உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2024 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல்

← 2022 21 செப்டம்பர் 2024 2029 →
பதிவு செய்த வாக்காளர்கள்17,140,354[1]
வாக்களித்தோர்79.46%[2] (4.26 சவீ)
 
வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க சஜித் பிரேமதாச
கட்சி தேசிய மக்கள் சக்தி ஐக்கிய மக்கள் சக்தி
மொத்த வாக்குகள் 5,634,915 4,363,035
விழுக்காடு 42.31% 32.76%
மொத்த வாக்குகள்[a] 5,740,179 4,530,902 '
மொத்த % 55.89% 44.11% '

 
வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க பா. அரியநேத்திரன்
கட்சி சுயேச்சை சுயேச்சை
மொத்த வாக்குகள் 2,299,767 226,343
விழுக்காடு 17.27% 1.7%


முந்தைய அரசுத்தலைவர்

ரணில் விக்கிரமசிங்க
ஐக்கிய தேசியக் கட்சி

அரசுத்தலைவர்-தெரிவு

அனுர குமார திசாநாயக்க
தேசிய மக்கள் சக்தி

2024 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் (2024 Sri Lankan presidential election) 2024 செப்டம்பர் 21 அன்று இலங்கையின் 9-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க நடைபெற்றது.[3][4] நடப்பு அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்க இத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.[5][6][7] இவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் மகன் நாமல் ராசபக்ச ஆகியோர் உட்பட மொத்தம் 38 பேர் போட்டியிட்டனர்[8]

இந்தத் தேர்தலில் விக்கிரமசிங்க, பிரேமதாச, திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் மும்முனைப் போட்டி நிலவியது. எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறாத நிலையில் முதல் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. திசாநாயக்க 42.31% வாக்குகளையும், பிரேமதாச 32.76% வாக்குகளையும் பெற்றார். நடப்பு அரசுத்தலைவர் விக்கிரமசிங்க 17.27% வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். எந்த வேட்பாளரும் 50% பெரும்பான்மையைத் தாண்டாததால், இலங்கையின் வரலாற்றில் முதல்முறையாக இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.[9] இரண்டாவது சுற்றில் 55.89% வாக்குகளைப் பெற்று அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதாக 2024 செப்டம்பர் 22 அன்று அறிவிக்கப்பட்டார்.[10][11]

இந்தத் தேர்தல் இலங்கையில் ஒரு பெரிய அரசியல் மாற்றத்தைக் குறிக்கிறது.[12] அனுர குமார திசாநாயக்கவின் வெற்றி வரலாற்றில் ஒரு மூன்றாம் தரப்பு வேட்பாளர் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட முதல் தடவையாகும்.

பின்னணி

[தொகு]

இலங்கையில் கடைசியாக 2019-ஆம் ஆண்டில் நேரடி அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது. இலங்கை பொதுசன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, சஜித் பிரேமதாசவைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார்.[13][14] 2022 இலங்கைப் போராட்டங்களுக்கு மத்தியில் 2022 சூலை 14 அன்று கோட்டாபய ராஜபக்ச தனது பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறினார்.[15] ராசபக்சவின் மீதமுள்ள ஆட்சிக் காலத்திற்கு அரசியலமைப்பின் 40-வது பிரிவின்படி நாடாளுமன்றம் வழியாக மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டதில்,[16] அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிக உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று 2022 சூலை 21 அன்று இலங்கையின் 9-ஆவது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[17][18]

1981 ஆம் ஆண்டின் அரசுத்தலைவர் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின்படி, "அரசியலமைப்புச் சட்டத்தின் 40-ஆவது பிரிவில் கூறப்பட்டபடி, அரசியலமைப்பின் 38 வது பிரிவு பத்தி (1) இன் படி அரசுத்தலைவரின் பதவி வெறுமையாக இருந்தால், நாடாளுமன்றம் அதன் உறுப்பினர் ஒருவரை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கும். அரசுத்தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியுடைய அதன் உறுப்பினர்களில், பதவியை விட்டு வெளியேறும் அரசுத்தலைவரின் பதவிக்காலம் முடிவடையாத காலத்திற்கு பதவியில் இருக்க வேண்டும்."[19][20] இதன்படி, அரசுத்தலைவர் விக்கிரமசிங்கவின் பதவிக்கால 2024 நவம்பர் 17 இல் முடிவடைகிறது.[21] 2024 சூலை 26 அன்று, தேர்தல் ஆணையம் 2024 செப்டம்பர் 21 அன்று தேர்தல் நடத்தப்படும் என்றும், வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்கள் ஆகத்து 15 இற்குள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவித்தது. அதே நாளில், ரணில் விக்கிரமசிங்க, சுயேச்சை வேட்பாளராக, இரண்டாவது முறையாக அரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார்.[22][23]

அண்மைக்கால இலங்கைத் தேர்தல் முடிவுகள்
தேர்தல்கள் இலங்கை பொதுசன முன்னணி
(SLPFA)
ஐக்கிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய கட்சிகள்
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
2019 அரசுத்தலைவர் தேர்தல் 6,924,255 52.25% 418,553 3.16% 5,564,239 41.99%[i] 345,452 2.35%
2020 நாடாளுமன்றத் தேர்தல் 6,853,690 59.09% 2,771,980 23.90% 445,958 3.84% 327,168 2.82% 249,435 2.15% 950,698 8.20%
தேர்தலுக்கு முந்தைய அரசியல் நிலவரம்
2019 அரசுத்தலைவர் தேர்தல் 2020 நாடாளுமன்றத் தேர்தல்
தேர்தல் பிரிவுகள் வாரியாக வெற்றிகள் இசுமகூ ஐமச ததேகூ இசுக ஈபிடிபி ஏனைய கட்சிகள்
தேர்தல் மாவட்டங்கள் அல்லது மாநகர வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அதிக வாக்குகள் பெற்றவர்கள்.

