உள்ளடக்கத்துக்குச் செல்

இரோசுமிலா பட்டாச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரோசுமிலா பட்டாச்சார்யா (Roshmila Bhattacharya) ஒர் இந்தியப் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார், இவர் தி டைம்சு குழுமத்தின் வெளியீடான மும்பை மிரரில் 2013 முதல் பணியாற்றி வருகிறார். 1980 களில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இந்துஸ்தான் டைம்ஸ், தி ஏசியன் ஏஜ், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரசு ஆகிய செய்தித்தாள்களிலும், பிலிம்பேர், இசுகிரீன் மற்றும் தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா உட்பட பல பத்திரிகைகளிலும் பணியாற்றினார். [1] இவர் பேட் மேன் மற்றும் மேட்டினி மென்: எ ஜர்னி துரூ பாலிவுட் ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார்: .

வாழ்க்கை

[தொகு]

டார்ஜீலிங் மற்றும் சில்லாங்கில் வளர்ந்த பட்டாச்சார்யாவின் தந்தை பாரத ஸ்டேட் வங்கியில் ஊழியராக இருந்தார்.. ஆரம்பகாலங்களில் ஒரு விமானப் பணிப்பெண்ணாகவோ அல்லது விண்வெளி வீரராகவோ ஆக வேண்டும் என விரும்பினார். தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியாவின் அப்போதைய ஆசிரியர் பிரிதிஷ் நந்தியை சந்தித்ததைத் தொடர்ந்து ஆறு வார பயிற்சிக்குப் பிறகு அந்தப் பத்திரிகையில் சேர்ந்தார். அந்தப் பத்திரிகையின் "இடியட் பாக்ஸ்" எனும் பகுதியில் எழுதி வந்தார். பின்னர், டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் மூன்று மாதங்கள் பணியாற்றினார், மேலும் அவரது பயிற்சி வகுப்பு முடிந்ததும்,பிலிம்பேரில் சேர்ந்தார். [2]

நடிகரும் தயாரிப்பாளருமான குல்ஷன் குரோவரின் வாழ்க்கையை விவரிக்கும் அங்கீகரிக்கப்படாத வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான பேட் மேன் மூலம் பட்டாச்சார்யா எழுத்தாளராக அறிமுகமானார். இது செகண்ட் ஹவுசு பதிப்பகத்தால் 20 சூலை 2019 அன்று வெளியிடப்பட்டது, இந்த நூல் விமர்சகர்களிடமிருந்து கலவையான கருத்துக்களைப் பெற்றது.

நூல் பட்டியல்

[தொகு]
  • பட்டாச்சார்யா, ரோசுமிலா (20 சூலை, 2019). பேட் மேன். {{cite book}}: Check date values in: |date= (help)
  • பட்டாச்சார்யா, ரோசுமிலா (10 திசம்பர், 2020). மேடினி மென்: எ ஜர்னி துரூ பாலிவுட். {{cite book}}: Check date values in: |date= (help)

சான்றுகள்

[தொகு]
  1. Pria (18 August 2019). "How the Bad Man got booked". மும்பை மிரர். https://www.pressreader.com/india/storizen-magazine/20190818/281483573028876. 
  2. Nanda, Vinta (31 December 2020). "From Bad Man to Matinee Men". பார்க்கப்பட்ட நாள் 19 April 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]