ஈரானின் ஆட்சிப்பிரிவுகள்
ஈரான் நாட்டின் முதல் நிலை உட்பிரிவாக, மாகாணங்கள் (province, பாரசீக மொழி: استانها; ostānhā) என்ற நில ஆட்சிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாகாணமும், அடுத்து மண்டலம் (shahrestān, பாரசீக மொழி: شهرستان, romanized: shahrestān), என்று அழைக்கப்படும் நிலப்பகுதிகளாக பிரிக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு மண்டலமும், சில மாவட்டங்களாகப் (bakhsh, பாரசீக மொழி: بخش, romanized: bakhsh) பிரிக்கப் பட்டிருக்கிறது. சில நகரங்களையும் (shahr, பாரசீக மொழி: شهر, romanized: shahr), ஊரக வட்டங்களையும் (கிராமப்புற வட்டம், rural district, dehestān, பாரசீக மொழி: دهستان, romanized: dehestān) உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. ஊரக வட்டங்கள் என்பது பல ஊர்களின்/சிற்றூர்களின் தொகுப்பாகும். மண்டலத்தில் இருக்கும் சில நகரங்களில் ஒரு நகரமே, அம்மண்டலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]கீழ்காணும் புள்ளிவிவரங்கள் 2016 ஆம் ஆண்டு(ஈரானிய நாட்காட்டி 1394) அறிவிக்கப்பட்ட, ஈரானின் புள்ளியியல் நடுவத்தின் கணக்கெடுப்பின் படி,[1][2]
ஆங்கிலம் | பாரசீகக் குறியீடு. | பாரசீகம்-பன்மை. | எண் |
---|---|---|---|
ஈரானின் மாகாணங்கள் | استان ostān | استانها ostānhā | 31 |
ஈரானின் மண்டலங்கள் | شهرستان shahrestān | 429 | |
ஈரானின் மாவட்டங்கள் | بخش bakhsh | 1057 | |
ஈரானின் நகரங்கள் | شهر shahr | 1245 | |
ஊரக வட்டம்-ஊர்/சிற்றூர் | دهستان dehestān | 2589 |
தெளிவுரை
[தொகு]இத்தகைய உட்பிரிவுகளை நன்கு புரிந்து கொள்ள, பின்வரும் அட்டவணை உதவியாக இருக்கும். மா என்ற மாகாணம், இரண்டு (அ, ஆ) மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மண்டலமும், நடுவன் மாவட்டம், மாவட்டம்2, மாவட்டம்3 என மூன்று மாவட்டங்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டமும், ஒன்று அல்லது ஒருசில நகரங்களேயோ அல்லது ஊரகங்களைக்(RD=rural district) கொண்டிருக்கலாம். நடுவன் மாவட்டதில் இருக்கும் மாவட்டநகரம், அது இருக்கும் மண்டலத்தின், தலைநகரம் அமைந்து இருக்கும். ஊரகத்தில் கிராமங்களைக் கொண்டிருக்கும். பெரும்பான்மையான மண்டல அமைப்பானது, ஒரு நகரத்தை மட்டுமே உள்ளடக்கி, அப்பகுதி, நடுவ மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருக்கும்.
மாகாணம் (Province] | மண்டலம் (County) | மாவட்டம் (District) | நகரம் / ஊரக வட்டம் (Rural district) | ஊரகம் / ஊர் / சிற்றூர் |
---|---|---|---|---|
மா | அ | நடுவ மாவட்டம் | நகரம் (தலைநகரம்) | |
நகரம் | ||||
ஊரக வட்டம் | ஊர்கள் | |||
மாவட்டம்1 | நகரம் | |||
ஊரகவட்டம், நகரம் | ஊர்கள் | |||
மாவட்டம்2 | ஊரக வட்டம் | ஊர்கள் | ||
ஆ | நடுவ மாவட்டம் | நகரம் |
வரலாறு
[தொகு]1950 வரை. ஈரான் 12 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.[3] அவை அர்தலான், அசர்பைசான், பலூச்சிஸ்தான், பார்ஸ், கிலன், அராக்-எ அஜம், கொரசான், குசஸ்தான், கெர்மான், இலாரஸ்தான், லொரஸ்தான், மஜந்தரன் ஆகும். 1950-ஆம் ஆண்டு ஈரான் நாடு 10 மாகாணங்களுடனும் அதன் கீழ் ஆளுகைகளுமாய் நிர்வாகச் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அவை கிலான்; மஜந்தரன்; கிழக்கு அசர்பைசான்; மேற்கு அசர்பைசான்; கேர்மான்ஷா; குசஸ்தான்; ஃபர்ஸ்; கெர்மான்; கொரசான் மற்றும் இஸ்ஃபஹான் ஆகும். 1960-இலிருந்து 1981 வரை ஒவ்வொரு ஆளுகைகளும், மாகாணங்களாக உயர்த்தப்பட்டன. மிகச் சமீபமாக 2004ஆம் ஆண்டு மிகப்பெரிய மாகாணமான கொரசான் மாகாணத்தை மூன்று மாகாணங்களாக ஈரான் பிரித்துள்ளது. இந்த நாடு, 2016 ஆம் ஆணடு அரசின் புள்ளி விவரப்படி, 31 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களின் தலைவராக ஆளுநர் விளங்குகிறார். ஒவ்வொரு மாகாணத்தின் ஆளுநரும், ஈரானின் உள்துறை அமைச்சரால் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு நியமிக்கப்படுவார். மேற்கு அசர்பைசான் மாகாணமானது, பாலவி பேரரசு இருந்தபோது உர்மியா இரேசையே என்று வழங்கப்பட்டது. 1950-க்கும், 1979-க்கும் இடைப்பட்ட காலத்தில், கெர்மான்ஷா மாகாணமும், நகரமும், கெர்மான்ஷாஹன் என்று அழைக்கப்பட்டது. 1979-க்கும், 1995-க்கும் இடைப்பட்ட காலத்தில், அது "பக்தரான்" என்று அழைக்கப்பட்டது. சஹர் மஹல் மற்றும் பக்தியாரி மாகாணம், 1973 வரை இஸ்ஃபஹான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பூசெகர் மாகாணம், முதலில் ஃபர்ஸ் மாகணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1977 வரை, இந்த மாகாணம் கலீஜ்-ஏ-ஃபர்ஸ் என்ற பெயரால் வழங்கப்பட்டது. ஹொர்மொஸ்கான் மாகாணமானது, கெர்மான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1977 வரை, இம்மாகாணம் பனாதார் வா ஜாசயேர்-எ பாஹ்ர்-எ ஒமான் என்று வழங்கப்பட்டது. கொலெஸ்தான் மாகாணமானது, 1937 வரை கொர்கான் எசுதராபா அல்லது அசுதராபா என்று அழைக்கப்பட்டது.
மேலும் காண்க
[தொகு]- ஓஸ்டன் (புவியியல்)
- -stan
- -abad
குறிப்புகள் மற்றும் குறிப்புகள்
[தொகு]- ↑ website of the Statistical Center of Iran பரணிடப்பட்டது அக்டோபர் 26, 2007 at the வந்தவழி இயந்திரம் website in English is no longer updated (2006).
- ↑ https://www.amar.org.ir/Portals/0/Geo/GEO94-summary.pdf
- ↑ http://www.iranchamber.com/history/history_periods.php