தேர்தல் வாக்கெடுப்பு முறை

[தொகு]

இலங்கையின் அரசுத்தலைவர் அல்லது சனாதிபதி வரையறுக்கப்பட்ட தரவரிசை வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வாக்காளர்கள் மூன்று தரவரிசை விருப்பங்களை வெளிப்படுத்தலாம். எந்த வேட்பாளரும் முதல் எண்ணிக்கையில் 50% செல்லுபடியாகும் வாக்குகளைப் பெறவில்லை என்றால், அதிக வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்களைத் தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்படுவார்கள். நீக்கப்பட்ட வேட்பாளர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகள் மீதமுள்ள இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் முழுமையான பெரும்பான்மையைப் பெறும் வரை எண்ணப்படும்.[24] நடைமுறையில், 1981 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு நேரடி அரசுத்தலைவர் தேர்தலும், அந்த நேரத்தில் இரண்டு பெரிய கட்சிகள் அல்லது கூட்டணிகளில் ஒன்றின் வேட்பாளர் முதல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றதால், இந்த முறை சிறிதளவு பயனைக் கண்டது. இந்தக் காரணத்திற்காக, பெரும்பாலான வாக்காளர்கள் ஒரே ஒரு வேட்பாளரை மட்டுமே குறிக்க தேர்வு செய்கிறார்கள், மேலும் பல வேட்பாளர்களை அவர்கள் வரிசையாகத் தெரிவு செய்யலாம் என்ற நடைமுறை பலருக்குத் தெரியாமல் உள்ளது.[25]

வேட்பாளர்கள்

[தொகு]

2024 ஆகத்து 15 அன்று வேட்பாளர் பதிவு முடிவதற்குள் தேர்தல் ஆணையம் மொத்தம் 39 விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டது, இது இலங்கையின் அரசுத்தலைவர் தேர்தலுக்கான அதிகபட்ச விண்ணப்பமாகும்.[26] இவர்களில் பெண்கள் எவரும் போட்டியிடவில்லை.[27][28]

முதன்மை வேட்பாளர்கள்

[தொகு]
வேட்பாளர் தொகுதி சின்னம்[29] ஏற்பிசைவுகள் குறிப்புகள் மேற்கோள்கள்

ரணில் விக்கிரமசிங்க (75)
சுயேச்சை
நடப்பு அரசுத்தலைவர் (2022 முதல்)
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் (1994 முதல்)
முன்னாள் பிரதமர் (1993–1994, 2001–2004, 2015–2018, 2018-2019, 2022)
எரிவாயு உருளை
  • 26 சூலை 2024 இல் அறிவிப்பு
  • முன்னதாக 1999, 2005 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.
[37]

சஜித் பிரேமதாச (57)
ஐக்கிய மக்கள் சக்தி
நடப்பு எதிர்க்கட்சித் தலைவர் (2019 முதல்)
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் (2020 முதல்)
கொழும்பு
தொலைபேசி [50]

அனுர குமார திசாநாயக்க (56)
தேசிய மக்கள் சக்தி
முன்னாள் அமைச்சர்
தேசிய மக்கள் சக்தி தலைவர் (2015 முதல்)
மக்கள் விடுதலை முன்னணி தலைவர் (2014 முதல்)
கொழும்பு
திசைகாட்டி [51]

சரத் பொன்சேகா (73)
சுயேச்சை
5-ஆவது பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவர் (2009)
முன்னாள் அமைச்சர் (2016–2018)
18-ஆவது இராணுவத் தளபதி (2005–2009)
கம்பகா
லாந்தர் [52]

விஜயதாச ராஜபக்ச (65)
தேசிய சனநாயக முன்னணி
முன்னாள் அமைச்சர்
கொழும்பு
வாகனம்
  • 25 சூலை 2024 இல் அறிவிப்பு
[53]

நாமல் ராசபக்ச (38)
இலங்கை பொதுசன முன்னணி
முன்னாள் அமைச்சர் (2020–2022)
அம்பாந்தோட்டை
மலர் மொட்டு [54]

தமிழ்ப் பொது வேட்பாளர்

[தொகு]

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ்த் தேசியக் கட்சி, சனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய ஏழு அரசியல் கட்சிகளும், தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள், கருத்துருவாக்கிகள், புத்திஜீவிகள், குடிசார் சமூகங்கள், அரசசார்பற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கிராமமட்ட அமைப்புகள், தொழில்சார் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், மாணவ அமைப்புகள் இணைந்து உருவாக்கிய தமிழ்மக்கள் பொதுச்சபையும் இணைந்த "தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு" பொது வேட்பாளர் ஒருவரை இத்தேர்தலில் களமிறக்கின.[55] 2024 ஆகத்து 8 அன்று தமிழ்ப் பொது வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான பா. அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டார்.[56] இவர் இத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். இவருக்கு சங்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.[57] இனப் படுகொலை நிகழ்ந்ததிலிருந்து இலங்கைத் தமிழ் மக்கள் உரிமையற்ற இனமாக இருப்பதாகவும், தங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்பதை உலகிற்கும், இலங்கைக்கும் வலியுறுத்துகின்ற ஒரு அடையாளத்திற்காக மாத்திரமே தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.[57] இவரது தேர்தல் அறிக்கை 2024 செப்டெம்பர் 2 அன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.[58][59]

அரசுத்தலைவர் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்தது.[60]

ஈழத்தமிழரின் முதன்மைக் கட்சியாக விளங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி 2024 அரசுத்தலைவர் தேர்தலில் தனது நிலைப்பாடு தொடர்பாக 2024 செப்டெம்பர் 1 அன்று வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் அறிவித்தது. கூட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டார்கள். கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா சுகவீனம் காரணமாக கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில், சி. வி. கே. சிவஞானம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களை கட்சியின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் அறிவித்தார். இதன்படி, பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை என்றும், அவர் உடனடியாகப் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது.[41][42][43] எனினும் பொது வேட்பாளருக்கான பரப்புரைகளில் அவருக்கு ஆதரவாகத் தமிழரசுக் கட்சியின் சிவஞானம் சிறீதரன்,[61][62] மாவை சேனாதிராஜா[63] உட்படப் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் தொகுதி சின்னம்[29] ஏற்பிசைவுகள் குறிப்புகள் மேற்கோள்கள்

பா. அரியநேத்திரன் (69)
சுயேச்சை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இதக/ததேகூ (2010–2015)[64]
மட்டக்களப்பு
சங்கு
  • 8 ஆகத்து 2024 இல் அறிவிப்பு
[56]

