உள்ளடக்கத்துக்குச் செல்

இலாபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணக்கீட்டில் இலாபம் (ஒலிப்பு) எனப்படுவது ஒரு பொருளின் அல்லது சேவையின் விலைக்கும் அப்பொருளுடன் அல்லது சேவையுடன் தொடர்புபட்ட அனைத்து கிரயங்களுக்கும் இடையிலான வித்தியாசம் ஆகும்.[1][2][3]

வரையறை

[தொகு]

பொது வழக்கில் பலதரப்பட்ட இலாப அளவீடுகள் உள்ளன.

மொத்த இலாபம் எனப்படுவது விற்பனை வருமானத்திலிருந்து விற்கப்பட்ட பொருளின் கிரயத்தை நீக்கினால் பெறபடுவதாகும். மேலும் மொத்தலாபமானது பொதுச் செலவீனங்கலான ஆராய்ச்சி அபிவிருத்தி செலவீனங்கள், விற்பனை சந்தைபடுத்தல் செலவீனங்கள், வட்டி, வரி போன்றவற்றையும் உள்ளடக்கயுள்ளது.

செயற்பாட்டு இலாபம் செயற்பாட்டு இலாபமானது விற்பனை வருமானத்திலிருந்து அனைத்து செயற்பாட்டு செலவுகளையும் நீக்கினால் பெறபடுவதாகும். இது வட்டி வரிக்கு முன்னரான இலாபம் எனவும் கூறப்படும்.

(தேறிய) வரிக்கு முன்னரான இலாபம் செயற்பாட்டு இலாபத்திலிருந்து வட்டிச் செலவை நீக்கினால் பெறபடுவதாகும். மேலும் இது தேறிய செயற்பாட்டு இலாபம் எனவும் கூறப்படும்.

தேறிய இலாபம் தேறிய இலாபமானது வரிக்கு பின்னான இலாபதிட்கு சமனானது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mankiw, Gregory (2013). Principles of Economics. CENGAGE Lesrning.
  2. Lipsey, 1975. pp. 285–59.
  3. LeRoy Miller, 1982.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாபம்&oldid=4140939" இலிருந்து மீள்விக்கப்பட்டது