளைவுகளையே ஏற்படுத்துகிறது.இன்றும் அது தன் அரசியல் கலாச்சார மற்றும் சமூக கட்டமைப்புகளில் ட்சார்ஸ் மற்றும் சோவியத்து கூட்டமைப்புகளின் கொள்கைகளையே சார்ந்துள்ளது.

வரலாற்றுக்கு முந்தய காலம்

[தொகு]

2006 ஆம் ஆண்டு ரஷ்யாவின் வடக்கு காசசஸ் (Caucasus) மாகாணத்தின் தகெஸ்தான் அகுஷா (Dagestan Akusha) பகுதியில் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தய பழைய கற்கால கருவிகள் கனரியப்பட்டது.இது அங்கு கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.மேலும் டான் ஆற்றுப்படுக்கையின் கரைகளில் 45,000 முந்தய மனிதர்கள் வசித்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.மேலும் நியாந்தடால் மனிதஇனத்தினர் கடைசி காலகட்டங்களில் வாழ்ந்த இடங்களில் ரஷ்யாவும் ஒன்றாகும்.அங்குள்ள மெஸ்மைஸ்கயா குகை (Mezmaiskaya cave in Adygea) பகுதியில் 29000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நியாண்டர்தால் இன குழந்தையின் எலும்புகள் சில கிடைத்துள்ளது.மேலும் 2008 ஆம் ஆண்டு சைபீரியாவின் அல்டை மலைத்தொடரில் 40000 ஆன்டுக்கு முந்தய ஒரு சுண்டுவிரல் எலும்ம்னபு கிடைக்கப்பட்டது.பரிசோதனை முடிவில் அதனுடய டி.என்.ஏ இதுவரை கண்டரியப்பட்ட எந்த இனத்தொடும் பொருந்தவில்லை என அரியப்பட்டது.அதற்கு டெனிசோவா ஹோமின் (Denisova hominin) என்று பெயரிடப்பட்டது

கீயெவ் இராச்சியம்

[தொகு]

கீவன் பகுதியின் முதல் அரசர் விளாடிமர் (பொ.ஊ. 980-1015) என்பவர். இவரும் இவர்தம் குடிமக்களும் பொ.ஊ. 988-இல் கிருத்துவ மதத்தைத் தழுவினர்.[4] அதுமுதல் கிழக்குக் கிரேக்கத் திருச்சபை உருஷ்யாவின் அதிகாரம் பெற்ற திருச்சபையாயிற்று.[5] கிழக்கிலிருந்து வந்த நாடோடி இனத்தவர் பலர் கீயெவ் இராச்சியத்தைத் தாக்கினர். பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர் படையெடுத்து வந்தனர் [6] அவர்கள் கீயெவ் இராச்சியத்தைத் தாக்கி அதிக நாசம் விளைவித்தனர்.[7] பொ.ஊ. 1380-இல் மாஸ்க்கோவை ஆண்டு வந்த டிமீட்ரி (Dmitri) கூலிக்கோவோ (KuliKovo) போரில் இவர்களை வென்றார். 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாம் அய்வன் (Ivan III) மங்கோலியர் ஆதிக்கத்தை ஒழித்து ரஷ்யா முழுவதற்கும் மன்னரானார்.

நான்காம் அய்வன்

[தொகு]

மூன்றாம் அய்வன் பொ.ஊ. 1533 முதல் 1584 வரை உருஷ்யாவை ஆண்டார். சார் (Tsar) என்ற பட்டத்தை இவர் முதலில் சூடிக்கொண்டார். இவரது ஆட்சிக் காலத்தில் வால்கா ஆறு முதல் முதல் யூரல் மலைத் தொடர் வரை ரஷ்ய ஆட்சி பரவியது. ரஷ்ய எல்லைகளை (Cossacks) காஸக்குகள் என்பவர்கள் காத்தனர். போயர்கள் எனப்பட்ட நிலப்பிரபுக்கள் ஒழிக்கப்பட்டனர். நான்காம் அய்வனுக்குப்பின் உருஷ்யா குழப்பத்தில் ஆழ்ந்தது. இவர் கொடூர அய்வன் (Ivan, The terrible) என புகழ் பெற்றார்.

ரோமனாவ்

[தொகு]
The monument to Catherine II in சென் பீட்டர்ஸ்பேர்க்

பொ.ஊ. 1613-இல் ஒடுக்கப்பட்ட போயர்கள் ஒன்றிணைந்து மைக்கல் ரோமனாவ் (Michael Romanov) என்பவரை மன்னராகத் தேர்ந்தெடுத்தனர். போயர்கள் உருஷ்யாவை 300 ஆண்டுகள் ஆண்டனர். மகா பீட்டர் (Peter, The Great) பொ.ஊ. 1689-இல் சக்ரவர்த்தியானார். இவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்னும் நகரத்தை நிறுவனார். மக்களை ஐரோப்பியர் வாழ்க்கை முறையை கைக் கொள்ளச் செய்தார். மதவாதிகளின் அதிகாரத்தை ஒழித்தார். நீண்ட தாடிவைத்துக் கொள்வதைக் கண்டித்தார். உருஷ்யாவின் முன்னேற்றத்திற்காகச் உழைத்தார். ஆனால், வரலாறு இவரை மேதைமை மிக்கக் காட்டுமிராண்டியென்றே கருதுகிறது.

விவசாயிகள் புரட்சி

[தொகு]

பின்னர் 18ஆம் நூற்றாண்டில் ரஷ்யா காதரின் (Catherine II) என்ற ஒரு ஜெர்மானிய அரசகுமாரியின் ஆட்சிக்கு உள்ளானது. இவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் துன்பத்துக்கு ஆளாயினர். பெரும்பாலான வறுமை மிகுந்த உருஷ்ய விவசாயிகள் பொ.ஊ. 1770இல் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அரசு கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கியது.

மேற்கோள்

[தொகு]
  1. See, for instance, Viking (Varangian) Oleg and Viking (Varangian) Rurik at பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்.
  2. Encyclopædia Britannica: Kievan Rus
  3. Duczko, Wladyslaw (2004). Viking Rus: Studies on the Presence of Scandinavians in Eastern Europe. Koninklijke Brill NV, Leiden, The Netherlands. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-13874-9
  4. "Kievan Rus' and Mongol Periods". Sam Houston State University. Retrieved 20 July 2007.
  5. See The Christianisation of Russia, an account of Vladimir's baptism, followed by the baptism of the entire population of Kiev, as described in The Russian Primary Chronicle.
  6. Tatyana Shvetsova, The Vladimir Suzdal Principality. Retrieved 21 July 2007.
  7. Kievan Rus' and Mongol Periods, excerpted from Glenn E. Curtis (ed.), Russia: A Country Study, Department of the Army, 1998 abe lincon was also apart of that war and he knew how to save mrs.jamie from her wound. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-16-061212-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசிய_வரலாறு&oldid=3612478" இலிருந்து மீள்விக்கப்பட்டது