ஏனைய வேட்பாளர்கள்

[தொகு]

முதன்மை வேட்பாளர்கள் 7 பேர் தவிர்த்து மேலும் 32 பேர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.[65][66]

வேட்பாளர் கட்சி சின்னம்[29] குறிப்புகள்
அமரசிங்க, சிறிபாலசிறிபால அமரசிங்க சுயேச்சை டயர் முன்னாள் ஜேவிபி/ஐமசுகூ உறுப்பினர், கம்பகா.[67] 2019 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டார்.
அநுராத, சமிந்தசமிந்த அநுராத சுயேச்சை குதிரைலாடம்
பண்டாரநாயக்க, டி. எம்.டி. எம். பண்டாரநாயக்க சுயேச்சை மேசை மின்விசிறி
பண்டாரநாயக்க, பி. டபிள்யூ. எஸ். கே.பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க தேசிய அபிவிருத்தி முன்னணி தேங்காய் கல்வியாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்.[68]
போபகே, நுவான்நுவான் போபகே சோசலிச மக்கள் மன்றம் குடை 2022 போராட்ட செயற்பாட்டாளர்.[69] முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சிகளால் முன்மொழிவு.[70]
தயாரத்தன தேரர், அக்மீமனஅக்மீமன தயாரத்தன தேரர் சுயேச்சை கரும்பலகை முன்னாள் ஜாதிக எல உறுமய/ஐமசுக நா.உ, கொழும்பு.[71]
தேவகே, மகிந்தமகிந்த தேவகே சிறீ லங்கா சோசலிசக் கட்சி பலூன்
கேரத், ஒசாலஒசால கேரத் புதிய விடுதலை முன்னணி கல்லப்பட்டி புதிய விடுதலை முன்னணி தலைவர்.[72] முன்னாள் ஐதேக வேட்பாளர், கொழும்பு.[73]
இலியாசு, முகம்மதுமுகம்மது இலியாசு சுயேச்சை மருந்தூசி 2024 ஆகத்து 22 இல் இறந்தார்.[74]
இன்ஃபாசு, அபூபக்கர் முகம்மதுஅபூபக்கர் முகம்மது இன்ஃபாசு சனநாயக ஐக்கிய கூட்டணி இரட்டை இலைகள்
ஜயரத்தின, சிட்னிசிட்னி ஜயரத்தின சுயேச்சை பலாப்பழம் முன்னாள் ஐதேக/ஐதேமு நா.உ, பொலன்னறுவை.[75]
ஜயசூரிய, சிறிதுங்கசிறிதுங்க ஜயசூரிய ஐக்கிய சோசலிசக் கட்சி முச்சக்கர வண்டி 2005, 2010, 2015, 2019 அரசுத்தலைவர் தேர்தல்களில் போட்டியிட்டவர்.
ஜயவீர, திலித்திலித் ஜயவீர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் தாய்நாடு ஜனதா கட்சி.[76] சர்வசன பலய கட்சியால் முன்மொழியப்பட்டவர்.[77]
கீர்த்திரத்தின, சரத்சரத் கீர்த்திரத்தின சுயேச்சை காற்பந்து முன்னாள் துணை அமைச்சர். முன்னாள் இசுக/மகூ நா.உ, கம்பகா.[78] 2019 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டவர்.
கிசான், கே. ஆர்.கே. ஆர். கிசான் அருனலு மக்கள் முன்னணி நீர்க்குழாய்வாயில்
குலரத்தின, ஆனந்தஆனந்த குலரத்தின சுயேச்சை பதக்கம் முன்னாள் அமைச்சர். முன்னாள் ஐதேக/ஐதேமு நாஉ, அம்பாந்தோட்டை.[79]
லியனகே, ஏ. எஸ். பி.ஏ. எஸ். பி. லியனகே இலங்கை தொழிற் கட்சி கங்காரு 2010, 2015, 2019 தேர்தல்களில் போட்டியிட்டவர்.
மனமேந்திர, சரத்சரத் மனமேந்திர புதிய சிங்கள மரபுக் கட்சி அம்பும் வில்லும் 2010, 2015 (மகிந்த ராசபக்சவினால் முன்மொழிவு), 2019 தேர்தல்களில் போட்டியிட்டவர்.[80]
பெரேரா, விக்டர் அந்தனிவிக்டர் அந்தனி பெரேரா சுயேச்சை உந்துருளி முன்னாள் இசுக/ஐமசுகூ நாஉ, புத்தளம்.[81]
பியதாச, கே. கே.கே. கே. பியதாச சுயேச்சை கணிப்பான் முன்னாள் ஐதேக/ஐதேமு நாஉ, நுவரெலியா.[82]
பிரேமசிறி, எம். எம்.எம். எம். பிரேமசிறி சுயேச்சை மூக்குக்கண்ணாடி முன்னாள் ஜேவிபி/ஐமசுகூ நாஉ, மாத்தறை.[83]
ராசபக்ச, நாமல்நாமல் ராசபக்ச சமபீம கட்சி கடிதஉறை இபொசமு வேட்பாளர் நாமல் ராசபக்சவுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
ரணசிங்க, ரொசான்ரொசான் ரணசிங்க சுயேச்சை துடுப்பாட்ட மட்டை முன்னாள் அமைச்சர். இபொசமு/இமசுகூ நாஉ, பொலன்னறுவை.[84]
இரத்தினாயக்க, ஜனகஜனக இரத்தினாயக்க ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி கிண்ணம் முன்னாள் இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத் தலைவர்.[85]
சீலரத்தன தேரர், பத்தரமுல்லபத்தரமுல்ல சீலரத்தன தேரர் மக்கள் நல முன்னணி உழவியந்திரம் 2010, 2015, 2019 தேர்தல்களில் போட்டியிட்டவர்.
சில்வா, லலித் டிலலித் டி சில்வா ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி வாழைக்குலை
சில்வா, சுரஞ்சீவ அனோச் டிசுரஞ்சீவ அனோச் டி சில்வா சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி கழுகு
திலகராஜா, ம.ம. திலகராஜா சுயேச்சை பறவை இறகு முன்னாள் தேசிய தொழிலாளர் ஒன்றியம்/ஐதேமு நாஉ, நுவரெலியா.[86]
விக்கிரமசிங்க, கீர்த்திகீர்த்தி விக்கிரமசிங்க நமது மக்கள் சக்தி கட்சி கொடி
விக்கிரமசிங்க, பிரியாந்தபிரியாந்த விக்கிரமசிங்க நவ சமசமாஜக் கட்சி மேசை
விஜெசிறிவர்தன, பனிபனி விஜெசிறிவர்தன சோசலிச சமத்துவக் கட்சி கத்தரிக்கோல் 2015, 2019 தேர்தல்களில் போட்டியிட்டவர்.
சொய்சா, அஜந்தா டிஅஜந்தா டி சொய்சா உருகுணு மக்கள் கட்சி அன்னாசி முன்னாள் இசுக/மகூ தேசியப் பட்டியல் நாஉ.[87] 2019 தேர்தலில் போட்டியிட்டார் (சஜித் பிரேமதாசவினால் முன்மொழியப்பட்டவர்).[88]

அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான முக்கிய காரணமாக, போட்டியிடத் தேவையான வைப்புத்தொகையின் அளவு குறைவாக இருப்பது (கட்சி வேட்பாளர்களுக்கு ரூ. 50,000 அல்லது சுயேட்சை வேட்பாளர்களுக்கு ரூ. 75,000). 1982 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வைப்புத்தொகை பின்னர் மாற்றப்படவில்லை.[89][90] மற்றைய காரணியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரண்டு முகவர்கள், வாக்கு எண்ணும் முகவர்களை நியமித்தல், அரசுத் தொலைக்காட்சி மற்றும் பொது ஊடகங்களில் இலவச பரப்புரை போன்ற அதிகபட்சப் பலன்களைப் பெறுவதற்கு முதன்மை வேட்பாளர்களால் போடப்பட்ட பதிலி அல்லது போலி வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[91][92][93]

முடிவுகள்

[தொகு]

தேசிய வாரியாக முடிவுகள்

[தொகு]
வேட்பாளர்கட்சிமுதல் சுற்றுஇரண்டாம் சுற்று
வாக்குகள்%வாக்குகள்%
அனுர குமார திசாநாயக்கதேசிய மக்கள் சக்தி56,34,91542.3157,40,17955.89
சஜித் பிரேமதாசஐக்கிய மக்கள் சக்தி43,63,03532.7645,30,90244.11
ரணில் விக்கிரமசிங்கசுயேச்சை22,99,76717.27
நாமல் ராசபக்சஇலங்கை பொதுசன முன்னணி3,42,7812.57
பா. அரியநேத்திரன்சுயேச்சை2,26,3431.70
திலித் ஜயவீரஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி1,22,3960.92
கே. கே. பியதாசசுயேச்சை47,5430.36
டி. எம். பண்டாரநாயக்கசுயேச்சை30,6600.23
சரத் பொன்சேகாசுயேச்சை22,4070.17
விஜயதாச ராஜபக்சதேசிய சனநாயக முன்னணி21,3060.16
அநுருத்த பொல்கம்பொலசுயேச்சை15,4110.12
சரத் கீர்த்திரத்தினசுயேச்சை15,1870.11
கே. ஆர். கிரிசான்அருனலு மக்கள் முன்னணி13,5950.10
சுரஞ்சீவ அனோச் டி சில்வாசனநாயக ஐக்கிய தேசிய முன்னணி12,8980.10
பிரியந்த விக்கிரமசிங்கநவ சமசமாஜக் கட்சி12,7600.10
நாமல் ராஜபக்சசமபீம கட்சி12,7000.10
அக்மீமன தயாரத்தன தேரோசுயேச்சை11,5360.09
நுவான் போபகேசோசலிச மக்கள் அரங்கு11,1910.08
அஜந்தா டி சொய்சாருகுணு மக்கள் கட்சி10,5480.08
விக்டர் அந்தனி பெரேராசுயேச்சை10,3740.08
சிறிபால அமரசிங்கசுயேச்சை9,0350.07
சிறிதுங்க ஜெயசூரியஐக்கிய சோசலிசக் கட்சி8,9540.07
பத்தரமுல்ல சீலாரத்தன தேரோமக்கள் நல முன்னணி6,8390.05
அபூபக்கர் முகம்மது இன்ஃபாசுசனநாயக ஐக்கியக் கூட்டணி6,5310.05
பேமசிறி மானகேசுயேச்சை5,8220.04
மகிந்த தேவகேஇலங்கை சோசலிசக் கட்சி5,3380.04
கீர்த்தி விக்கிரமரத்தினநமது மக்களின் சக்தி4,6760.04
பானி விஜேசிறிவர்தனசோசலிச சமத்துவக் கட்சி4,4100.03
ஒசால கேரத்புதிய விடுதலை முன்னணி4,2530.03
ரொசான் ரணசிங்கசுயேச்சை4,2050.03
பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கதேசிய அபிவிருத்தி முன்னணி4,0700.03
ஆனந்த குலரத்தினசுயேச்சை4,0130.03
லலித் டி சில்வாஐக்கிய தேசிய விடுதலை முன்னணி3,0040.02
சிட்னி ஜெயரத்தினசுயேச்சை2,7990.02
ஜானக ரத்திநாயக்கஐக்கிய இலங்கை மக்கள் கட்சி2,4050.02
ம. திலகராஜாசுயேச்சை2,1380.02
சரத் மனமேந்திரபுதிய சிங்கள மரபு1,9110.01
ஏ. எஸ். பி. லியனகேஇலங்கை தொழிற் கட்சி1,8600.01
மொத்தம்1,33,19,616100.001,02,71,081100.00
செல்லுபடியான வாக்குகள்1,33,19,61697.80
செல்லாத/வெற்று வாக்குகள்3,00,3002.20
மொத்த வாக்குகள்1,36,19,916100.00
பதிவான வாக்குகள்1,71,40,35479.461,71,40,354
மூலம்: இலங்கைத் தேர்தல் திணைக்களம்[2] (தேர்தல் திணைக்களம்)

மாவட்ட வாரியாக முடிவுகள்

[தொகு]

