உட்கோள்கள் மற்றும் புறக்கோள்கள்
சூரியக் குடும்பத்தில் உட்கோள்கள் மற்றும் புறக்கோள்கள் (inferior and superior planets) என்பவை பின்வருமாறு வரையறுக்கப்படுகின்றன. கோளின் சுற்றுவட்டப் பாதை பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் இருந்தால் அக்கோள் உட்கோள் (inferior planet) என்றும் அதேபோல கோளின் சுற்றுவட்டப் பாதை பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு வெளியே இருந்தால் அக்கோள் புறக்கோள் (superior planet) என்றும் அழைக்கப்பட்டன. உண்மையாக உட்கோள் மற்றும் புறக்கோள் என்ற பெயர்கள் கிளாடியசு தாலமியின் புவிமைய அண்டவியலில் கோள்களை வேறுபடுத்தி அறிய பயன்படுத்தப்பட்டன. புதன் மற்றும் வெள்ளிக் கோள்களின் மேல்வட்டங்கள் பூமி மற்றும் சூரியனுடன் கோடொன்றி இருப்பதால் அவை உட்கோள்கள், என்றும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக் கோள்களின் மேல்வட்டங்கள் பூமி மற்றும் சூரியனுடன் கோடொன்றாமல் இருப்பதால் அவற்றை புறக்கோள்கள் என்றும் புவிமைய அண்டவியலில் வேறுபடுத்தி அறியப்பட்டன.[1]
16-ஆம் நூற்றாண்டில் கோப்பர்நிக்கசு என்பவரால் இச்சொற்கள் பொருளால் மாற்றம் பெற்றன. கோப்பர்நிகசு தாலமியின் புவிமைய மாதிரியை நிராகரித்தார். புவியின் சுற்றுப்பாதையுடன் ஒப்பிட்டு கோளின் உருவ அளவை மதிப்பிடுவதை மறுத்தார்[2].
- பூமியைக் காட்டிலும் சூரியனுக்கு அருகில் உள்ள புதன் மற்றும் வெள்ளிக் கோள்களை குறிப்பிட உட்கோள்கள் என்ற சொல்லை இவர் பயன்படுத்தினார்.
- பூமியைக் காட்டிலும் சூரியனுக்குத் தொலைவில் உள்ள செவ்வாய், வியாழன், சனி, மற்றும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனசு, நெப்டியூன் போன்ற கோள்களைக் குறிப்பிட புறக்கோள்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
சில சமயங்களில் இச்சொற்கள் மிகப் பொதுவான பொருளில் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக செவ்வாயில் இருந்து பார்க்கும்போது பூமியை ஒரு உட்கோள் என்று கூறலாம்.
உட்கோள் (inner அல்லது terrestrial planet) மற்றும் "வெளிக்கோள்" (outer planet) என்னும் பெயர்கள் தரும் பொருளில் இருந்து இந்த வகைப்பாடு வேறுபடுகிறது. சிறுகோள் பட்டைக்கு உட்பட்டவை உட்கோள்கள் என்றும் அதற்கு உட்படாதவை வெளிக்கோள்கள் என்றும் அவை வகைப்படுத்தின. உட்கோள்கள் என்பவை குறுங்கோள்கள் அல்லது சிறுகோள்கள் (minor planet) என்பனவற்றிலிருந்தும் வேறுபட்டவையாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lakatos, Imre; Worrall, John; Currie, Gregory (1980). Worrall, John; Currie, Gregory (ed.). The Methodology of Scientific Research Programmes. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-28031-1.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Kuhn, Thomas S. (1985). The Copernican Revolution: Planetary Astronomy in the Development of Western Thought (4th ed.). Harvard University Press. p. 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-17103-9.