உள்ளடக்கத்துக்குச் செல்

இருமுக சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்னாட் வெப்ப இயக்க பொறி

இருமுக சுழற்சி (Dual Cycle) என்பது அழுத்த மற்றும் பரும எரிபற்றல் முன் பின்னியக்க உந்துதண்டு உள் எரி பொறியில் பயன்படும் ஒர் வெப்பஇயக்கச் சுழற்சி ஆகும். இது ஜெர்மனிய பொறியாளர் கஸ்ட்ரவ் ட்ரிங்க்லர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு மாறாத அழுத்தம் மற்றும் பருமனில் எரிதல் நிகழ்ச்சி (combustion) நடைபெறுகிறது. அதாவது வெப்ப இயக்க சுழற்சியின் போது அழுத்தம் மற்றும் பருமனை மாறிலியாக வைத்துக்கொண்டு எரிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சுழற்சியில் இரண்டு மாறா பரும மற்றும் அழுத்த நிலையில் வெப்பமாக்கல் நிகழ்வும் இரண்டு அகவெப்பமாறா நிலையில் பருமன் சுருங்குதல் மற்றும் விரிவடைதல் நிகழ்வும் நடைபெறுகிறது இதனை அழுத்த- பருமன் விளக்க படம் மூலம் எளிதாக புரிந்துகொள்ள இயலும்.[1][2]

வழிமுறை

[தொகு]
வழிமுறை 1-2 : அகவெப்பமாறா நிலையில் பருமன் அளவு சுருங்கும் நிகழ்வு
வழிமுறை 2-3 : மீளக்கூடிய மாறா பரும நிலையில் வெப்பமாக்கல் நிகழ்வு
வழிமுறை 3-4 : மீளக்கூடிய மாறா அழுத்தநிலையில் வெப்பமாக்கல் நிகழ்வு
வழிமுறை 4-5 : அகவெப்பமாறா நிலையில் பருமன் அளவு விரிவடைதல் நிகழ்வு
வழிமுறை 5-1 : மீளக்கூடிய மாறா அழுத்தநிலையில் குளிர்விக்கும் நிகழ்வு

இந்த வழிமுறையின் மூலமாக வெப்ப இயக்க பொறி இயங்குகிறது. இது வெப்ப ஆற்றலை வேலை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.

Wஉள் - என்பது வாயு சுருங்குவதன் மூலமாக உந்துதண்டினால் செய்யப்பட்ட வேலை ஆற்றல்
Qஉள் - என்பது டீசல், பெட்ரோல் அல்லது வேறு எரிபொருள் மூலமாக உருவாக்கப்பட்ட வெப்ப ஆற்றல்
Wவெளி - என்பது வாயு விரிவடைதன் மூலமாக உந்துதண்டினால் செய்யப்பட்ட வேலை ஆற்றல்
Qவெளி - என்பது மீதமுள்ள எரிபொருளின் வெப்ப ஆற்றல்
உள் என்பது உள்ளீட்டையும் வெளி என்பது வெளியீட்டையும் குறிக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lino Guzzella, Christopher Onder: Introduction to Modeling and Control of Internal Combustion Engine Systems, 2nd edition, Springer, Berlin/Heidelberg, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642107757, p. 334
  2. Г. В. Тринклер: Двигателестроение за полустолетие. Очерки современника, 2nd edition, Речной транспорт, சென் பீட்டர்சுபெர்கு, 1958, p. 32
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமுக_சுழற்சி&oldid=4133230" இலிருந்து மீள்விக்கப்பட்டது