முதல் சுற்று

[தொகு]
அனுர குமார திசாநாயக்க வென்ற மாவட்டங்கள்
சஜித் பிரேமதாச வென்ற மாவட்டங்கள்
மாவட்டங்கள் வாரியாக 2024 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகள்[94]
தேர்தல்
மாவட்டம்
மாகாணம் திசாநாயக்க பிரேமதாச விக்கிரமசிங்க ஏனையோர் செல்லுபடி
யானவை
நிராகரிக்
கப்பட்டவை
மொத்த
வாக்குகள்
பதிவான
வாக்காளர்கள்
%
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
அம்பாறை கிழக்கு 108,971 25.74% 200,384 47.33% 86,589 20.45% 27,453 4.22% 423,397 6,563 429,960 555,432 77.41%
அனுராதபுரம் வட மத்தி 285,944 47.37% 202,289 33.51% 82,152 13.61% 33,301 3.17% 603,686 9,782 613,468 741,862 82.69%
பதுளை ஊவா 197,283 34.68% 219,674 38.61% 115,138 20.34% 36,829 3.13% 568,924 15,519 584,443 705,772 82.81%
மட்டக்களப்பு கிழக்கு 38,832 12.19% 139,110 43.66% 91,132 28.60% 49,574 12.63% 318,648 8,876 327,524 449,686 72.83%
கொழும்பு மேற்கு 629,963 47.21% 342,108 25.64% 281,436 21.09% 80,883 4.31% 1,334,390 31,796 1,366,186 1,765,351 77.39%
காலி தெற்கு 366,721 51.45% 189,555 26.59% 107,336 15.06% 49,208 6.90% 712,820 12,541 725,361 903,163 80.31%
கம்பகா மேற்கு 809,410 55.50% 349,550 23.97% 216,028 14.81% 83,401 4.05% 1,458,389 29,381 1,487,770 1,881,129 79.09%
ஆம்பாந்தோட்டை தெற்கு 221,913 51.96% 131,503 30.79% 33,217 7.78% 40,429 9.47% 427,062 6,443 433,505 520,940 83.22%
யாழ்ப்பாணம் வடக்கு 27,086 7.29% 121,177 32.60% 84,558 22.75% 138,867 37.36% 371,688 25,353 397,041 593,187 66.93%
களுத்துறை மேற்கு 387,764 47.43% 236,307 28.91% 143,285 17.53% 50,162 4.10% 817,518 16,243 833,761 1,024,244 81.40%
கண்டி மத்தி 394,534 42.26% 323,998 34.71% 162,707 17.43% 52,277 3.13% 933,516 24,153 957,669 1,191,399 80.38%
கேகாலை சபரகமுவா 247,179 43.39% 185,930 32.64% 106,510 18.70% 30,060 2.94% 569,679 11,878 581,557 709,622 81.95%
குருணாகல் வட மேற்கு 544,763 48.20% 368,290 32.58% 146,520 12.96% 70,720 4.17% 1,130,293 19,337 1,149,630 1,417,226 81.12%
மாத்தளை மத்தி 140,544 41.37% 121,803 35.85% 53,829 15.84% 23,558 3.96% 339,734 7,921 347,655 429,991 80.85%
மாத்தறை தெற்கு 287,662 52.46% 147,462 26.89% 79,249 14.45% 33,956 4.12% 548,329 9,687 558,016 686,175 81.32%
மொனராகலை ஊவா 140,269 41.86% 134,238 40.06% 35,728 10.66% 24,847 4.60% 335,082 6,671 341,753 399,166 85.62%
நுவரெலியா மத்தி 105,057 22.17% 201,814 42.58% 138,619 29.25% 28,445 2.72% 473,935 14,643 488,578 605,292 80.72%
பொலன்னறுவை வட மத்தி 130,880 46.12% 100,730 35.49% 36,908 13.00% 15,283 5.39% 283,801 4,962 288,763 351,302 82.19%
புத்தளம் வட மேற்கு 207,134 44.06% 173,382 36.88% 60,719 12.92% 28,860 3.55% 470,095 8,279 478,374 663,673 72.08%
இரத்தினபுரி சபரகமுவா 291,708 39.32% 257,721 34.74% 145,038 19.55% 47,433 3.88% 741,900 15,070 756,970 923,736 81.95%
திருகோணமலை கிழக்கு 49,886 20.83% 120,588 50.36% 40,496 16.91% 28,491 11.90% 239,461 5,821 245,282 315,925 77.64%
வன்னி வடக்கு 21,412 9.86% 95,422 43.92% 52,573 24.20% 47,862 22.02% 217,269 9,381 226,650 306,081 74.05%
மொத்தம் 5,634,915 42.31% 4,363,035 32.76% 2,299,767 17.27% 1,021,899 7.66% 13,319,616 300,300 13,619,916 17,140,354 79.46%

வரைபடங்கள்

[தொகு]

தேர்தலுக்குப் பின்

[தொகு]

வாக்குகள் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முடிவுகளின் வலிமையைக் கருத்தில் கொண்டு அனுர குமார திசாநாயக்காவிற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.[95] கொழும்பில் நடைபெற்றுவந்த இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தேர்வுப் போட்டி தேர்தல் காரணமாக செப்டம்பர் 21 ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது. பதினாறு ஆண்டுகளில் ஒரு தேர்வுப் போட்டிக்கு ஓய்வு நாள் இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.[96]

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அர்ச டி சில்வா திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்தார். சஜித் பிரேமதாசாவை ஆதரித்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, "இன, மத பேரினவாதத்தை" நம்பாமல் திசாநாயக்க பெற்ற "பெரு வெற்றிக்கு" வாழ்த்து தெரிவித்தது.[97] ரணில் விக்கிரமசிங்கவும் திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.[98]

திசாநாயக்க தனது வெற்றிக்கு வாக்காளர்களின் "கூட்டு முயற்சி" காரணம் என்று கூறினார்.[99] திசாநாயக்க 2024 செப்டம்பர் 23 அன்று காலையில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய முன்னிலையில் அரசுத்தலைவர் செயலகத்தில் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[98] இவர் பதவியேற்க முன்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியைத் துறந்தார்.[98]

குறிப்புகள்

[தொகு]
  1. எண்ணப்பட்ட விருப்பு வாக்குகளுடன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Elections in Sri Lanka: 2024 Presidential Elections". www.ifes.org (in ஆங்கிலம்). Archived from the original on 17 September 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-09-18.
  2. 2.0 2.1 "Presidential Election Results - 2024". Election Commission of Sri Lanka. 22 September 2024. Archived from the original on 22 September 2024. பார்க்கப்பட்ட நாள் 22 September 2024.
  3. "Sri Lanka presidential election set for September 21 amid ailing economy". Al Jazeera. 26 July 2024. Archived from the original on 23 August 2024. பார்க்கப்பட்ட நாள் 25 August 2024.
  4. "Sri Lanka to hold presidential election on Sept. 21". Nikkei Asia. 26 July 2024. Archived from the original on 22 August 2024. பார்க்கப்பட்ட நாள் 25 August 2024.
  5. Husain, Jamila (8 April 2023). "Ranil to contest Presidential election, hints at poll early next year". Daily Mirror. Archived from the original on 25 February 2024. பார்க்கப்பட்ட நாள் 25 August 2024.
  6. "Presidential Election: Bonds placed for Ranil to contest as independent candidate". Ada Derana. 26 July 2024. Archived from the original on 27 July 2024. பார்க்கப்பட்ட நாள் 25 August 2024.
  7. "President Ranil Wickremesinghe officially announces candidacy for Sri Lankan presidency". Deccan Herald. PTI. 27 July 2024. Archived from the original on 8 August 2024. பார்க்கப்பட்ட நாள் 25 August 2024.
  8. Waravita, Pamodi (21 September 2024). "The Incumbent, the Marxist and the Heir: Sri Lanka's Tight Race for President". The New York Times. Archived from the original on 21 September 2024. பார்க்கப்பட்ட நாள் 21 September 2024.
  9. "Sri Lanka election result: Counting goes to historic second round". www.bbc.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 22 September 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.
  10. The Gazette Extraordinary (22 September 2024). "Presidential Election – 2024" (PDF). Department of Government Printing. Archived (PDF) from the original on 22 September 2024. பார்க்கப்பட்ட நாள் 22 September 2024.
  11. "Anura Kumara Dissanayake: Left-leaning leader wins Sri Lanka election". www.bbc.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 22 September 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.
  12. DeVotta, Neil (2024-08-28). "Sri Lanka's Potential Political Realignment". South Asian Voices (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-23.
  13. "November Lanka polls to test India's presence in southern Indian Ocean region". Dipanjan Roy Chaudhury. தி எகனாமிக் டைம்ஸ். 21 October 2019. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
  14. "Gotabaya Rajapaksa wins the election as Premadasa concedes defeat to the former". அல் ஜசீரா ஆங்கிலம். பார்க்கப்பட்ட நாள் 17 November 2019.
  15. "Sri Lanka: President Gotabaya has officially stepped down". Newsfirst. 15 July 2022. Archived from the original on 15 July 2022. பார்க்கப்பட்ட நாள் 15 July 2022.
  16. "Sri Lanka Latest: Parliament to Elect New President July 20". 12 July 2022 இம் மூலத்தில் இருந்து 11 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220711040320/https://www.bloomberg.com/news/articles/2022-07-11/sri-lanka-latest-opposition-to-cobble-all-party-government. 
  17. "Sri Lanka live news: Ranil Wickremesinghe elected president". 20 July 2022 இம் மூலத்தில் இருந்து 20 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20220720072157/https://www.aljazeera.com/news/liveblog/2022/7/20/sri-lanka-live-news-parliamentarians-to-vote-for-new-president. 
  18. "Sri Lanka gets new President: Ranil Wickremesinghe". News First. 20 July 2022. Archived from the original on 20 July 2022. பார்க்கப்பட்ட நாள் 20 July 2022.
  19. "Presidential Elections (Special Provisions) Act". LawNet. Parliament of Sri Lanka. 1981. பார்க்கப்பட்ட நாள் 17 July 2022.
  20. Zulfick Farzan (16 July 2022). "Vacant Presidency? Parliament procedure for election of President". News First. பார்க்கப்பட்ட நாள் 15 July 2022.
  21. "2024 Presidential Election to be held on September 21". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-26.
  22. "Sri Lanka presidential election set for September 21 amid ailing economy". Al Jazeera (in ஆங்கிலம்). 2024-07-26. பார்க்கப்பட்ட நாள் 2024-07-27.
  23. PTI. "President Ranil Wickremesinghe officially announces candidacy for Sri Lankan presidency". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2024-07-28.
  24. Presidential Elections Act, No 15 of 1981
  25. Gajanayake, Manjula; Siriwardana, Thusitha; Isuranga, Hirantha; Jayasinghe, Pasan (2019). "2019 Sri Lankan Presidential Election: Election Observation Report" (PDF). Centre for Monitoring Election Violence. பார்க்கப்பட்ட நாள் 21 July 2022.
  26. "39 candidates are approved for Sri Lanka's presidential election, the highest number ever". Associated Press. 2024-08-16. பார்க்கப்பட்ட நாள் 2024-08-16.
  27. Fernandopulle, Sheain (15 August 2024). "Male-dominant presidential run continues". Daily Mirror (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 15 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240815075902/https://www.dailymirror.lk/breaking-news/Male-dominant-presidential-run-continues/108-289568. 
  28. De Silva, Priyan (16 August 2024). "A male-dominated contest". The Island (Colombo, Sri Lanka). https://island.lk/a-male-dominated-contest/. 
  29. 29.0 29.1 29.2 "ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வெளியான அதிவிசேட வர்த்தமானி". Hiru News. 28 ஆகத்து 2024. https://www.hirunews.lk/tamil/380281/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF. 
  30. "Prez Poll: SLPP faction backing Ranil poised to launch new party". Ada Derana (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-08-10. பார்க்கப்பட்ட நாள் 2024-08-10.
  31. "CWC to back President Ranil in presidential poll". Ada Derana. 2024-08-18. பார்க்கப்பட்ட நாள் 2024-08-18.
  32. "SLFP Decides To Back Ranil For President". Newsfirst. 2024-07-31. பார்க்கப்பட்ட நாள் 2024-08-11.
  33. "EPDP vows to support President at September Poll". Daily News. பார்க்கப்பட்ட நாள் 2024-08-04.
  34. "Dinesh leaves Rajapaksas and supports Ranil". Newswire (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-08-01. பார்க்கப்பட்ட நாள் 2024-08-01.
  35. "34 parties and alliances sign agreement to back Ranil at prez poll". Ada Derana. 2024-08-16. பார்க்கப்பட்ட நாள் 2024-08-26.
  36. "TMVP Party Leader Pledges Support to President at the Upcoming Presidential Elections". President's Media Division (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-06-22. பார்க்கப்பட்ட நாள் 2024-08-26.
  37. "Presidential Election: Bonds placed for Ranil to contest as independent candidate". Ada Derana. 2024-07-26. பார்க்கப்பட்ட நாள் 2024-07-26.
  38. "Bathiudeen pledges support to Sajith". Daily News (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-08-15. பார்க்கப்பட்ட நாள் 2024-08-15.
  39. "Dissident Sri Lanka ruling party group to back main opposition SJB: MP". EconomyNext (in ஆங்கிலம்). 2024-07-10. பார்க்கப்பட்ட நாள் 2024-08-04.
  40. "Humane People's Alliance inks agreement with Samagi Jana Sandhanaya". Newsfirst (in ஆங்கிலம்). 2024-08-13. பார்க்கப்பட்ட நாள் 2024-08-14.
  41. 41.0 41.1 Srinivasan, Meera (2024-09-01). "Sri Lanka’s main Tamil party to back Sajith Premadasa in polls" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/international/sri-lankas-main-tamil-party-to-back-sajith-premadasa-in-polls/article68593305.ece. 
  42. 42.0 42.1 Guardian, Sri Lanka (2024-09-01). "ITAK Backs Sajith Premadasa in Presidential Race – Sri Lanka Guardian". slguardian.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-02.
  43. 43.0 43.1 "ITAK to back Sajith in presidential election" (in en). Ada Derana. 1 September 2024. https://www.adaderana.lk/news.php?nid=101653. 
  44. "Dayasiri to back Sajith in Presidential Election". Ada Derana (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-03.
  45. "SLMC to offer conditional support to Sajith in prez poll". Ada Derana (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-06.
  46. "Tamil Progressive Alliance to support Sajith in Presidential Election". Ceylon Daily News (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-08-06. பார்க்கப்பட்ட நாள் 2024-08-06.
  47. "SLFP and UPFA faction back Sajith Premadasa in Presidential Election". Daily Mirror (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-06.
  48. "Patali Champika to support Sajith in Presidential Election". Ada Derana (in ஆங்கிலம்). 2024-08-14. பார்க்கப்பட்ட நாள் 2024-08-14.
  49. "Kandura Janata Peramuna decides to support Sajith! Radhakrishnan tells in Nuwara Eliya! Join SJB alliance on the 8th!". Mawrata News (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-08-04. பார்க்கப்பட்ட நாள் 2024-08-06.
  50. "Sajith Premadasa named as SJB Presidential Candidate". Newswire (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-05-16. பார்க்கப்பட்ட நாள் 2023-05-17.
  51. "JVP on the track before race is announced". Daily Mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
  52. "Sarath Fonseka to Contest Presidential Election". Newsfirst (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-07-25. பார்க்கப்பட்ட நாள் 2024-07-26.
  53. "Sri Lanka's justice minister to run for president". EconomyNext (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-07-25. பார்க்கப்பட்ட நாள் 2024-07-26.
  54. "Namal Rajapaksa Announced As Candidate For Sri Lankan Presidency". என்டிடிவி (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-08-07. பார்க்கப்பட்ட நாள் 2024-08-07.
  55. "ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்!". Global Tamil News. 2024-06-29. பார்க்கப்பட்ட நாள் 2024-08-19.
  56. 56.0 56.1 "Some Tamil parties field common candidate". The Island. 2024-08-09. பார்க்கப்பட்ட நாள் 2024-08-09.
  57. 57.0 57.1 "இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் - மலையக தமிழர், முஸ்லிம் ஆதரவு யாருக்கு?". பிபிசி தமிழ். 2024-08-10. பார்க்கப்பட்ட நாள் 2024-08-19.
  58. "இனஅழிப்பே: தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம்!". பதிவு.கொம். 2 செப்டெம்பர் 2024. Archived from the original on 4 செப்டெம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டெம்பர் 2024.
  59. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை
  60. "தேர்தல் புறக்கணிப்பே தமிழினத்துக்குப் பலம்!". உதயன். பார்க்கப்பட்ட நாள் 2024-08-19.
  61. தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவு - சிறீதரன், வீரகேசரி
  62. தமிழர்கள் திரட்சியாக தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்: சிறீதரன் பகிரங்கக் கோரிக்கை, இலக்கு, செப்டம்பர் 17, 2024
  63. தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து மேடையேறிய மாவை, தமிழ்வின், 17 செப்டம்பர் 2024
  64. "Members of Parliament: Directory of Past Members - P. Ariyaneththiran". Sri Jayawardenepura, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  65. "Who's Running For President? Final List Of Those Who Placed Bonds". நியூஸ் பெர்ஸ்ட் (Colombo, Sri Lanka). 15 August 2024 இம் மூலத்தில் இருந்து 15 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240815234717/https://www.newsfirst.lk/2024/08/15/who-s-running-for-president-final-list-of-those-who-placed-bonds. 
  66. "EC accepts nominations of all 39 presidential candidates". Ada Derana (Colombo, Sri Lanka). 15 August 2024 இம் மூலத்தில் இருந்து 15 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240815134751/https://www.adaderana.lk/news/101257/ec-accepts-nominations-of-all-39-presidential-candidates. 
  67. "Members of Parliament: Directory of Past Members - S. Amarasinghe". Sri Jayawardenepura, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 14 November 2020. பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  68. "Department of Physics: Academic Staff - Dr. P.W.S.K. Bandaranayake". Kandy, Sri Lanka: பேராதனைப் பல்கலைக்கழகம். Archived from the original on 25 April 2024. பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  69. "Aragalaya activist Nuwan Bopage enters Presidential fray". Daily FT (Colombo, Sri Lanka). 30 July 2024 இம் மூலத்தில் இருந்து 5 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240805112719/https://www.ft.lk/front-page/Aragalaya-activist-Nuwan-Bopage-enters-Presidential-fray/44-764922. 
  70. "Aragalaya activists, political parties launch political alliance". Daily Mirror (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-08-04.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  71. "Members of Parliament: Directory of Past Members - Akmeemana Dayarathana Thero". Sri Jayawardenepura, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  72. Samaraweera, Buddhika (1 August 2024). "Prez contender accuses Ranil on public property misuse". The Morning (Colombo, Sri Lanka). https://www.themorning.lk/articles/Jz65eJMAtZXssxo5uOUd. 
  73. Perera, Yohan (28 July 2020). "EC Chairman requested not to release any more audio recordings". Daily Mirror (Colombo, Sri Lanka). https://www.dailymirror.lk/print/front-page/EC-Chairman-requested-not-to-release-any-more-audio-recordings/238-192753. 
  74. "Sri Lanka Presidential candidate Illiyas passed away". Newswire (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-08-22. பார்க்கப்பட்ட நாள் 2024-08-22.
  75. "Members of Parliament: Directory of Past Members - Anura Sidney Jayarathne". Sri Jayawardenepura, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  76. "Dilith Jayaweera signs nomination papers for Presidential election". Daily FT (Colombo, Sri Lanka). 15 August 2024 இம் மூலத்தில் இருந்து 15 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240815152324/https://www.ft.lk/news/Dilith-Jayaweera-signs-nomination-papers-for-Presidential-election/56-765578. 
  77. "Sarvajana Balaya to hold first political rally in Nugegoda today". www.ft.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-08-04.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  78. "Members of Parliament: Directory of Past Members - W. K. M. Sarath Keerthirathna". Sri Jayawardenepura, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  79. "Members of Parliament: Directory of Past Members - Kadukannage Ananda Kularatna". Sri Jayawardenepura, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  80. "Sarath Manamendra supports President Rajapaksa". Ada Derana (Colombo, Sri Lanka). 30 December 2014 இம் மூலத்தில் இருந்து 31 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141231182455/https://www.adaderana.lk/news.php?nid=29248. 
  81. "Members of Parliament: Directory of Past Members - Victor Anthony". Sri Jayawardenepura, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  82. "Members of Parliament: Directory of Past Members - K. K. Piyadasa". Sri Jayawardenepura, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  83. "Members of Parliament: Directory of Past Members - M. M. Pemasiri Manage". Sri Jayawardenepura, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  84. "Members of Parliament: Directory of Members - Roshan Ranasinghe". Sri Jayawardenepura, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 14 June 2024. பார்க்கப்பட்ட நாள் 17 August 2024.
  85. "Janaka Ratnayake places deposit for Presidential election". Daily Mirror (Colombo, Sri Lanka). 14 August 2024 இம் மூலத்தில் இருந்து 14 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240814072122/https://www.dailymirror.lk/breaking-news/Janaka-Ratnayake-places-deposit-for-Presidential-election/108-289504. 
  86. "Members of Parliament: Directory of Past Members - Mylvaganam Thilakarajah". Sri Jayawardenepura, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  87. "Members of Parliament: Directory of Past Members - Ajantha De Zoysa". Sri Jayawardenepura, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  88. "Ajantha de Zoysa endorses NDF Candidate Sajith Premadasa". நியூஸ் பெர்ஸ்ட் (Colombo, Sri Lanka). 4 November 2019 இம் மூலத்தில் இருந்து 22 July 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230722220341/https://www.newsfirst.lk/2019/11/04/ajantha-de-zoysa-endorses-ndf-candidate-sajith-premadasa/. 
  89. Kariyakarawana, Kurulu Koojana (12 August 2024). "Majority of candidates enter Prez poll for petty personal gains – independent monitors". Daily Mirror (Colombo, Sri Lanka). https://www.dailymirror.lk/print/front-page/Majority-of-candidates-enter-Prez-poll-for-petty-personal-gains-independent-monitors/238-289302. 
  90. Jayawardana, Sandun (12 December 2019). "Acting now to stop dummy candidates". The Sunday Times (Colombo, Sri Lanka). https://sundaytimes.lk/online/latest-news/acting-now-to-stop-dummy-candidates/18-1112075. 
  91. Samarawickrama, Chaturanga Pradeep (12 August 2024). "Independent candidates used as proxies in elections: Former Election Commissioner". Daily Mirror (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 15 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240815173754/https://www.dailymirror.lk/breaking-news/Independent-candidates-used-as-proxies-in-elections-Former-Election-Commissioner/108-289349. 
  92. Ferdinando, Shamindra (15 August 2024). "Rejected MPs dominate nominations". The Island (Colombo, Sri Lanka). https://island.lk/prez-polls-lawyer-asks-ec-to-reject-proxies/. 
  93. "UPFA, NDF all set for do-or-die battle on Jan. 8". The Sunday Times (Colombo, Sri Lanka). 7 December 2014 இம் மூலத்தில் இருந்து 28 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240428032946/https://www.sundaytimes.lk/141207/columns/upfa-ndf-all-set-for-do-or-die-battle-on-jan-8-131519.html. 
  94. "Sri Lanka Presidential Election 2024 Live Update". election.newswire.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  95. "Marxist-leaning Dissanayaka set to become Sri Lanka's next president". France 24 (in English). Archived from the original on 22 September 2024. பார்க்கப்பட்ட நாள் 22 September 2024.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  96. "Why does the first Sri Lanka vs New Zealand Test have a rest day, again?" (in en). இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. 20 September 2024. https://www.espncricinfo.com/story/why-does-the-first-sl-vs-nz-test-have-a-rest-day-again-1451847. 
  97. "Anura Kumara Dissanayake: Who is Sri Lanka's new president?". BBC இம் மூலத்தில் இருந்து 23 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240923003701/https://www.bbc.com/news/articles/c206l7pz5v1o. 
  98. 98.0 98.1 98.2 "Sri Lanka swears in new left-leaning president". BBC இம் மூலத்தில் இருந்து 23 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240923052137/https://www.bbc.com/news/articles/cqxr03x4dvzo. 
  99. "Marxist Dissanayake wins Sri Lanka's presidential election as voters reject old guard". Associated Press. https://apnews.com/article/sri-lanka-presidential-election-dissanayake-wickremesinghe-results-50a8990acae90fabaddd8d01c0ef5bcd.